வேலைக்கு போக முடிவெடுத்த ஜீவா..மாமனார் கொடுத்த ட்விஸ்ட்.. கதறி அழும் தனம்.. சண்டையிடும் கதிர்
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் ஜீவா மற்றும் மீனா இருவரும் வீட்டுக்கு வரமாட்டேன் என்று சொன்ன காரணத்தால் அழுது கொண்டு ரோட்டில் நிற்கிறார்.
அங்கு வரும் கதிர் கண்ணன் வீட்டில் நடந்ததைப் பற்றி கூறுகிறார்.
மூர்த்திக்கு உதவி செய்ய கடைக்கு சென்ற கதிரை மூர்த்தி அவமானப்படுத்த, கதிர் கடைசியில் கோவப்பட்டு திட்டுகிறார்.

இது தேவையா தனம்
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மார்ச் 31ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் தனம் தெருவில் நடந்து வந்து கொண்டிருக்கிறார். ஜீவா வீட்டில் ஜீவா கூறியதை நினைத்துப் பார்த்தபடியே வந்து கொண்டிருக்க, அந்தப் பக்கமாக கதிரும் வருகிறார். எங்கே போயிட்டு வரீங்க என்று தனத்திடம் கேட்க, தனம் கதிரிடம் ஆரம்பத்தில் பொய் சொல்ல பிறகு கதிர் கண்டுபிடித்து ஜீவாவை பார்த்துவிட்டு வரீங்களா? என்று கேட்க, ஆமாம் என்று அங்கே நடந்ததை பற்றி கூறுகிறார். நானும் கண்ணனை இப்பதான் பார்த்துவிட்டு வருகிறேன் நம்ம வீட்டை விட்டு போய்விட்டோம் என்று கொஞ்சம் கூட வருத்தம் இல்லாமல் அவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று சொல்ல, அவன் எப்படி தனியாக வாழ போகிறான் என்று தனம் புலம்பி கண்ணீர் வடிக்கிறார்.

பீல் பண்ணும் ஜீவா
பிறகு நான் வேணா ஒரு தடவை கண்ணனிடம் பேசி பார்க்கவா? என்று தனம் கேட்க வேண்டாம். அவன் வருகிற ஐடியாவில் இல்லை என்று தீர்க்கமாக சொல்லிவிட்டான் என்று கதிர் சொல்கிறார். அடுத்ததாக ஜீவா வீட்டில் சோகமாக இருக்கிறார். அப்போது மீனாவின் அப்பாவும் அம்மாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஜீவா சரியாக சாப்பிடவில்லை என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த இடத்திற்கு ஜீவா வந்ததும் சாப்பிட்டீர்களா? மாப்பிள்ளை என்று கேட்டு அவர் மனதை மாற்ற முயற்சி செய்ய, நான் வேலைக்கு போக வேண்டும் வீட்டிற்குள் இருக்கிறது. எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது என்று ஜீவா சொல்கிறார்.

புது புல்லட் கிடைச்சாச்சு
ஜனார்த்தனன் தாராளமா போங்க நம்ம கிட்ட சூப்பர் மார்க்கெட், ரைஸ் மில் இருக்கு நீங்க எங்க வேணாலும் போங்க என்று சொல்ல, நான் சூப்பர் மார்க்கெட் போகிறேன் என்று ஜீவா சொன்னதும் சந்தோஷப்படுகின்றனர். பிறகு ஜீவா கிளம்பி வருவதற்குள் எல்லாம் ரெடியாக இருக்க வேண்டும் என்று ஒருவருக்கு போன் செய்து ஜனார்த்தனன் மிரட்ட, ஜீவா வீட்டை விட்டு வெளியே வரும்போது அங்கே அவருக்காக புல்லட் பைக் இருக்கிறது. அதை பார்த்து அதிர்ச்சியாக இது உங்களுக்கு தான். மாப்பிள்ளை நீங்க இனி இதிலேயே போயிட்டு வாங்க என்று சூப்பர் மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

சண்டை போடும் கதிர்
மூர்த்தி கடையில் தனியாக வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அவரிடம் மாமா பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு சமயம் இந்த கடை எவ்வளவு சந்தோஷமாக கலகலப்பாக இருந்தது. ஆனால் இந்த ஜீவா இப்படி மாறுவான் என்று நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கவில்லை என்று ஜீவாவை பற்றி போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்க, அப்போது அங்கே கதிர் வந்து வேலை செய்வதாக கூறுகிறார். பிறகு வேண்டாம் நீ உன் ஹோட்டலை பார் என்று மூர்த்தி சொல்கிறார். அதற்கு வேணும் என்று கதிர் சண்டை போடுகிறார்.

தனி குடித்தனத்த்தில் என்ஜாய் தான்
அடுத்ததாக கண்ணன் பேங்கில் இருந்து வீட்டிற்கு வரும்போது ஐஸ்வர்யா கட்டிபிடித்து வரவேற்று சந்தோஷமாக டீ கொடுத்து, வடை எல்லாம் செய்து வைத்திருக்கிறார். நமக்கு அந்த வீட்டில் இருக்கும்போது இந்த மாதிரி சுதந்திரம் இல்லை. இப்போது தான் சந்தோஷமாக இருக்கிறோம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு இருவரும் படம் பார்க்க போகலாம் என்று தியேட்டருக்கு கிளம்புகின்றனர். அப்போது கண்ணனும் தனிக் குடும்பத்தில் இத்தனை சந்தோஷங்கள் இருக்கிறதா? இது தெரிஞ்சுக்காம நாம இருந்துட்டோம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications