டாக்குமென்ட்டை தேட தேட இருட்டில் ரொமான்ஸும் பின்னுதே...!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலை கதையோடு பின்னி பிணைந்த ரொமான்ஸ் என்று சீரியல் வெகு ஜோர். நல்ல உயரமாக இருக்கும் அர்ஜுன் பார்க்க சாக்லேட் பாய் மாதிரி இருக்கான்.
குட்டியா கட்டழகுடன் இருக்கும் ரோஜா அன்று பூத்த மலர் போல ஃபிரஷா இருக்கா. இருவரும்தான் திருமணம் செய்துகொண்ட தம்பதி போல சேர்ந்து வாழறாங்க.

ஆஸ்ரமத்தில் வளர்ந்தவ ரோஜா, ஆஸ்ரமத்தை நடத்தியவர் மீது கொலைப்பழி விழ, ஆஸ்ரமம் இப்போது சீல் வைக்கப்பட்டு இருக்கு. இதே ஆஸ்ரமத்தில் வளர்ந்த அனு, அர்ஜுனின் அத்தை பொண்ணு நான்தான் என்று அர்ஜுன் வீட்டில் ஒட்டிக்கறா.
அதே போல ரோஜா யார்னு தெரிஞ்சுக்க விருப்பப்படும்போதுதான், அர்ஜுன் அவளை இரவோடு இரவாக ஆஸ்ரமத்துக்கு அழைச்சுட்டு போறான்.டாக்குமென்டை கண்டுபிடிச்சு எடுத்தறாங்க.

இவங்களை ஃபாலோ பண்ணிக்கிட்டு வந்த அனு போலீசுக்கு போன் செய்துடறா, போலீஸ் வர இவர்கள் இருவரும் கை கோர்த்து ஓட என்று ஒரு கண்ணாமூச்சி நடக்குது. அனுவும் போலீசுக்கு பயந்து ஒளிஞ்சுக்கறா.அர்ஜுன், ரோஜா இருவரும் ஒரு செடி பொந்தில் ஒளிஞ்சுக்கறாங்க.
ஓர் கான்ஸ்டபுள் தனது லத்தியால் செடியைத் தட்டி தட்டி பார்க்கறான்.ரோஜா மேல் அடிவிழும்போது, அவள் வாயை அர்ஜுன் பொத்திக்கொண்டு, அவள் மேல் விழும் அடியை தான் வாங்கிக்கறான். இப்போது அர்ஜுன் பக்கம் அடிவிழ ஆடாமல், அசையாமல், முகம் சுளிக்காமல் கூட அடியை வாங்கிக்கறான்.

ரோஜா அவனை கண்ணீரோடு பார்த்துட்டு இருக்கா. பிறகு போலீஸ் போனவுடன் எழுந்து ஓட, உடைந்த பாட்டிலில் காலை வச்சுடறா ரோஜா.. அவ்வளவுதான் ரத்தம்.. நடக்க முடியலை.அவள், வலியில் துடிக்க, ஷூவை கழட்டிவிட்டு, ரத்தத்தை துடைக்கறான் அர்ஜுன்.
அவளால் நடக்க முடியலை...அவளைத் தூக்கிக் கிட்டே காம்பவுண்ட் சுவற்றில் ஏறி, இறங்கறான். மறுபடியும் அவளைத் தூக்கிச் சென்று வண்டியில் உட்கார வச்சு வீட்டுக்கு அழைச்சுட்டு போறான்.
இதை பார்த்த அனுவின் வயிறு எரியுது...ஹூம்.. இது மாதிரி எல்லாம் நடக்க ஒரு கொடுப்பினை வேணும்னு நினைக்கறாளோ என்னவோ...!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications