வீட்டில் நடக்கும் சூழ்ச்சிகளால் மேடையில் அவமானப்படும் ஜீவா.. குடும்பத்தினருக்கு மீனாவின் பதிலடி?
ஜீவா மற்றும் மீனாவுக்கு தெரியாமல் வீட்டில் நடக்கும் சூழ்ச்சிகளால் மண்டபத்தில் பிரச்சனை ஏற்பட இருக்கிறது.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் திருமண மண்டபத்தில் அடுத்த பிரச்சனை ஏற்பட இருக்கிறது.
அண்ணன் தம்பிகள் அனைவருமே ஜீவாவிற்கு தெரியாமல் மொய் எழுதும் விஷயம் தெரிஞ்சு இனி மீனாவால் வீட்டில் சண்டை வர இருக்கிறது.
இதுவரைக்கும் அண்ணன்களின் பேச்சைக் கேட்டு வந்த ஜீவா அனைவர் முன்னிலையிலும் இனி அண்ணனை அவமானப்படுத்த இருக்கிறார்.

விரத்தியில் ஜீவா
விஜய் டிவில ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் எதிர்பாராத பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாகவே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கர்ப்ப காட்சிகள் மட்டுமே இழுத்துக் கொண்டு இருந்த நிலையில் தற்போது சீரியலில் அண்ணன் தம்பி ஒற்றுமையான இருந்த குடும்பம் பிரிபட போகிறது. இதில் இதுவரைக்கும் பொறுமையின் சிகரமாக இருந்த ஜீவா தற்போது தன்னுடைய அண்ணன் மற்றும் தம்பிகளின் செயல்பாடுகளை பார்த்து விரக்தி இருக்கிறார்.

மாமனாரின் சூழ்ச்சி
இந்த நிலையில் வீட்டில் நடக்கும் அடுத்தடுத்த பிரச்சனைகளும் ஜீவா வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலைக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஜீவாவின் மாமனார் மீனா தன்னுடைய குடும்பத்தோடு வீட்டிற்கு வந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஜீவாவிற்கு தன்னுடைய அண்ணன் மற்றும் தம்பிகளின் மீது இருக்கும் கோபங்கள் மாமனாருக்கு தெரிந்ததும் அவர்களை எப்படியாவது பிரித்து விட வேண்டும் என்று நினைப்போடு இருக்கையில், பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தின் முன்பு தன்னை நல்லவராக காட்டிக் கொண்டு திருமண மண்டபத்தில் அவர்களை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்.

குடும்பத்தின் மீது பாசம் தான்
ஜீவாவிற்கு என்னதான் தன்னுடைய அண்ணன் மீது கோபம் இருந்தாலும் மண்டபத்தில் தன்னுடைய குடும்பத்தினரிடம் ஏற்கனவே நிச்சயதார்த்தத்தில் நடந்த மாதிரி மீனாவின் அப்பா எதுவும் பேசி விடக்கூடாது என்ற பயந்து கொண்டிருக்கிறார். ஆனால் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினரிடம் மூர்த்தி நடந்து கொள்வதை பார்த்து ஜீவாவும் மீனாவும் சந்தோஷப்படுகின்றனர். இதே நேரத்தில் பாண்டியன் ஸ்டோர் அண்ணன் தம்பிகள் அனைவருமே ஒருத்தருக்கு மாற்றி ஒருத்தர் தெரியாமல் மொய் விஷயத்தில் அவர்களாக முடிவெடுத்து இருக்கின்றனர்.

தனித்தனியாக முடிவு
இதுவரைக்கும் மூர்த்தி அனைத்து திருமண வீட்டிற்கும் மொய் எழுதிக் கொண்டிருந்த நிலையில் தற்போதும் அதுபோலவே மொய் எழுத முடிவு செய்து இருக்கிறார். ஆரம்பத்தில் 35 ஆயிரம் ரூபாய் மொய் எழுதுவோம் என்று மூர்த்தி சொல்ல, அது செட்டாகாது ஐம்பதாயிரம் ரூபாய் மொய் எழுதுவோம் என தனம் சொல்ல சரி என்று மூர்த்தியும் சம்மதித்துக் கொள்கிறார். அதே நேரத்தில் முல்லை தனியாக அவருடைய அம்மா சொன்னதற்காக 5000 ரூபாய் மொய் எழுத இருக்கிறார். கண்ணனும் ஐஸ்வர்யாவும் தங்களுடைய பெயரையும் மைக்கில் சொல்ல வேண்டும் என்று அவர்கள் தனியாக 5000 ரூபாய் மொய் எழுத இருக்கின்றனர். இதே நிலையில் தன்னுடைய சொந்த தங்கையின் திருமணத்திற்கு ஜீவாவிடம் ஏதாவது கிப்ட் செய்ய வேண்டாமா என்று மீனா கேட்க அண்ணன் எல்லாத்தையும் பாத்துக்குவார் என்று ஜீவா சொல்லி முடிகிறார்.

அடுத்த வாரம் தெரியும்
இந்த நிலையில் இன்று திருமணம் முடிந்திருக்கிறது. திருமணத்திற்கு பிறகு அனைவரும் மொய் எழுதியதை மைக்கில் வாசித்துக் காட்ட இருக்கிறார்கள். அப்போது கண்ணன் ஐஸ்வர்யா பெயர், முல்லை கதிர் பெயர் அதுபோல மூர்த்தி தனம் பெயர் வர இருக்கிறது. அப்போது ஜீவா மீனா எதுவும் செய்யவில்லையா என்று அங்கு இருப்பவர்கள் கேட்கப் போகிறார்கள். அப்போது ஜீவாவும் மீனாவும் தலை குனிந்து நிற்க போகிறார்கள். இனி இதுவரைக்கும் அமைதியாக இருந்த மீனா அடுத்தடுத்து தன்னுடைய உரிமைகளை கேட்டு பிரச்சனை செய்ய இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அடுத்த வாரத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு குடும்பம் பிரிப்பட இருக்கிறதா? அல்லது அண்ணன் தம்பி பாசம் ஜெயிக்கப் போகிறதா என்பது தெரிய வரும்.












Click it and Unblock the Notifications