நினைத்தேன் வந்தாய் சீரியலில் இருந்து விலகிய கதாநாயகி.. காரணமே இதுதான்! திடீர் போஸ்ட்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "நினைத்தேன் வந்தாய்" சீரியல் கதாநாயகி ஆக நடித்துக் கொண்டிருக்கிறார். ஜாஸ்மின் இந்த சீரியலில் இருந்து விலகி இருப்பதாக செய்திகள் பரவி வரும் நிலையில் அதை அவரும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறார். அதோடு தான் சீரியலில் இருந்து விலகுவது குறித்து ஒரு பதிவும் வெளியிட்டு இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
பொதுவாக சீரியலில் இவருக்கு பதில் இவர் என்பது புதியதல்ல. பல நடிகர்களால் தொடர்ந்து சில சீரியல்களில் நடிக்க முடியாமல் போய்விடுகிறது. சீரியல்கள் பல வருடங்களாக தொடர்ந்து பயணிப்பதால் அதில் ஒரு சிலர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறி விடுகிறார்கள். அந்த மாதிரி தான் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலிலும் நடந்திருக்கிறது.

இந்த சீரியல் கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி தான் தொடங்கப்பட்டது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடிகை ஜாஸ்மின் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கதாநாயகனாக நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார். நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் பல திரைப்படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டி இருக்கிறார். இந்த சீரியலில் ஒரு பொறுப்புள்ள அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு சின்ன திரையிலும் பிரபலம் கிடைத்திருந்த நிலையில் அதை பயன்படுத்தி இப்போது சீரியல் கதாநாயகனாக மாறி இருக்கிறார். அதிலும் நினைத்தேன் வந்தாய் சீரியல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலராலும் பார்க்கப்படுகிறது. இதில் முக்கிய கேரக்டரில் நான்கு குழந்தைகள்தான் நடிக்கிறார்கள். அம்மாவை இழந்த குழந்தைகள் அம்மா பாசத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த வீட்டிற்கு சில காரணங்களால் வேலைக்கு வந்த பெண் மீது அதிகமான பாசம் வைக்கிறார்கள்.

அந்த பெண்தான் தங்களுடைய அம்மாவாக வர வேண்டும் என்று குழந்தைகள் ஆசைப்பட்டது நடக்குமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பில் இந்த சீரியல் இருக்கிறது. இந்த நிலையில் சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் ஜாஸ்மினுக்கும் அதிகமான தமிழ் ரசிகர்கள் கிடைத்து இருக்கின்றனர். ஆனால் அவர் திடீரென்று சீரியலில் இருந்து விலகி விட்டதாக செய்திகள் வெளியானது.

அவருக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை அபிராமி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அபிராமி சில நாட்களுக்கு முன்புதான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும். வீரா சீரியலில் கெஸ்ட் ரோலில் அறிமுகமானார். இந்த நிலையில் இவரது சீரியலில் நடிக்க இருக்கும் நிலையில் என்ன ஆச்சு எதனால் கதாநாயகியே சீரியலில் இருந்து விலகப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் ஜாஸ்மின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை பற்றி வெளியான ஒரு பதிவை பகிர்ந்து அதற்கு ஆமாம் நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். ஆனால் சீரியலில் இருந்து விலகுகிறேன் என்பது உண்மையில் சீரியலை விட்டு விலகுவது அல்ல. ஆனாலும் தமிழ் மக்கள் எனக்கு கொடுத்த வரவேற்பு மிகப்பெரியது. தமிழ் மக்கள் எவ்வளவு பாசத்தை காட்டுவார்கள் என்று நான் நினைக்கவில்லை.
அவர்களின் அன்புக்கு நான் தலை வணங்குகிறேன். அதுபோல இனியும் தொடர்ந்து நினைத்தேன் வந்தாய் சீரியலுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் ஜாஸ்மின் அவராகவே இந்த சீரியலில் இருந்து விலகவில்லையா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications