OTT Apps:: லாக்டவுனில் பிரபலமான ஓடிடி இயங்கு தளங்கள்!

Subscribe to Oneindia Tamil

உலகம்: கோவிட் 19 தொற்று காரணமாக உலகெங்கும் லாக்டவுன் என்று இருந்த நிலையில், பல துறையுடன் தொடர்புடைய ஓடிடி இயங்குதளங்கள் பிரபலம் ஆகி இருக்கின்றன.... சம்பாதித்தும் வருகின்றன.

அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட் ஸ்டார், நெட்ஃபிளிக்ஸ் போன்ற பிரபல ஓடிடி இயங்கு தளங்கள் ஹாலிவுட் படங்கள் வரைகூட சென்று முதல் ரிலீஸ் செய்து காசு பார்த்து உள்ளனர்.

இதையும் விட மக்கள் மத்தியில் அதிகம் பாப்புலர் இல்லாமல் இருந்தாலும், பல ஓடிடி இயங்கு தளங்கள் சத்தம் இல்லாமல் சாதித்து, சம்பாதித்தும் இருக்கின்றன இந்த இயங்கு தளங்கள்.

 கைத் தொழில் கற்றல்

கைத் தொழில் கற்றல்

தையலில் ஆரம்பித்து ஸ்வெட்டர் பின்னுவது வரை சில ஆப்கள் ஆன்லைனில் கற்றுத் தந்து காசு சம்பாதித்து வருகின்றன.. குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைத்து வயதினரும் இந்த கலையை ஆர்வமுடன் கற்று வருகின்றனர். வீட்டில் இருப்பவர்களை வைத்து, வீட்டில் இருந்துக்கொண்டே இது போன்ற ஆப்ஸ் வருவாய் ஈட்டி வருகின்றன.

 சமையல் கலை

சமையல் கலை

சாதாரண காலங்களிலேயே சமையல் கலை யூடியூப் சானல்கள் மக்கள் மத்தில் வெகு சீக்கிரம் ரீச்சாகிவிடும். இப்போது, இவர்கள் சமையல் வகுப்புகளும் ஆன்லைனில் எடுத்து பணம் சம்பாதித்து வருகின்றனர். விதம் விதமான டிஷ் செய்து கொடுப்பதால், ஒரு வாரம், அல்லது இரண்டு வாரம் என்று இந்த ஆன்லைன் சமையல் வகுப்புக்கள் இருக்கின்றன.

 சங்கீதம் பாட்டு நடனம்

சங்கீதம் பாட்டு நடனம்

சில வீடுகளில் குழந்தைகள் சங்கீதம் கற்றுக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று கருதி, ஆன்லைனில் சங்கீதம் கற்றுக்கொள்ள வழி வகை செய்து தருகின்றனர். சில பரத நாட்டிய டீச்சர்.. குழந்தைகளுக்கு ஸ்கைபில் டான்ஸ் கற்றுத் தருவது என்பது ஏற்கனவே இருந்தாலும், இப்போது அதிக குழந்தைகள் சேர்ந்துள்ளனர் என்றும் கூறுகிறார்கள்.

 யோகா உடற்பயிற்சி

யோகா உடற்பயிற்சி

என்னதான் லாக்டவுன் என்று இப்போது வீட்டில் இருந்தாலும் யோகா குரு, உடற்பயிற்சி மாஸ்டர்களுக்கும் ஏக மவுசு. புதிதாக இதை செய்யத் துவங்குபவர்கள் மாஸ்டர் அல்லது குருவின் ஆலோசனைப்படி, அவர்களது முன்னிலையில்தான் செய்து பழக வேண்டும் என்பதால், ஆன்லைனில் இவர்கள் எடுக்கும் வகுப்புகளுக்கும் மவுசு கூடி இருக்கிறது. இவர்கள் இதன் மூலம் லாக்டவுன் நேரத்தில் நன்றாகவே பணம் சம்பாதித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+