அடுக்கடுக்காய் கேள்வி கேட்ட ஜீவா.. கன்னத்தில் அறைந்த மூர்த்தி..அப்பாவின் பேச்சால் மீனா எடுத்த முடிவு

ஜீவா தன்னை ஒதுக்கி வைத்து விட்டதாக மூர்த்தியிடம் சண்டை இடுகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தன்னுடைய பெயரில் மட்டும் மொய் எழுதவில்லையே என்று மூர்த்தி இடம் ஜீவா கேள்வி கேட்டு சண்டை இடுகிறார்.

ஜனார்த்தனன் ஜீவாவிற்கு ஆறுதலாக மேலும் பேசி மேலும் பிரச்சனையை பெரிது பண்ணுகிறார்.

கண்ணனால் தான் இந்த பிரச்சனை வந்தது என்று மூர்த்தி கண்ணனை அடிக்கிறார்.

கோபத்தில் ஜீவா

கோபத்தில் ஜீவா

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மார்ச் 21ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில், கல்யாண வீட்டில் ஜீவா மற்றும் மீனாவின் பெயரில் மொய் எழுதாதத்தை குறித்து மீனா, ஜீவாவிடம் பிரிண்டவுட்டை கொடுத்து திட்டியதால் கோபத்தில் ஜீவா மூர்த்தி அமர்ந்திருக்கும் இடத்திற்கு வருகிறார். அங்கே மூர்த்தி, தனம், கதிர், முல்லை, முல்லையின் அம்மா அப்பா என அனைவரும் உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போது ஜீவாவை பார்த்த மூர்த்தி வந்த நேரத்தில் இருந்து வேலை பார்த்துக்கிட்டே இருக்க கொஞ்சம் இதுல வந்து உட்காரு ஜீவா என்று சொல்கிறார். ஆனால் ஜீவா எதுவும் பேசாமல் முறைத்தபடி நின்று கொண்டிருக்கிறார்.

கதிரை அசிங்கப்படுத்தும் ஜீவா

கதிரை அசிங்கப்படுத்தும் ஜீவா

பிறகு கதிர் நாங்க ஏதாவது வேலை பார்க்கிறோம் என்று சொன்னாலும் வேண்டாங்கிற ஆனா நீ மட்டும் வேலை பார்த்துக்கிட்டே இருக்க கொஞ்சம் இதுல உட்காரு அப்படி சொல்ல கோபத்தில் ஜீவா, ஏன் அண்ணே என்னை இப்படி அசிங்கப்படுத்துறீங்க? காயப்படுத்தி காயப்படுத்தி ரசிக்கிறது என்ன ஆனந்தம் என்று கேட்க, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.. கதிர் ஏன் இப்படி பேசுகிறாய் என்று ஜீவாவிடம் கேட்கிறார். அதற்கு கோபமடைந்த ஜீவா நான் உன்னிடத்தில் பேசவில்லை அண்ணன் கிட்ட பேசறதுக்கு உன்கிட்ட பெர்மிஷன் வாங்கணுமா? என ஜீவா கேட்கிறார்.

மூர்த்திக்கு ஒன்னும் புரியல

மூர்த்திக்கு ஒன்னும் புரியல

இதனால் அதிர்ச்சியான மூர்த்தி நானும் பார்த்துகிட்டு இருக்கேன் என்ன வந்ததுல இருந்து ஒரு மார்க்கமா பேசிகிட்டு இருக்க என்று கேட்க? நான் இல்ல நீங்க தான் எல்லாரும் ஒரு மார்க்கமா பண்ணிக்கிட்டு இருக்கீங்க. நான் என்ன தப்பு செஞ்சேன்னு என்னை குடும்பத்தில் இருந்து பிரிச்சு வச்சிருக்கீங்க என்று கேட்க? எல்லாரும் அதிர்ச்சியாகி என்னடா சொல்ற என்று தனம் கேட்க கதிர் இங்க பாரு ஏதோ சரியில்ல வா வந்து முதல்ல உட்காரு என்று ஜீவாவின் கையைப் பிடிக்க கையை உதறிவிட்டு கையை விடுறா என்று ஜீவாவை கதிரை திட்டுகிறார். என்னாச்சுடா ஜீவா ஏன் இப்படி பண்ணுகிறாய் என்று மூர்த்தி கேட்க இங்க வேற யாரும் பேசக்கூடாது நானும் அண்ணனும் மட்டும் தான் பேசணும்.. உங்களை அண்ணனு கூப்பிடலாமா? இல்ல அதுவும் கூப்பிடக் கூடாதா? என்று ஜீவா கேட்க எதுக்கு இப்படி பேசுற என்று மூர்த்தி கேட்கிறார்.

