நடிக்கும் போது சொல்லாமலே லாரியில் இருந்து கீழே தள்ளி விட்டனர்.. அனுபவத்தை பகிர்ந்த நடிகை நித்யா
நடிகை நித்யா ரவீந்தர் லாரி திரைப்படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களை குறித்து பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை: சன் டிவியில் கண்ணான கண்ணே சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக நடிகை நித்யா ரவீந்தர் நடித்து வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என நான்கு மொழிகளில் நடிகை நித்யா ரவீந்தர் நடித்திருக்கிறார்.
தான் கதாநாயகியாக நடிக்கும் போது என்ன மாதிரி எல்லாம் நடிக்க வேண்டும் என்பதை பற்றி எங்களுக்கு விளக்கவே இல்லை என்று அதற்கான ஒரு எடுத்துக்காட்டாக லாரி திரைப்பட சூட்டிங்கின் போது நடந்த நிகழ்வுகளையும் நடிகை நித்யா பகிர்ந்து இருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
சன் டிவி, விஜய் டிவி என முன்னணி டிவி சேனல்களில் சீரியல்களில் முக்கியமான கேரக்டரில் நடிகை நித்யா ரவீந்தர் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் அவருடைய அப்பாவின் நாடக கம்பெனியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு ஒரு பாடகியாக வேண்டும் என்று ஆசையோடு இருந்த இவர்ய பல திரைப்படங்களில் குழந்தையாக அறிமுகமாகி பிறகு கதாநாயகியாக பல வருடங்கள் தொடர்ந்து நான்கு மொழிகளில் நடித்துக் கொண்டிருந்தார். அதற்கு பிறகு திருமணத்திற்கு பிறகு சிறிது பிரேக் எடுத்த நடிகை நித்தியா மீண்டும் சின்னத்திரை, வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்.

அப்போ இந்த நிலைமை இல்லை
இந்த நிலையில் நித்தியா பேட்டி ஒன்றில் தன்னுடைய திரை வாழ்க்கை பயணங்களை பற்றி பேசி இருக்கிறார். அதில் இப்ப இருக்கிற மாதிரி நிலைமை எல்லாம் எங்களுடைய காலத்தில் கிடையாது. இப்போது என்ன மாதிரி சூட்டிங் எடுக்க போகிறார்கள். அங்கு என்ன நிலைமை என்பதை எல்லாம் விளக்கி விடுகிறார்கள். முன்பு இப்படி எல்லாம் கிடையாது. அழு என்று சொன்னால் அழவேண்டும், சிரி என்று சொன்னால் சிரிக்க வேண்டும். தான் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் லாரி திரைப்படத்தில் நடித்த நினைவுகள் என்னால் மறக்க முடியாது. அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரதாப் போத்தன் தான் நடித்திருக்கிறார்.

மலையில் இருந்து குதிப்பு
லாரி திரைப்படம் மலையாளத்தில் 1980 ஆம் ஆண்டு வெளியானது. அந்த திரைப்படத்தில் வில்லன் இவரை கடத்திக்கொண்டு சென்று கற்பழிக்க முயற்சி செய்வது போன்ற ஒரு காட்சி இருக்குமாம். அப்போது பிரதாப் போத்தன் இவரை காப்பாற்றி லாரியில் கூட்டிக்கொண்டு வருவாராம். லாரியில் வரும் போது இவரும் இவர் அருகில் இன்னொரு நடிகையும் இருப்பார்களாம். அப்போது ஒரு மலை உச்சியில் வண்டி போய்க் கொண்டே இருக்கும் போது குறிப்பிட்ட இடம் வரும் போது பிரதாப் போத்தன் இவரிடம் ராணி இதில் குதி என்று சொன்னாராம். சொன்ன அடுத்த நொடி இவர் திரும்பி பார்ப்பதற்குள் உள்ளே இருந்து இவரை வெளியே தள்ளிவிட்டார்களாம். என்ன நடந்தது என்று தெரியாமல் இவர் மலையில் உருண்டு கொண்டு கீழே வந்தாராம்.

மறக்க முடியாத நினைவு
கீழே இவர் வரும் நேரத்தில் கேமரா வைக்கப்பட்டிருக்கிறதாம். இவருடைய அப்பா அங்கே கத்திக் கொண்டிருக்கிறாராம். பணத்தை வேணா தான் திருப்பித் தந்திருந்தேன். என் பொண்ண கொன்னுடுவாங்க போல இருக்கே என்று அவர் பேசுவது கேட்கிறது. ஆனால் அங்கே நடந்தது என்னவென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று அந்த நேரத்தை இப்போதும் நினைவு கூர்ந்து நடிகை வித்யா ரவீந்தர் ஃபீல் பண்ணி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் அந்த டேக் சரியாக வரவில்லை என்று மீண்டும் அதே டேக் எடுத்திருக்கிறார்கள். முதல் தடவை தனக்கு என்ன நடக்கப் போகிறது என தெரியாமலே என்னை தள்ளிவிட்ட நிலையில் மீண்டும் அதே டேக் எடுக்கும் போது இனியும் கீழே விழுந்தால் கையில் அடிபடுமே உடம்பில் அடிபடுமே என்று பயத்தோடு தான் அந்த சீனில் நடித்தேன் என்று கூறியிருக்கிறார்
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications