ஜீவா, மீனாவை சமாதானம் செய்யப்போன தனம்... அவமானத்தால் கதிர் எடுத்த முடிவு.. அடுத்த பிரச்சனை வந்தாச்சி
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மார்ச் 30ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஜீவா மற்றும் மீனாவை சமாதானம் செய்ய முயற்சி செய்யும் தனத்திடம் ஜீவா வீட்டிற்கு வர மாட்டேன் என்று கூறுகிறார்.
அதே நேரத்தில் ஐஸ்வர்யா மற்றும் கண்ணனை கதிர் சமாதானம் செய்ய ஐஸ்வர்யா கதிருக்கு பதிலடி கொடுத்த அனுப்புகிறார்.

பிரிந்த குடும்பம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த தருணங்கள் தற்போது நடந்து கொண்டு வருகிறது. இத்தனை நாள்களாக ஒற்றுமையாக கூட்டு குடும்பமாக இருந்த பாண்டியன் குடும்பமே இப்போது தனித்தனியாக பிரிந்து கொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

வாக்கு கொடுத்த கதிர்
இந்த நிலையில் ஏற்கனவே தம்பிகள் ஜீவா மற்றும் கண்ணன் இருவரும் குடும்பத்தை விட்டு பிரிந்து போய் விட்டதால் வருத்ததில் இருக்கும் மூர்த்தி மொத்த கோவத்தையும் கதிரிடம் காட்டி நானும் வீட்டை விட்டு போக போகிறேன் என்று மிரட்டி கொண்டு இருக்க, அதற்கு கதிர் மூர்த்தியை சமாதானம் செய்து வைத்து நான் பிரிந்து போன நம்முடைய அண்ணன் தம்பிகளை எல்லாம் மீண்டும் ஒற்றுமையாக வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்து விடுவேன் என்று வாக்கு கொடுத்து இருக்கிறார்.

ஒரு முடிவில்தான் இருக்காங்க
இந்த நிலையில் ஜீவாவை மீனா மனது மாற்றி மீண்டும் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்து விடலாம் என்று முயற்சி செய்ய, அப்படி எல்லாம் செய்யக்கூடாது. ஜீவாவின் மனதிற்குள் எத்தனை வலி வேதனைகள் இருக்கிறது என்பதை பற்றி பேசி ஜனார்த்தனன் மீனாவை திட்டி விடுகிறார். ஆனால் மீனா நாம் இந்த வீட்டில் இருந்தால் சரிப்பட்டு வராது என்று சொல்ல, அதற்கு ஜீவாவும் வாடகைக்கு நாம் வீடு பார்த்து விடலாம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இவங்க செட்டில் ஆகிட்டாங்களே
அதே நேரத்தில் ஐஸ்வர்யாவின் பாட்டி வீட்டில் ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் இருவரும் செட்டில் ஆகிவிட்டனர். அங்கு இனி நான் ஒரு சிறந்த மனைவியாக இருப்பேன் என்று ஐஸ்வர்யா கண்ணனிடம் பேசிக் கொண்டிருக்க, இருவரும் அந்த வீட்டிலேயே செட்டில் ஆகிவிடும் எண்ணத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய நாளைய எபிசோட்டின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

யாரும் வரவில்லையாம்
அதில் கண்ணன் மற்றும் ஜீவாவை மீண்டும் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்து விட வேண்டும் என்று கதிரும், தனமும் முயற்சி செய்கின்றனர். கண்ணன் வீட்டிற்கு கதிர் சென்று இருக்கும் நிலையில், ஐஸ்வர்யாவையும் வீட்டிற்கு வர சொல்லி கூப்பிட்டு, நீங்கள் இல்லாததால் அண்ணன் ரொம்பவே பீல் பண்றாரு என்று சொல்ல, நீங்க இல்லை மூர்த்தி மாமாவே வந்து கூப்பிட்டாலும் நாங்கள் அங்க வரமாட்டோம் என்று ஐஸ்வர்யா கூறிவிடுகிறார். அதே நேரத்தில் தனம் ஜீவா மற்றும் மீனாவை நேரில் சந்தித்து வீட்டுக்கு வரும்படி கூப்பிட, ஜீவாவும் நானும் வரமாட்டேன் என்று கூறிவிடுகிறார். இந்த ப்ரோமோ தற்போது பரபரப்பாக வலம் வருகிறது.












Click it and Unblock the Notifications