Pa. Ranjith: அடக்குமுறை! விஜய் டிவியில் நடந்த சம்பவம்! சூப்பர் சிங்கர் சரண் பற்றி பா ரஞ்சித் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் பா ரஞ்சித் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் சரண் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார் தற்போது பல டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுவதால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் பா ரஞ்சித் பேசியிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் சமூக அரசியலை மையமாகக் கொண்டு தனித்துவமான திரைப்படங்களை இயக்கி வருபவர் இயக்குநர் பா. ரஞ்சித். 'அட்டகத்தி' மூலம் அறிமுகமான இவர், 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா', 'சார்பட்டா பரம்பரை' போன்ற படங்களின் மூலம் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை நேரடியாக பேசும் இயக்குநராக அடையாளம் பெற்றுள்ளார். திரை உலகத்தில் மட்டுமல்லாமல், பொது மேடைகளிலும் சமூக அநீதி, சாதி ஒடுக்குமுறை குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருபவர் பா. ரஞ்சித்.

Pa Ranjith Super Singer vijay tv

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய பா. ரஞ்சித், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல பாடல் போட்டி நிகழ்ச்சியான 'சூப்பர் சிங்கர்' குறித்து முக்கியமான கருத்துகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக, அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வரும் சரண் என்ற இளைஞரை எடுத்துக்காட்டாக கொண்டு, ஊடகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பற்றி பேசினார்.

பா. ரஞ்சித் பேசும்போது,"சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வந்த சரண் தம்பி, தான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், அந்த சமூக அடையாளத்தின் காரணமாக பல்வேறு ஒடுக்குமுறைகளை சந்தித்து, கடுமையாக போராடி இந்த நிலைக்கு வந்ததாக வெளிப்படையாக பேசுகிறார். இதுவே பத்து வருடங்களுக்கு முன்பு நடந்திருந்தால், இப்படிப் பேசிய அந்த பகுதியை டிவி நிகழ்ச்சியில் இருந்து வெட்டியிருப்பார்கள்" என்று கூறினார்.

மேலும் அவர், "இன்றைக்கு அந்த நிலை மாறியுள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் தங்களது வாழ்க்கை அனுபவங்களை மேடைகளில் பேசக்கூடிய ஒரு சூழல் உருவாகியுள்ளது. இது ஒரு மிகப்பெரிய மாற்றம். ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதால், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு சில வணிக ரீதியான பலன்கள் இருக்கலாம். ஆனால் அதைவிட முக்கியமானது, மக்கள் 'இவர் யார்', 'எங்கிருந்து வந்தவர்', 'எப்படிப்பட்ட வாழ்க்கையை கடந்து வந்தவர்' என்பதை அறிந்து கொள்வதே" என ரஞ்சித் விளக்கினார்.

சூப்பர் சிங்கர் சரண் குறித்து பேசும்போது, அவர் தனது பாடல் திறமையால் மட்டுமல்லாமல், தனது வாழ்க்கை போராட்டங்களை நேர்மையாக பகிர்ந்துகொள்வதன் மூலம் பலருக்கு நம்பிக்கையளிக்கும் முகமாக மாறியுள்ளார் எனவும் பா. ரஞ்சித் குறிப்பிட்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள், தங்களது குரலை வெளிப்படுத்தக் கூடிய மேடைகள் இன்று அதிகரித்து வருவது ஆரோக்கியமான சமூக மாற்றத்தின் அடையாளம் என்றும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+