Pandavar Illam: ஆரம்பிச்சாச்சுய்யா.. புதுஸ்ஸா... முதல் நாளே கத்தியோடு வந்த ரேவதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடங்கியாச்சுங்க.. பழைய சீரியல்களின் புதிய எபிசோடுகள். புதுப்பொலிவோடு சன் டிவியில் சீரியல்கள் இன்றிலிருந்து ஒளிபரப்பப்படுகிறது பாண்டவர் இல்லம் சீரியல்.

பழைய கதையை தொடர்ந்து புதிய எபிசோடு இன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் பொங்கல் வைத்து மங்களகரமாக ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்.

பாண்டவர் இல்லம் சீரியல் சன் டிவியில் முக்கியமான சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது.

இந்த சீரியல் கிராமத்து கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. பெரிய சுந்தரம் மற்றும் அவரது ஐந்து பேரன்கள் அவர்களின் மனைவிமார்களை சுற்றி இந்த சீரியல் இருக்கிறது.


ஐந்து பெண்கள்

ஐந்து பெண்கள்

ஐந்து பேரன்களில் கடைக்குட்டி சுந்தரம், அவரது மனைவி கயல். இவர் நகர குத்துச்சண்டை வீரராக இருந்தாலும் இந்த வீட்டில் குட்டி சுந்தரத்தை தீவிரமாக காதலித்து பல போராட்டங்களுக்கு பிறகு திருமணம் செய்து அந்த வீட்டிற்குள் கடைசி மருமகள் முதல் மருமகளாக அந்த வீட்டுக்குள் நுழைகிறார். அதனைத் தொடர்ந்து கயலின் தோழி மல்லிகாவும் அன்பு சுந்தரத்தை காதலித்து திருமணம் செய்து வீட்டிற்குள் வருகிறார்.

சிலம்பாட்டத்தில் தோல்வி

சிலம்பாட்டத்தில் தோல்வி

இவர்கள் இருவரும் அந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது தான் மூத்த பேரனான ராஜசுந்தரம் திருமணமே வேண்டாம் என்று வெறுத்து இருக்கும் நிலையில் அவருக்கும் திருமணத்தை செய்து வைக்க வேண்டும் என்று இரண்டு மருமகள்களும் ஐடியா பண்ணி அதுல தான் ஒரு சிலம்பாட்டத்தில் தோல்வியுற்று ரேவதியை ராஜசுந்தரம் திருமணம் செய்கிறார்.

சண்ட ஆரம்பம்

சண்ட ஆரம்பம்

வீட்டின் மூத்த மருமகளாக காலடி எடுத்து வைத்த பிறகு தான் வீட்டிற்குள் பிரச்சனைகளும் சண்டைகளும் ஆரம்பிக்கிறது. இதுக்கு முன்னாடி எடுத்த எபிசோடுகள் முடிவடைந்ததால் அதிலிருந்தே கண்டினியூ பண்ணி புதுசா எபிசோடுகள் எடுத்திருக்கிறார்கள். இன்று பொங்கல் வைத்து ரேவதியின் மனசு மாறி வீட்டில் நல்லபடியாக நிம்மதியோடு வாழ வேண்டுமென்று கயலும் மல்லிகாவும் கும்பிடுகிறார்கள்.

தேனு சுட்டிப் பெண்

தேனு சுட்டிப் பெண்

இதில் கயலின் தங்கச்சியான தேனு ரொம்ப சுட்டி பொண்ணா இருக்கிறதுனால ரேவதிக்கு கொஞ்சம் கூட பிடிக்கல. அவளை வீட்டைவிட்டு வெளியில் போக சொல்லி எவ்வளவோ பிரச்சனை பண்ணியும் தேனு வீட்டைவிட்டு போகாததால் தேனு மேல ரேவதி கொலைவெறியில் இருக்காங்க. லாக் டவுன் முன்னாடி ரேவதியை தேனு கன்னத்தில் பளாரென்று ஒன்று போட்டிருப்பார். அதனால அத மனசுல வச்சுக்கிட்டு இன்னைக்கு ரேவதி தேனை தேடி மாடிக்கு வராங்க அங்கே தேனு ஹாயாக உட்கார்ந்து போன நோண்டிட்டு இருக்குது.

ரேவதி கையில் கத்தி

ரேவதி கையில் கத்தி

ரேவதி தேனை நோக்கி கத்தியோடு போயிட்டு இருக்குது. கயலும் மல்லிகாவும் ஒளிஞ்சிருந்து பாத்துக்கிட்டு இருக்காங்க. முதலில் மல்லிகா ரேவதியை பார்த்து பயந்தாலும் கயல் கூலாக சொல்கிறார். பயப்படாத தேனுக்கு கராத்தே தெரியும். ரேவதி தான் என்ன பாடு படப் போறாங்கன்னு தெரியல என்று சொல்லி சிரிக்கிறார்கள்.

ரேவதியின் வில்லத்தனம்

ரேவதியின் வில்லத்தனம்

ரேவதி தனக்கே உரிய வில்ல தனத்தோடு தேனை பார்த்து நான் இந்த கத்தியால் உன்னை குத்தி கொன்னுடுவேன் என்று பயப்படுத்துகிறாள் . நான் உன்னை கொல்ல மாட்டேன் என் எதிரியை அழிக்கனும்னா என்னையே கூட அழிச்சிக்குவேன் என்று வீர வசனம் பேசுகிறார். அதைப்பார்த்து தேனும் கூலாக தாராளமாக உங்களை நீங்களே அழித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அதற்கு ரேவதியும் நான் என்னை வெட்டி கிட்டா அதுக்கு காரணம் நீ தான் என்று சொல்லுவேன்.

வீடியோ எடுத்துட்டேனே

வீடியோ எடுத்துட்டேனே

நீதான் என் கையை வெட்டிட்டேன்னு சொல்லி பயமுறுத்தப் பார்க்கிறார். ஆனால் தேனு நீங்க இவ்வள நேரம் என் கிட்ட பேசினது எல்லாம் நான் வீடியோ எடுத்து வச்சிருக்கேன் என்று சொல்லி அவரை தெறிக்க விடுகிறார்கள். ரேவதி அரண்டு போய் இருக்கிறார். அதோடு விடவில்லை தேனு தாத்தாவுடன் இணைந்து வெத்தலை போட்டு விட்டு மறுபடியும் ரேவதியை வம்பு இருக்கிறார்.

நாளைக்குத்தான் தெரியும்

நாளைக்குத்தான் தெரியும்

முதலில் குட்டி சுந்தரத்தை என்ன வேலை பாக்குறீங்க அப்படின்னு ஆரம்பிச்சு கடைசியா ரேவதி கிட்ட வந்து முடிச்சு வச்சிருக்கார். ரேவதி தான் அந்த வீட்டில் வேலையைச் செய்யாமல் இருக்காங்கன்னு சொல்லி அவருக்கு வேலை வைத்திருக்கிறார். நாளையிலிருந்து சீக்கிரமா முழிச்சி வாசல் தெளித்து கோலம் போடுவது தான் ரேவதியின் வேலையாகும் இதைக் கேட்டதும் ஷாக்காகி ரேவதி முறைச்சு பார்க்கிறார்.... நாளைக்கு தான் தெரியும் என்ன நடக்குதுன்னு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+