வீட்டை விட்டு கிளம்பும் மூர்த்தி.. கதிர் செய்த செயல்.. கதறி அழும் ஜீவா.. மீனா சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யாவின் பேச்சைக் கேட்டு கண்ணனும் வேறு வழியில்லாமல் ஐஸ்வர்யாவோடு வீட்டை விட்டு கிளம்பி மாமியார் வீட்டுக்கு செல்கிறார்.

வீட்டை விட்டு வெளியே சென்ற ஐஸ்வர்யாவுக்கு அவமானம் கிடைக்கிறது.

நாம செய்தது தவறுதானோ என்று மீனா ஜீவாவிடம் புலம்புகிறார்.

வீட்டை விட்டு கிளம்பி ஐஸ்வர்யா

வீட்டை விட்டு கிளம்பி ஐஸ்வர்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மார்ச் 28ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ஐஸ்வர்யா கண்ணனிடம் நான் உனக்கு முக்கியமா? இல்லை இந்த குடும்பத்தினர் உனக்கு முக்கியமா நீயே முடிவு எடு என்று கூற, கண்ணன் முடிவு எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். பிறகு ஐஸ்வர்யாவிடமிருந்து விலகி தனது குடும்பத்தினரிடம் அருகில் நிற்கிறார். இதனால் கோபமான ஐஸ்வர்யா வேகமாக பேக்கோடு கிளம்பி போகிறார். பிறகு பின்னாடியே கண்ணனும் ஐஸ்வர்யாவோடு கிளம்பி போகிறார். கண்ணன் எவ்வளவு சமாதானம் சொன்னாலும் கேட்காமல் ஐஸ்வர்யா கடைசியில் அவருடைய சித்தியின் வீட்டிற்கு வந்து நிற்கிறார்.

இந்த அவமானம் தேவையா

இந்த அவமானம் தேவையா

சித்தி வீட்டுக்கு வந்த ஐஸ்வர்யாவிற்கு அவமானம் தான் கிடைக்கிறது. எதற்காக வீட்டை விட்டு வந்தீங்க என்று அவருடைய சித்தியும் தனத்தின் அண்ணனும் மாறி மாறி கேள்வி கேட்கின்றனர். பிறகு இந்த வீட்டில் நீ இருக்க முடியாது. இங்கே நாங்கள் நிறைய பேரு இருக்கோம் என்று ஐஸ்வர்யாவின் சித்தி சொல்லி நீ உங்க வீட்டுக்கே போயிரு என்று கூறுகிறார். இதனால் கோபம் ஆனா ஐஸ்வர்யா எனக்கு பாட்டி வீட்டு சாவியை கொடு என்று கேட்க முதலில் தர முடியாது என்று அவருடைய சித்தி சொல்ல பிறகு எனக்கு சொத்தில் உரிமை இருக்கு என்று அங்கேயும் ஐஸ்வர்யா விதண்டாவதம் செய்ய கடைசியில் சாவியை கொடுத்து அனுப்புகின்றனர்.

சமாதானம் செய்யும் மீனா

சமாதானம் செய்யும் மீனா

ஜீவாவும் மீனாவும் தனியாக பேசிக் கொண்டிருக்கும்போது மீனா நாம கொஞ்சம் அவசரப்பட்டுட்டோம்னு நினைக்கிறேன். நான் அன்னைக்கு மொய் பேப்பரில் நம்முடைய பெயர் இல்லையே என்று கடுப்பாகித்தான் உன்னிடம் வந்து சத்தம் போட்டேன். அதனால் தான் இவ்வளவு பிரச்சனை நாம அப்படி பேசாமல் இருந்திருக்கலாம். இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது என்று பேசிக் கொண்டிருக்க, நீயும் என் மேல நம்பிக்கை இல்லையா? நான் அந்த வீட்டில் எனக்கு இருந்த கஷ்டங்களை தான் அன்று அன்னைக்கு சொன்னேன். நான் அவசரமெல்லாம் படவில்லை பல நாள் யோசிச்சுகிட்டு இருந்தது தான் என்னால கதிர் மாதிரி ஒரு கடையயோ இல்ல கண்ணன மாதிரி வேலைக்கோ போக முடியாது என்று நீயும் நினைக்கிறியா? என்று சொல்ல, இல்லை ஜீவா என்று ஜீவாவை மீனா சமாதானம் செய்கிறார்.

என்னாச்சி மூர்த்தி உங்களுக்கு

என்னாச்சி மூர்த்தி உங்களுக்கு

அடுத்ததாக கதிர் வீட்டில் இருப்பவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்து முல்லையிடம் கொடுக்க, நான் சாப்பிட மாட்டேன் என்று மூர்த்தி கோபத்தோடு பேசிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே என்னை விட்டுட்டு ஜீவாவும் போயிட்டான் கண்ணனும் போயிட்டான் இனி நீயும் போயிரு என்று கதிரிடம் திட்ட, கதிர் நான் எதற்கு போக வேண்டும்? என்று கேட்க, ஆமா இது உன் வீடு தானே? நீ எப்படி போக முடியும். நாங்க போயிடுறோம் என்று தனம் கையை பிடித்து கூப்பிட கதிர் தடுத்து நிறுத்தி எங்க போவீங்க இது உங்க வீடு, நாங்க தான் உங்க வீட்டில் இருக்கிறோம் என்று முல்லையும் கதிரும் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+