"ஹேய் நிறுத்துடி..”தனத்தை அவமானம் செய்த ஐஸ்வர்யா... முல்லை உடைத்த உண்மை.. அடுத்த வெளியேற்றம்?
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மார்ச் 23 முதல் 25ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே ஜீவா வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இந்த பிரமோ வில் கண்ணன் ஐஸ்வர்யா உடன் வெளியேற இருக்கிறார்.
மொத்த பிரச்சனைக்கும் காரணம் கண்ணன் தான் என்று தனமும் மூர்த்தியும் கண்ணனை திட்டுகின்றனர்.

சண்டையால் தொடங்கிய சுவாரசியம்
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அடுத்தடுத்து பல எதிர்பாராத திருப்பங்களும் விறுவிறுப்பான கதைக்களங்களும் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே ஒரு சில வாரங்களாக இந்த சீரியல் கதை மோசமாக இருக்கிறது என்றும் கர்ப்ப சீன்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது என்றும் பலர் கருத்து தெரிவித்து வந்திருந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் அண்ணன் தம்பிகளுக்குள் சண்டை வந்து அடுத்தடுத்து வீட்டை விட்டு பிரிந்து போக இருக்கின்றனர்.

ஜீவாவின் நியாயமான கோபம்
ஏற்கனவே ஜீவா தன்னை பண விஷயத்தில் குடும்பத்தினர் அனைவரும் அவமானப்படுத்தி விட்டார்கள் என்று
அனைவரும் முன்னிலையிலும் தன்னுடைய மனதில் இருந்த மொத்த கவலைகளையும் கேள்விகளையும் கேட்டு இனி நான் உங்களுக்கு தம்பி இல்லை என்று மூர்த்தியிடம் சண்டையிட்டு மண்டபத்தை விட்டு அனைவரையும் வெளியேற்றி இருக்கிறார். இதுவரைக்கும் தெரிந்தோ தெரியாமலோ செய்த அனைத்து செயல்களையும் ஜீவாவின் மனதை எந்த அளவிற்கு பாதிப்பு இருந்தது என்பது இப்போதுதான் மொத்த குடும்பத்திற்கும் தெரிந்திருக்கிறது.

கண்ணனை திட்டும் குடும்பம்
இந்த நிலையில் வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் ஜீவா இவ்வளவு பிரச்சனை பண்ணுவதற்கு காரணம் மொய் விஷயத்தில் கண்ணன் செய்த குழப்பம்தான் என்று கண்ணனை திட்டுகின்றனர். அதில் டேய் உன்னால தான் ஜீவா வீட்டை விட்டு போயிட்டான் என தனம் திட்ட, உடனே கண்ணனின் மனைவியான ஐஸ்வர்யா அக்கா என்ன ஓவரா திட்டறீங்க என கோபமாக பேசுகிறார். இதனை பொறுக்காமல் முல்லை குறுக்கிட்டு நீங்க என்ன நல்லவங்களா? என ஐஸ்வர்யாவிடம் கேட்க மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அடுத்து யார் வெளியே போறாங்க
பிறகு முல்லை, கண்ணன் 40,000 சம்பளம் வாங்குவதும் உங்களிடம் 17,000 ரூபாய் தான் தருகிறான் என்ற உண்மையையும் தனம் மற்றும் மூர்த்தியிடம் சொல்ல, தனத்திற்கும் மூர்த்திக்கும் இது பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. அதற்கு ஐஸ்வர்யா மொத்த பணத்தையும் உங்ககிட்ட கொடுத்துட்டு ஒவ்வொன்னுக்கும் உங்ககிட்ட கைகட்டி நிற்கணுமா? இந்த வீட்டில நாங்க நிறைய அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிட்டு கஷ்டப்பட்டு தான் இருக்கோம் மாமா என்று ஐஸ்வர்யா சொல்ல, அப்படி யாரும் இங்க கஷ்டப்பட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லுகிறார். அதற்கு இந்த வீட்டை விட்டு நான் மட்டும் போகணுமா? இல்லை, நாங்க ரெண்டு பேரும் போகணுமா? என்று மூர்த்தியிடம் கேட்கிறார். இந்த பிரமோ தற்போது பரபரப்பாக வலம் வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications