கதிரை அடித்து அவமானப்படுத்திய ஜீவா... ஜனார்த்தனன் செய்த சூழ்ச்சி... மீனா கேட்ட ஒற்றை கேள்வி
குடிக்க வேண்டாம் என்று சொன்ன கதிரை ஜீவா அவமானப்படுத்துகிறார்.
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கல்யாண வீட்டிற்கு வந்த ஜீவா தன்னுடைய குடும்பத்தை கண்டு கொள்ளாமல் அவர்களை அலட்சியப்படுத்துகிறார்.
கண்ணன் அண்ணன் தம்பி அனைவரும் ஒன்றாக சேர்ந்து போட்டோ எடுப்போம் என்று கூப்பிட ஜீவா விலகிப் போகிறார்.
ஜீவாவிடம் மூர்த்தியை பற்றி ஜனார்த்தனன் அவர் செய்தது எல்லாம் சொல்லி கோபத்தை ஏத்தி விடுகிறார்.

மாமனாருக்கு சந்தோசம் தான்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மார்ச் 17ஆம் தேதிக்கான எபிசொட்டின் ஆரம்பத்தில் கல்யாண வீட்டில் ஜீவா மாமனார் ரோடு சேர்ந்து குடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அருகில் இருக்கும் பிரசாந்த் நானும் குடிக்க போகிறேன் என்று சொல்ல, நீ குடிக்கக்கூடாது நாளை காலை திருமணம் அப்போது முகம் வீங்கி போய் இருக்கும். அதனால் வேண்டாம் என்று சொல்ல அண்ணன் பேச்சுக்கு மறுபேச்சி கிடையாது என்று பிரசாந்த் சொல்லும்போது, என்னுடைய மருமகன்கள் நீங்கள் இரண்டு பேரும் இப்படியே சந்தோஷமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஜனார்த்தனன் கூறிக் கொண்டிருக்கிறார்.

இது தப்பு ஜீவா
அப்போது அந்தப் பக்கமாக வரும் கதிரை மாப்பிள்ளை இங்க வாங்க என்று ஜனார்த்தனன் கூப்பிட, ஜீவா குடித்துக் கொண்டிருப்பதை பார்த்து கதிர் குடிக்க வேண்டாம் நீ நிறைய குடித்துவிட்டு சலம்பிகிட்டு இருக்க என்று சொல்ல, என்னைக் குடிக்கக் கூடாது என்று சொல்வதற்கு நீ யார்? நான் குடிக்கிறதுக்கும் உங்க கிட்ட கேட்டுட்டு தான் எந்த அளவிற்கு குடிக்கணும் என்று குடிக்கணுமோ? நீயும் உன் அண்ணன் மாதிரி என்னை வந்து திட்ட போறியா? என்று திட்டி கதிரை அடித்து தள்ளி விடுகிறார். மீனாவின் அப்பா கதிரை சமாதானம் செய்து அனுப்பி வைத்துவிட்டு, மாப்பிள்ளை எங்க பக்கம் வந்துட்டாரு என்று மனதிற்குள் சந்தோஷப்படுகிறார்.

ஜீவாவை காணலையே
அடுத்த நாள் காலையில் கண்ணன், கதிர், மூர்த்தி மூவரும் ஒரே மாதிரி ஷர்ட் போட்டு கொண்டு இருப்பதை பார்த்த மீனாவின் அப்பா எல்லோருக்கும் அளவா இருக்குது. பயந்துட்டு எடுத்தேன் ஆனால் எல்லோருக்கும் அளவாகத்தான் இருக்கிறது என்று சொல்கின்றார். அப்போது ஜீவா எங்கே என்று எல்லோரும் கேட்க, ஜீவாவும் மீனாவும் மண்டபத்துக்கு போய்விட்டதாக சொல்கிறார். பின்னர் மண்டபத்துக்கு வந்த ஜீவா அங்கே அனைத்து வேலைகளையும் ஓடி ஓடி செய்து கொண்டிருக்கிறார்.

போட்டோ எடுப்பாங்களா
அப்போது மீனா ஜீவாவை தனியாக கூப்பிட்டு தங்கச்சி கல்யாணத்துக்கு நாம எதுவும் கிப்ட் கொடுக்க வேண்டாமா? என்று கேட்க, அது வீட்டில் செஞ்சுருவாங்க என்று ஜீவா சொல்ல, கண்டிப்பா செஞ்சுடுவாங்களா? என்று மீனா கேட்க, பயப்படாத மொய் எல்லாம் நிறைய தான் வைப்பாங்க என சமாதானம் செய்து வைக்கிறார். அப்போது அங்கு வரும் கதிர் ஜீவாவிடம் வேலை எதுவும் இருக்கிறதா என்று கேட்க? வேண்டாம் எல்லாமே நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி ஜீவா கிளம்பி விடுகிறார். அடுத்து அங்கு வரும் கண்ணன் நாம நான்கு பேரும் ஒன்றாக நின்று போட்டோ எடுப்போமா? என்று கேட்க, ஜீவா யோயோசிக்கிறார்.இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
சிறகடிக்க ஆசை: எலக்ஷனில் ஜெயித்த மீனா.. பிறகு நடந்த எதிர்பாராத சம்பவம்! மனம் மாறும் விஜயா.. சிந்தாமணியின் பிளான் -
ராத்திரி நேரத்து பூஜையில்.. விஜய் டிவி நிகழ்ச்சியில் டிஸ்கோ சாந்தி போட்ட டான்ஸ்! அசந்து போன ரம்பா! -
பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்: முத்துவேல் பற்றி தெரிய வந்த பெரிய உண்மை.. அதிர்ச்சியில் கதிர்! உடையும் குடும்பம் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா!












Click it and Unblock the Notifications