வளைகாப்பு பற்றிய பேச்சு..முல்லையை அவமானப்படுத்திய மூர்த்தி..இனி முடியாது என்ற ஜீவா..அடுத்த பிரச்சனை!
சென்னை: முல்லைக்கு வளைகாப்பு பண்ண வேண்டும் என்று முல்லை அம்மா பார்வதி குடும்பத்தினரிடம் பேசுகிறார்.
தன்னைக் கோவிலில் விரோதியாக பார்த்தார் என்று ஜீவா ஒரு பக்கமும் மூர்த்தி ஒரு பக்கமும் மாறி மாறி குற்றம் சுமத்துகின்றனர்.
முல்லையின் வளைகாப்பில் குடும்பம் சேர்ந்து விடும் என்று தனம் நம்பிக் கொண்டிருக்கிறார்.

மூர்த்தியின் கம்பளைண்ட்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஏப்ரல் 11ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் கோவிலில் இருந்து காரில் மூர்த்தி குடும்பத்தினர் கிளம்பி கொண்டிருக்கின்றனர். அப்போது தனம் மூர்த்தியிடம் கோவிலில் உங்க தம்பிய தான பாத்தீங்க. ஒரு வார்த்தை பேசினா என்ன? என்று கேட்க, அவன் என்னை அண்ணன் மாதிரியா பார்த்தான். அவன் என்னை எதிரி மாதிரி பார்த்தான். எப்படி முறைச்சிகிட்டு கோவமா என்னை பார்க்கிறான் என்று கூறுகிறார்.
அவமானப்படுத்தும் மூர்த்தி: அதற்கு அப்படியெல்லாம் அண்ணன் பாக்கலை. அந்த கண்ணுல அப்படி ஒரு பார்வை தெரியலை என்று கதிர் சொல்ல, நீ எப்பவும் அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவா என்று மூர்த்தி கதிரை திட்ட, அதற்கு இல்ல மாமா கண்டிப்பா நான் சொல்றேன் உங்க தம்பி எப்பவும் உங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவார் என்று முல்லை சொல்ல, என்னை விட உனக்கு கதிரை ரொம்ப தெரியுமோ? என்று மூர்த்தி கேட்க, ஆமாம் என்று சொல்ல, சரி என்ன விட உங்களுக்கே நிறைய தெரிஞ்சா தான் இருக்கட்டும் என்று மூர்த்தி முல்லையை அவமானப்படுத்துகிறார்.

ஜீவாவின் கோபம்: பிறகு வீட்டிற்கு வந்த ஜீவா கோவிலில் எல்லாரும் வருவாங்கன்னு எனக்கு தெரியாது. ஆனால் அங்க மூர்த்தி அண்ணன் என்னையே பார்த்து முறைச்சுக்கிட்டு விரோதி மாதிரி பார்த்துகிட்டு இருந்தாரு என்று சொல்ல, மீனா நீ பேசி இருக்கலாமே என்று கேட்க, ஏற்கனவே அவமானப்பட்டது போதாதா? இனி என்னால் அப்படி அவமானப்பட முடியாது என்று பதில் கூறி விடுகிறார்.
முல்லையின் வளைகாப்பு: அடுத்ததாக முல்லை வீட்டிற்கு அவருடைய அம்மா வருகிறார். முல்லைக்கு 7 மாதம் ஆகிவிட்டது. அதனால் வளைகாப்பு செய்ய வேண்டும் என்று முல்லை அம்மா கூற அதற்கு இவ்வளவு சீக்கிரமாக செய்ய வேண்டுமா என்று கதிர் கேட்க, ஆமாம் இங்க ஏற்கனவே பல பிரச்சனை இருக்குது. அதனால ஒரு நல்ல விசேஷம் நடந்தா தான் நல்லா இருக்கும் என்று சொல்ல, அதற்கு தனமும் ஆமாம் இதுதான் சரி அப்பதான் பிரிஞ்ச குடும்பம் எல்லாம் ஒன்னு சேரும் என்று கூறுகிறார்.

அட்வான்ஸ் கொடுத்தாச்சு: அடுத்ததாக மண்டபத்திற்கு இனி அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்று மூர்த்தி கூறுகிறார். அப்போது முல்லையின் அப்பா மீண்டும் வீட்டிற்கு வருகிறார். எப்போதும் போல நலம் விசாரித்துக் கொண்டு பிறகு தான் மண்டபத்திற்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டேன் என்று கூறுகிறார். பிறகு நான் சிம்பலாக வளைகாப்பு வைக்க மாட்டேன். ரொம்பவே கிராண்டாக வளைகாப்பு வைக்க போறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். எல்லோரும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications