கெஞ்சும் தனம்.. அவமானப்படுத்தும் மீனா.. ஜனார்த்தனன் பதிலடி.. மனம் மாறிய ஜீவா.. அடுத்த பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவாவை சமாதானம் செய்வதற்காக தனம், மீனாவின் அப்பா வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

கண்ணனை சமாதானம் செய்வதற்காக போன கதிரிடம் ஐஸ்வர்யா அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கிறார்.

ஜனார்த்தனன் தனத்தை அவமானம் செய்ததற்கு மீனா பதிலடி கொடுக்கிறார்.

ஐஸ்வர்யாவின் கேள்வி

ஐஸ்வர்யாவின் கேள்வி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மார்ச் 30ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் கதிர் ஐஸ்வர்யா மற்றும் கண்ணனை சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்து விட வேண்டும் என்று ஐஸ்வர்யாவின் பாட்டி வீட்டுக்கு வந்திருக்கிறார். அங்கே ஐஸ்வர்யா நீங்களும் தானே தனியாக மொய் எழுது நீங்க ஆனா உங்களை யாராவது கேட்டாங்களா? நாங்க செஞ்சா மட்டும் அது தப்பு? என்று பேசுறாங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு நாங்கள் அண்ணனிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்தோம் மறைக்க என்று நினைக்கவில்லை ஆனால் முல்லையும் நானும் மறந்து விட்டோம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

ஐஸ்வர்யாவின் முடிவு

ஐஸ்வர்யாவின் முடிவு

பிறகு ஆனால் நீங்கள் அண்ணனுடமோ அண்ணனிடமோ சொல்லி இருக்கலாம் என்று சொல்ல ஐஸ்வர்யா நாங்களும் உங்களை போல தானே மறந்து விட்டோம் என்று விளக்கம் கொடுக்கிறார். பிறகு அன்னைக்கு மட்டுமல்ல எப்போதுமே எங்களுக்கு அந்த வீட்டில் அவமானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. எல்லோரும் எங்களை தான் திட்டுறாங்க. அதனால நீங்க எப்ப வேணாலும் இங்க வந்துட்டு போங்க. ஆனா அங்க வாங்க என்று மட்டும் எங்களுக்கு கூப்பிடாதீங்க என்று ஐஸ்வர்யா கதிரிடம் சொல்கிறார்.

மனதை மாற்றும் தனம்

மனதை மாற்றும் தனம்

அதிர்ச்சியாகி நிற்கும் கதிரிடம் மேலும் நீங்க இல்ல, பெரிய மாமா வந்து கூப்பிட்டாலும் நாங்கள் அங்கு வர மாட்டோம் என்று கூறி அனுப்பி வைக்கிறார். அடுத்ததாக தனம் மீனாவின் வீட்டுக்கு செல்கிறார். அங்கே மீனா அப்பாவிடம் மீனா எங்கே என்று பேசிக் கொண்டிருக்க மீனா வருகிறார். மீனா தனத்தை வீட்டிற்குள் கூட்டி செல்லும்போது அங்கே ஜீவா அமர்ந்திருக்க ஜீவாவின் கையைப் பிடித்துக் கொண்டு தனம் கண்கலங்கி அழுகிறார். அழாதீங்க அண்ணி என்று ஜீவா சொல்ல நேற்று நீ என்ன எல்லாம் பேசிட்டு எனக்கு மனசு ஆறல உனக்காகத்தான் எல்லாரும் வீட்டில் காத்திருக்கும் எதனால் நம்ம வீட்டில் போய் பேசிக்கலாம் வந்துரு வா என்று ஜீவாவின் மனதை மாற்றும் விதமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

மீனாவின் மாற்றம்

மீனாவின் மாற்றம்

பிறகு தனம் மீனாவிடம் நீ சொல்லு மீனா ஜீவாவை நம்ம வீட்டுக்கு வர சொல்லி என்று சொல்ல, அதற்கு மீனா நீங்க என்னதான் இருந்தாலும் எப்போதும் மாமா பக்கத்தில் தானே நிற்கிறீங்க. மாமா சொல்ல தானே கேக்குறீங்க. நானும் அப்போ அப்படி தானே பண்ண வேண்டும். நான் என் ஜீவா பேச்சை தான் கேட்க முடியும். என்னால் எதுவும் சொல்ல முடியாது என்று சொல்லிவிட, நீங்க இங்க வந்து இப்படி பேசுறது எனக்கு கஷ்டமா இருக்கு என்று ஜீவாவும் தனத்தை பார்த்து கூறுகிறார்.

தனத்திற்கு கிடைத்த அவமானம்

தனத்திற்கு கிடைத்த அவமானம்

மீனாவின் அப்பாவும் அம்மாவும் நீங்க எவ்வளவு கஷ்டப்படுத்துறீங்க என்று எங்க மாப்பிள்ளை தான் அன்னைக்கு எல்லாரும் முன்னாடியும் சொல்லிட்டாங்க. மீண்டும் எதுக்கு அங்க கூட்டிட்டு போய் அவங்கள கஷ்டப்படுத்தவா என்று திட்ட, மீனா நீங்க ரெண்டு பேரும் பேசாம சும்மா இருங்க. இது ஜீவா தான் முடிவு எடுக்கணும் என்று சொல்ல, ஜீவாவின் கையைப் பிடித்து கூப்பிட்டபடி தனம் மீனாவை கயிலை கூட்டிக்கொண்டு வா என்று சொல்ல, ஜீவா தனத்தின் கையை தட்டி விட்டு நான் அந்த வீட்டுக்கு இனி வரவே மாட்டேன் என்று சொல்கிறார். தனம் அதிர்ச்சியில் அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியேறுகிறார் ஜனார்த்தனன் சந்தோஷத்தோடு நிற்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+