பாக்கியலட்சுமி சீரியலில் அறிமுகமாகும் “புது முல்லை”.. இனி அமிர்தாவுக்கு பிரச்சனை இவரால் தானா?

:பாக்கியலட்சுமி சீரியலில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக நடிக்கும் லாவண்யா அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் ஆபீசில் புது காரெக்டரில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்கும் லாவண்யா அறிமுகமாக இருக்கிறார்.

ஏற்கனவே லாவண்யா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் கர்ப்பமாக இருப்பதாக நடித்து வரும் நிலையில் இந்த சீரியலில் புது கேரக்டரில் அறிமுகமாக இருக்கிறார்.

எழில் மற்றும் அமிர்தாவின் திருமணம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இனி அடுத்ததாக லாவண்யாவால் பிரச்சனை ஏற்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிரச்சனைக்கு பஞ்சமில்லை

பிரச்சனைக்கு பஞ்சமில்லை

பாக்கியலட்சுமி சீரியலுக்கும் பிரச்சனைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலில் அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து கொண்டும் அதை பாக்கியா தீர்த்து அதில் வெற்றி பெறுவதும் தான் இந்த சீரியலின் கதையாக இருந்து வருகிறது. ஒரு குடும்பப் பெண் தன்னுடைய, அங்கீகாரத்தையும் மரியாதையும் நிலைநாட்டிக் கொள்வதற்காக படும் துயரத்தை பற்றியதாக இந்த சீரியல் இருந்து வரும் நிலையில் வீட்டில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் ஒரே நபராக பாக்கியலட்சுமி இருந்து வருகிறார்.

எழில் திருமணம்

எழில் திருமணம்

ஒவ்வொரு வாரமும் அடுத்தடுத்து புது புது பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது தான் எழில் மற்றும் அமிர்தாவின் திருமணத்தை பெரும் பஞ்சாயத்துக்கு இடையே பாக்கியலட்சுமி நடத்தி முடித்து இருந்தார். வீட்டில் ஈஸ்வரி மற்றும் செழியன் என பலருடைய எதிர்ப்பையும் மீறி பாக்யா தைரியமாக எழில் திருமணத்தை நடத்தி வைத்திருந்த நிலையில் இப்போதும் அந்த பஞ்சாயத்து இன்னும் முடிவடையாமல் இருக்கிறது.

கோபியோடு சவால்

கோபியோடு சவால்

அதுமட்டுமல்லாமல் கோபி இந்த வீட்டிற்கு இன்னும் எனக்கு 20 லட்சம் தந்தால் தான் நான் இந்த வீட்டை அப்பா அல்லது அம்மாவின் பெயருக்கு எழுதிய தருவேன் இல்லை என்றால் இந்த வீட்டை நான் விற்று விடுவேன் என்று மிரட்டி இருக்கும் நிலையில் மீதம் 20 லட்சம் தொகையை நான் தந்து விடுவேன் என்று பாக்கியா சவால் விட்டிருக்கும் நிலையில் தொடர்ச்சியாக மண்டபத்தில் 8 நாட்கள் சமையல் ஆர்டர் செய்து தற்போது 2 லட்சம் ரூபாய் கோபிக்கு கொடுத்திருக்கிறார்.

அடுத்த பிரச்சனை ரெடி

அடுத்த பிரச்சனை ரெடி

இந்த நிலையில் அடுத்ததாக ராதிகாவின் ஆபீஸில் மீண்டும் கேண்டீன் ஆர்டருக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் பாக்கியாவிற்கு அடுத்த பிரச்சனை இனி வர தொடங்கி இருக்கிறது. அதாவது எழில் ஏற்கனவே ஒரு டிவி சேனலில் வேலை கிடைத்திருக்கிறது என்று அனைவரிடமும் கூறி இருக்கிறார். அதே இடத்தில் அவரோடு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புதியதாக முல்லை கேரக்டரில் நடித்து வரும் லாவண்யாவும் அறிமுகம் ஆகிறார். அதனால் இனி என்ன மாதிரி பிரச்சனை வரப்போகிறது என்று எதிர்பார்ப்பு ஒரு பக்கம் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் ஏற்கனவே படம் பண்ண போகிறேன் என்று அங்கே வர்ஷினி எழில் மீது ஆசைப்பட்டு பிரச்சனை செய்த நிலையில் அதே நிலை தான் இங்கேயும் நடக்குமா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+