மீனாவை தடுக்கும் அப்பா

மீனாவை தடுக்கும் அப்பா

என் தங்கச்சி கல்யாணத்துக்கு நாம என்ன பண்ண போறோம்னு மீனா என்கிட்ட வந்து கேட்டா என்று சொல்ல, அங்கே கேட்டுக் கொண்டிருந்த மீனா தன்னுடைய அப்பாவிடம் எதுக்கு இப்படி பேசிக்கிட்டு இருக்கான். எல்லார்கிட்டயும் கோவமா என்று அதை தடுக்க போக மீனாவை ஜனார்த்தனன் தடுத்தி நிறுத்தி வைக்கிறார். பிறகு ஜீவா நம்ம வீட்டுல தனியா மொய் எழுதி பழக்கம் இல்லை அண்ணன் அண்ணி பாத்துக்குவாங்கன்னு நான் சொல்லியிருந்தேன் என்று சொல்ல, தனம் ஏன் நாம எழுதுனது பத்தலையா அதில் என்ன பிரச்சனை என்று கேட்கிறார்.

உண்மை அது இல்லை ஜீவா

உண்மை அது இல்லை ஜீவா

ஜீவா தன்னுடைய கையில் இருந்த பிரிண்ட் பேப்பரை காட்டி இதில் உங்க எல்லோருடைய பெயரும் இருக்கிறது. ஜீவா மீனா பெயர் மட்டும் இல்லை என்று சொல்கிறார். என்னுடைய பொண்டாட்டியோட தங்கச்சியோட கல்யாணம் ஆனா நாங்க மட்டும் பொய் வைக்கல என்று சொல்கிறார். அதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியாக நான் உங்களை அவ்வளவு நம்புனன் எங்களுக்கும் சேர்த்து செய்வீங்கன்னு தானே நம்புனேன். என்ன மட்டும் ஏண்ணே விட்டீங்க என்று கேட்கிறார். இதுல மட்டும் தான் என்னை விட்டீங்கலா இல்ல மொத்தமா குடும்பத்தில் இருந்தே என்ன விட்டுட்டீங்களா? என்று அழுதபடியே பேசுகிறார்.

முல்லையை திட்டும் கதிர்

முல்லையை திட்டும் கதிர்

உங்க ரெண்டு தம்பிகளும் தனியா சம்பாதிக்கிற மாதிரி நான் சம்பாதிக்கவில்லை என்று என்னை தனியா விட்டுட்டீங்களா என்று ஜீவா கேட்க, அதற்கு தனமும் மூர்த்தியும் இப்படி எல்லாம் பேசாத ஜீவா என்று சொல்கின்றனர். பிறகு மூர்த்தி கண்ணனிடம் தான் பணத்தை கொடுத்து அனுப்பியதை நினைத்து பார்த்து கண்ணனை எங்கே என்று கேட்டு அங்கே வரும் கண்ணனிடம் ஏன்டா இப்படி மொய் எழுதின எல்லாருக்கும் தனித்தனியா எழுதி இருக்க நான் உன்கிட்ட பாண்டியன் ஸ்டோர் குடும்பம் மொத்தமா தானே எழுத சொன்னேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கதிர் முல்லையிடம் நீ நம்ம பெயரை தனியா போட்டு தான் கொடுத்தியா என்று கேட்க. இல்லை நான் ரிசப்ஷன்ல தான் கொடுக்க நினைச்சேன். அதில் எந்த பெயரும் எழுதாமல் தான் வச்சிருந்தேன் அம்மா தான் வாங்கிட்டு எழுதிட்டாங்க. நீங்க மாமா கிட்ட சொல்லுவீங்கன்னு நான் நெனச்சேன். நீங்க சொல்லலையா என கதிரிடம் கேட்கிறார். இதனால் கதிர் நீதானே சொல்கிறேன் என்றாய் இப்ப என்னிடம் கேட்கிறாய் என திட்டுகிறார்.

அடி பலமா கண்ணன்

அடி பலமா கண்ணன்

அப்போது கண்ணனும் ஏற்கனவே கதிர் அண்ணன் கொடுத்த கவர் தனியா இருந்துச்சி நாங்க வேற தனியா கவர் வச்சிருந்தோம். அப்போ நீங்க தந்தது உங்க பேர்ல எழுதிட்டேன் என்று சொல்ல, கண்ணன் மீது கோபத்தில் மூர்த்தி கண்ணனை அடித்து கன்னத்தில் அறைந்து விடுகிறார். இந்தனால் ஐஸ்வர்யா கோபமாகி கண்ணன் கையில் இருந்த பிரிண்ட் பேப்பரை மீனாவின் கையில் கொடுத்து விட்டு வா கண்ணன் போகலாம் என்று தனியாக கூட்டிக்கொண்டு சென்றுவிட, மீனாவின் அப்பா எல்லாமே நீங்க செஞ்சுகிட்டு இப்போ மாட்டிக் கொண்டதும் இப்படி சமாளிக்கிறீர்களா? என்று கொளுத்தி போட தனம் அப்படி எல்லாம் இல்ல சித்தப்பா என்று சமாளிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+