சூப்பர் ஸ்டார் கதையில் “நஸ்ரியா”.. ஓடிடியில் வரப்போகும் மாஸ் திரைப்படம்.. உண்மை சம்பவ கதை
சென்னை: பிரபல ஓடிடி நிறுவனமான சோனி லைவ் சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமா உலகின் முதல் சூப்பர் ஸ்டார் வாழ்க்கையை புரட்டி போட்ட ஒரு கொலை வழக்கை இணைய தொடராக தயாரிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
அந்தத் தொடரில் நடிக்கவிருக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அப்டேட்களை தற்பொழுது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

"த மெட்ராஸ் மர்டர்" என பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரை சூரிய பிரதாப் இயக்குவதாகவும், பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்ற போவதாக அறிவித்திருந்த தயாரிப்பு நிறுவனம் சாந்தனு மற்றும் நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாகவும் அறிவித்துள்ளது.
சினிமாவில் பிரபல நடிகையாக மார்க்கெட் உச்சத்தில் இருந்த பொழுதே திடீரென்று நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து சினிமாவை விட்டு ஒதுங்கினார் நஸ்ரியா.ஒரு சில படங்களில் மட்டுமே அவ்வப்போது தலையைக் காட்டி வந்த நஸ்ரியா நேரடியாக தமிழ் இணைய தொடரில் நடிக்க இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி நஸ்ரியா ரசிகர்களுக்கு குஷியை கொடுத்திருக்கிறது.
முதன் முதலாக வெப் சீரிஸில் நடிக்க இருக்கும் நஸ்ரியாவை வாழ்த்தியும் வரவேற்றும் கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஒரு பெரும் பஞ்சாயத்து நடந்து வருகிறது இந்த காலத்தில்.ஆனால் அந்த காலத்தில் போட்டியே இல்லாமல் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்தவர் தியாகராஜ பாகவதர் ஆவார்.
அந்த சமயத்தில் பிரபலங்களைப் பற்றி கிசுகிசுக்களையும் வதந்திகளையும் எழுதி வந்த மஞ்ச பத்திரிகை என அழைக்கப்பட்ட பிரபலமே இல்லாத ஒரு பத்திரிக்கை ஆசிரியர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதர் குற்றவழியாக சேர்க்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு தான் சம்பாதித்த பெயரையும் சொத்துக்களையும் இழந்து இறுதியில் கஷ்டப்பட்டு இறந்தார். அந்த லட்சுமி காந்தன் கொலை வழக்கு சம்பவம் தான் தற்பொழுது த மெட்ராஸ் மர்டர் என வெப்சீரிசாக உருவாக இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் மற்றும் அந்த நேரத்தில் தமிழ் சினிமாவின் சாப்ளின் என்று அழைக்கப்பட்ட என்.எஸ்.கே போன்ற முக்கிய பிரபலங்கள் சம்பந்தப்பட்ட இந்த கொலை வழக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் விசாரிக்கப்பட்ட கடைசி வழக்கு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications