மூர்த்தியால் ஜீவாவை அவமானம் செய்த கண்ணன்... குழந்தையோடு மீனாவின் அப்பா வீட்டிற்கு சென்ற ஜீவா
ஜீவாவிடம் மூர்த்தி கல்லாப்பெட்டி சாவியை கொடுக்கிறார்.
சென்னை: மீனாவிடம் ஜீவா நீயாவது என்னை புரிந்து கொள் என்று கண் கலங்கி அழுகிறார்.
எதிர்த்து பேசியதால் இனி வீட்டில் அனைத்து செலவுகளையும் நீயே பார்த்துக் கொள் என்று கல்லாப்பெட்டி சாவியை ஜீவாவிடம் மூர்த்தி கொடுக்கிறார்.
தான் எதிர்த்து பேசியது தவறு என்று மூர்த்தியிடம் ஜீவா மன்னிப்பு கேட்க கண்ணன் ஜீவாவை அவமானப்படுத்துகிறார்.

கதறி அழும் ஜீவா
பாண்டியன் ஸ்டோர் சீரியலின் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் சமாதானம் செய்வதற்காக வந்த மீனாவிடம் ஜீவா நீயாவது என்னை புரிந்துகொள். மீனா எனக்குன்னு யாருமே இல்லாத மாதிரி இருக்கு. எல்லாரும் என்னையே திட்டுறாங்க. என்னோட நிலைமையை யாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க என்று சொல்லி அழுகிறார். பிறகு நான் வெளியில் சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். மீனா அங்கே நின்று கொண்டு இருக்க, கதிர் அண்ணன் எங்கே என்று கேட்க அவர் வெளியில் போய்விட்டார் என்று அவர் பேசிய வார்த்தைகளை சொல்கிறார்.

மீனாவை திட்டும் ஜீவா
பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் வீட்டிற்கு ஜீவா வருகிறார். மீனா அவரிடம் சென்று சாப்பிடுறியா? என கேட்க, வேணாம் என சொல்கிறார். பிறகு எனக்கு தூக்கம் வரலை. நான் இங்கேயே படுத்துகிறேன் என்று வெளியில் படுத்து கொள்கிறார். மீனா ஜீவாவின் கையைப் பிடித்து வா என்று கூற வேண்டாம் என கத்துகிறார். அதனால் நீ நான் சோகமாக வீட்டிற்குள் சென்று விட, தனம் நான் போய் பேசுகிறேன் என்று கூற வேண்டாம் என்று மீனா தனத்தை தடுத்து விடுகிறார்.

சாவியை கொடுக்கும் மூர்த்தி
பிறகு வீட்டிற்கு வெளியே தனியாக படுத்து இருக்கும் ஜீவா அருகில் கதிரும் வெளியில் படுத்து உறங்குகிறார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தி அடுத்த நாள் காலையில் ஜீவா எங்கே என கேட்கிறார். பிறகு கல்லாப்பெட்டி சாவியை ஜீவாவிடம் கொடுத்து என்னை வீட்டில் அனைத்து செலவுகளையும் நீயே பார்த்துக்கொள் என்று சொல்ல, ஜீவா மூர்த்தியிடம் மன்னிப்பு கேட்கிறார். நான் அதிகமாக கத்தி பேசிட்டேன். என்னை மன்னிச்சிருங்க நான் நீங்க ஒரு காரணத்தோடு தான் அப்படி பேசி இருப்பீங்க என்று சொல்கிறார்.

அவமானப்படுத்தும் கண்ணன்
அருகில் இருந்த கண்ணன் அப்போ அண்ணன் நானும் ஒரு நாள் கடைக்கு வந்து கடையில் வியாபாரம் பார்த்து பணத்தை உள்ள போட பார்க்கும்போது, அங்கே கல்லாப்பெட்டி பூட்டி இருந்தால் நானும் இதே போல கத்தினால் எனக்கும் சாவியை தூக்கி தந்து விடுவீர்களா? என்று கேட்க, அதற்கு ஐஸ்வர்யா நீ எல்லாம் அப்படி செஞ்சா தர மாட்டாங்க என்று சொல்கிறார். முல்லை இவர்கள் இருவரையும் திட்டுகிறார். எந்த நேரத்தில் நீங்கள் காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்களா? இது எல்லாம் பேசுற பேச்சா? இது இப்போதைக்கு தேவையா? என்று திட்டுகிறார்.

வீட்டை விட்டு கிளம்பிய ஜீவா
அடுத்ததாக மீனாவும் ஜீவாவும் குழந்தையோடு மீனாவின் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கே மீனாவின் அம்மா இவர்களை வரவேற்று வீட்டிற்குள் கூட்டி செல்கிறார். பிறகு மீனாவின் அப்பா நீங்க ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்து இங்க தங்கி இருக்கணும். ஆனா சரி நீங்க இன்னைக்காவது வந்தீங்களே! நாளைக்கு மத்தவங்க மாதிரி வராமல் என்று சமாதானப்பட்டு கொண்டு, நீங்க மட்டும் தான் வந்து இருக்கீங்க. வீட்டில் உள்ளவங்க வரலையா? என்று கேட்கிறார். அதற்கு ஜீவா மற்றும் மீனாவின் முகம் மாறுகிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications