டைட் ஜீன்ஸ்.. மாஸ் லுக்.. கலக்கும் ரம்யா... கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை : டைட்டான ஜீன்ஸ் பேண்டில் காற்று வாங்கும் மேல் ஆடையோடு கலக்கும் ரம்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள்தான் தற்போது இன்ஸ்டாகிராமில் காற்றுவாக்கில் பறந்து வருகிறது.
காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்று சொல்வதுபோல மலையில் கலக்கல் போட்டோஸ் எடுத்து ரசிகர்களின் கண்களுக்கு குழுமை காட்டி இருக்கிறார்.
திரைப்படங்களில் நடிப்பதை விடவும் ரசிகர்களின் கண்களுக்கு இந்த மாதிரி போட்டோ சூட்டுகளால் தான் எனர்ஜி ஏறுவதாக கூக்குரல் விடுகின்றனர் .

மனசையும் கவனிங்க பாஸ்
ஜிம்மிலேயே இருந்து போரடித்து விட்டதோ என்னவோ சற்று ரிலாக்ஸ் ஆக இருப்பதற்கு எதுவும் மலைவாசஸ்தலம் சென்றுவிட்டார் போல ரம்யா, அதுவும் ரிட்டையர்டு ஹீரோயின் கௌதமியோடு. என்னடா இது எதிர்பார்க்காத கூட்டணியா இருக்கு! என்று நெட்டிசன்கள் இந்தக் கூட்டணி குறித்து ஆச்சரியத்தோடு யோசித்து வருகின்றனர்.சில நாட்களாக உடலை மெயிண்டைன் பண்ணுவது குறித்த வீடியோவை மட்டுமே போட்டுக்கொண்டிருந்த ரம்யா ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடலை மெயிண்டன் பண்ணா மட்டும் போதாது,மனசையும் சற்று ரிலாக்ஸ் ஆக வைத்திருக்க வேண்டும் என்று அதற்கான வழியாக இயற்கையை ரசிப்பது தான் என நினைத்து விட்டார் போல, ஜிம்முக்கு சின்ன கேப் விட்டு இயற்கையை ரசிக்க சென்றுவிட்டார். அவர் அவுட்டிங் சென்றது கூட ஆச்சரியப்படுவதற்கில்லை ஆனால் அவருடன் எண்பதுகளில் தமிழ் சினிமாவை கலக்கிய கதாநாயகி கௌதமி இருப்பதுதான் அனைவரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது!

ஒரே ஜாலிதான் போங்க
இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் தனியாகவும் கௌதமி உடனும் இருப்பது போல் போஸ்ட் செய்துள்ள போட்டோவை பார்க்கும் பொழுது ஏதேனும் சூட்டிங் ஸ்பாட் ஆக இருக்குமோ?இருவரும் இணைந்து ஏதேனும் புது ப்ராஜெக்ட் செய்கின்றனரோ!?என்று ரம்யாவின் ரசிகர்கள் சற்று குழம்பி வருகின்றனர்.அவ்வாறு ஏதேனும் படமாகவோ? வெப்சீரியசாகவோ? இருந்தால் அது திருமணத்திற்கு பின்பு தனியே வாழும் பெண்களுக்கான விழிப்புணர்வு கதையாகத்தான் இருக்கும் என்று சில இணைய கதாசிரியர்கள் யூகித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.பாபநாசம் படத்திற்கு பிறகு எந்தப் படத்திலும் கமிட் ஆகாத கவுதமி பின்பு பிஜேபி கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். தமிழ்நாடு திரைப்பட தணிக்கை துறையிலும் பொறுப்பு வகித்து வருகிறார்.

கடந்தவை எல்லாம் கடந்தது தான்
தன் முதல் கணவருடன் விவாகரத்துக்குப் பின் சுமார் பத்து வருடமாக நடிகர் கமலஹாசனுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்துவந்த கௌதமி தன் மகளின் எதிர்கால நலனிற்காக நடிகர் கமலஹாசனை பிரிவதாக சொல்லி பிரிந்தார் தன் மகளை வளர்ப்பதற்காகவே இவ்வளவு நாள் படங்களில் நடிக்காமல் இருந்ததாகவும் தன் மகள் நன்றாக வளர்ந்து விட்டதால் இனிமேல் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தப் போவதாகவும் கௌதமி கூறிவந்தார்.மாஸ்டர் படத்திற்கு பிறகு தன் அடுத்த படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த ரம்யா தற்பொழுது கௌதமியுடன் இவர் இருக்கும் போட்டோவை பார்த்து வழக்கம்போல் இவரது ரசிகர்கள் இவரிடம் அப்டேட் கேட்டு வருகின்றனர்.பேசிக்காகவே கவுதமியும் ரம்யாவும் சிறந்த ஆடை வடிவமைப்பாளராக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து இருப்பதை பார்க்கும் பொழுது வேறு யாருடைய படத்திற்காக இணைந்தார்களா? இல்லை இவர்களாகவே இணைந்து ஏதேனும் புது படத்தை உருவாக்குகிறார்களா? என்றும் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

இந்த வார்த்தை சொல்லலாமா
வழக்கம்போல் எந்த போஸ்ட் ஆக இருந்தாலும் அதை குதர்க்கமாக கமெண்ட் பண்ணனும் இணைய சேட்டையர்கள் இந்த போஸ்ட்டை மட்டும் விடுவார்களா என்ன? டைவர்ஸ் கேசுகள் ரெண்டும் ஒன்றாய் சுற்றுகிறார்கள் என்றும் பழைய ஆண்ட்டியும் புது ஆண்ட்டியும் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்றும் குறும்பாய் கமெண்ட் செய்து வருகிறார்கள். இவர்களது ஸ்ட்ரெச்சரையும் அழகை பார்க்கும் பொழுது எப்படித்தான் ஆண்டி என்று சொல்ல மனசு வருகிறதோ என்று அவரது ரசிகர்களும் பதிலுக்கு வருத்தத்தோடு கேட்டும் வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications