திருச்சிற்றம்பலத்தில் நடந்த மாற்றம்.. பிடிக்கல! சினிமாவை விட்டு விலக முடிவு! நித்யா மேனன் அதிரடி
சென்னை: நடிகை நித்யா மேனன் ஜெயம் ரவியுடன் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் பிரமோஷனில் தன்னுடைய படத்தை பற்றி பேசும்போது தான் சினிமாவில் நடிக்க விரும்பவில்லை, ஆனால் எதற்காக நடிக்கிறேன் என்று சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நித்யா மேனன் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் போன்ற தென்னிந்திய படங்களிலும் நடித்து கலக்கி வருகின்றார். அதோடு நடிப்பு ராட்சசி என்று கூட ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள் அவருடைய நடிப்பு திறமைக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் சமீபத்தில் அவருக்கு மத்திய அரசின் தேசிய விருது கிடைத்தது.

இந்த நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கான நடிகர்களின் பெயர் வரும் முதல் இடத்தில் நித்யா மேனன் பெயர் போட்டு அதற்குப் பிறகு ஜெயம்ரவியின் பெயர் போட்டு இருப்பது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கு ஜெயம் ரவி விளக்கம் கொடுத்திருந்தார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த திரைப்படத்தில் அதிக முக்கியத்துவம் இருப்பதால் நித்யா மேனன் பெயரை முதலில் போட்டு என்னுடைய பெயரை நான் தான் இரண்டாவது போட சொன்னேன் என்றும் கூறியிருந்தார்.
இப்படியான நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நித்யா மேனன் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார். அதில் எனக்கு அரசியல் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கும் கிருத்திகா உதயநிதியை பார்த்தால் ஒரு அரசியல்வாதி குடும்பத்தில் இருந்து வந்தவர் போல தெரியவில்லை.
வீட்டை விட்டு வெளியில் வந்தால் அவருடைய அடையாளம் வெறும் கிருத்திகா என்பது மட்டும்தான். அது போல நான் சின்ன வயசிலிருந்து நிறைய விஷயத்திற்கு கஷ்டப்பட்டு இருக்கிறேன். ஒருவேளை அது தான் என்னை இந்த இடத்திற்கு கூட்டிட்டு வந்ததா என்று எனக்கு தெரியவில்லை. நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை. அதனால எப்போதும் தனியாக இருக்கிற மாதிரி இருக்கும்.
அதுவே எனக்கு ஒரு விதமான மன அழுத்தத்தை கொடுத்தது. சினிமாவுல நான் எந்த கஷ்டமும் படல. வாய்ப்புகள் கூட என்னை தேடி வந்தது. எனக்கு வீட்ல அப்பா அம்மா இரண்டு பேருமே ரொம்ப சப்போட்டா இருப்பாங்க. என்னுடைய எந்த முடிவுலையும் அவங்க தலையிட மாட்டாங்க. சொல்லப்போனால் எனக்கு சினிமா சுத்தமா பிடிக்காது. இப்ப வரைக்குமே எனக்கு சினிமா பிடிக்கல.
எல்லாரும் வாழ்ற மாதிரி சாதாரண வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறேன். ஆனால் நடிகையா இருக்கிறதால அந்த வாழ்க்கை எனக்கு கிடைக்கவே இல்லை. இதை வெளியில சொல்ல முடியல. இப்படி வெளிப்படையா நான் சொன்னா சினிமாவை நான் அசிங்கப்படுத்துற மாதிரி இருக்கும். இதெல்லாம் வெளியே சொன்னா என்னம்மா இப்படி சொல்லறீங்க என்று கூட சிலர் சொல்லுவாங்க.
நான் சினிமாவுக்கு வர காரணம் ஒருவேளை எங்க அம்மாவாக இருக்கலாம். எங்க தாத்தா ரொம்ப ஸ்ட்ரீட். எங்க அம்மா தலை குனிஞ்சு தான் நடக்கணும். அப்படி கொஞ்சம் தலை நிமிர்ந்துட்டாலும் முடிஞ்சது கதை. எங்க அம்மாவுக்கு டான்ஸ் ஆடுறதுன்னா ரொம்ப பிடிக்கும். எங்க தாத்தா 14 வயசுக்கு மேல அவங்களை டான்ஸ் ஆட விடலை. அவங்க அந்த கோவத்துல அடுத்த ஜென்மத்துல நான் பெரிய டான்சரா வருவேன் என்று எல்லாம் சவால் விட்டாங்க.
அதனாலேயே என்னை டான்ஸ் கிளாஸ்க்கு எல்லாம் அனுப்புனாங்க. ஆனால் எனக்கு ஸ்டேஜ் மேல ஏற பயம். கேமரா முன்னாடி நிற்கவும் பயம். ஆனால் இப்பொழுது நான் ஒரு நடிகையா இருக்கிறேன். நான் சில நேரங்களில் சினிமாவை விட்டு போய்விடலாம் என்று நினைத்தேன்.
அந்த நேரத்தில் தான் எனக்கு எதிர்பாராத பல விஷயம் நடந்தது. அதாவது திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அந்த விருது கிடைத்த நிலையில் நம்மை சினிமா விடாது, கடவுள் நமக்கு தரும் லஞ்சம் இது என்று நினைத்து நான் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் நித்யா மேனன் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications