என்னாது சுனிதாவுமா.. சொல்லவே இல்லை.. விறுவிறுப்பாக பரபரக்கும் பிக் பாஸ் களம்!
சென்னை: பிக் பாஸ் 5 வது சீசனில் கலந்து கொள்ளும் கண்டஸ்டன்கள் ஒவ்வொருவரின் பெயர்களும் தெரிந்து கொண்டிருக்கும் போது இந்த நிகழ்ச்சியில் சுனிதாவும் கலந்து கலந்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பே இந்த நிகழ்ச்சி இப்படித்தான் இருக்கும் என்று ரசிகர்கள் முடிவு பண்ணி விட்டார்கள் போல, சுனிதாவின் பெயரைச் சொன்னதுமே அப்போ களை கட்டி விடும் என்று ஆர்ப்பரிக்க தொடங்கிவிட்டனர்.
இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலே அனைவரையும் பாடாய் படுத்திவிட்டார். இப்போ பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ன பண்ண போகிறாரோ என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

ஐந்தாவது சீசனும் தொடங்கியாச்சு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பிடித்துவிடுகிறது. அந்த வகையில் கொஞ்சம் கூட பின்னடைவை சந்திக்காத பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து தற்போது ஐந்தாவது சீசனை ஒளிபரப்ப போகிறது. இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒவ்வொரு கண்டஸ்டன்களின் பெயர்கள் வெளியே தெரிய, ரசிகர்களின் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது. ஒரு சிலரின் பெயரைக் கேட்டதும் ஐயோ என்று ஷாக்காகும் ரசிகர்கள் ஒரு சிலரின் பெயரைக் கேட்கும்போது அப்போ என்டர்டைன்மென்ட் இருக்கு என்று சந்தோசத்தில் குதிக்கின்றனர்.

ஏதோ சம்மந்தம் இருக்கு
ஏற்கனவே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் நிறையவே பொருத்தங்கள் இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒரு சில கண்டஸ்டன்கள் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருவதும் வாடிக்கை ஆகிவிட்டது. அந்த மாதிரி தான் தற்போது இந்த சீசனிலும் இதே பாணியை கையாண்டு வருகிறார்கள். ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல கண்டஸ்டன்கள் வாழ்க்கையில் முன்னேறி போய்க்கொண்டிருக்கும் போது அந்த நிகழ்ச்சியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருந்த சுனிதாவும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைக்கப் போகிறார்.

அடடா யாரு சுனிதாவா
இவருடைய பெயரை கன்டஸ்டன்ட் லிஸ்டில் பார்த்த ரசிகர்கள் பலர் அப்போ தரமான சம்பவங்கள் இருக்கு என்று வெயிட்டிங்கில் இருந்தாலும், ஒருசில நெட்டிசன்கள் சும்மாவே இவர் ஆடுவார். இப்ப சலங்கை கட்டி விட்டாச்சா இனி கேட்கவே வேண்டாம். வெறித்தனமாக தான் இருக்கப் போகிறார். இவர கண்ட்ரோல் பண்ணவே முடியாதே என்று சிலர் புலம்பியும் வருகின்றனர். எப்படியோ விஜய் டிவியில் காலடி எடுத்து வைத்து விஜய் டிவியில் ஒரு நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் சுனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் அவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதனால்தான் ரசிகர்கள் தங்களுடைய ஃபேன்ஸ் பேஜ்களில் இவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

டான்ஸ் மட்டும் இல்ல காமெடியும் தான்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நான்காவது சீசன் மூலமாகத்தான் ஒரு டான்ஸராக சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீசனில் இவர் கான் கூட ஜோடியாக ஆடினார். டாப் போர் பைனல் லிஸ்ட் வரைக்கும் இவர்கள் ஜோடி இந்த சீசனில் வந்தது. அதற்குப் பிறகு சின்னத்திரை நடிகர் யோகேஷ் உடன் ஜோடி நம்பர் 1 சீசன் 7 இல் கலந்து கொண்டார். இந்த சீசனில் இவர்களின் ஜோடி 2-வது பரிசையும் பெற்றிருந்தது. இப்படி டான்ஸில் அறிமுகமான இவர் அதற்குப்பிறகுதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். டான்ஸ் தான் இவருக்கு தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு எனக்கு சும்மாவே காமெடி வருமே என்று தன்னுடைய டைமிங் காமெடியால் அனைவரையும் பாடாய் படுத்திக் கொண்டிருந்தார்.

பேச்சிலே கொஞ்சல்தான்
இவர் அசாம் பொண்ணாக இருந்தாலும் தற்போது தமிழை கற்றுக்கொண்டு சிறு சிறு தப்பாக தமிழை பேசினாலும், அதை பலருக்கும் ரசிக்கும் படியும் காமெடியாகவம் பேசுவது தான் இவருடைய தனிச்சிறப்பு. அதுமட்டுமல்லாமல் சில தமிழ் பாடல்களை இவருடைய திணறும் தமிழால் பாடாய்படுத்தி எடுத்திருக்கிறார். இதனை பார்த்த பலருக்கும் இவரை நன்றாகவே பிடித்துவிட்டது. இவருடைய குழந்தை தனத்தை ரசிக்கும் ரசிகர்கள் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று கேள்விப்பட்டதும் தயவு செய்து வேண்டாம் என்று கூறி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்தால் ஜாலியாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications