இரண்டு நாள் பார்த்து அழுதுட்டேன்.. இதை என்னால் செய்ய முடியவில்லை! உருக்கமாக பதிவு வெளியிட்ட 'ஜீவா'
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவா கேரக்டரில் நடிகர் வெங்கட் ரங்கநாதர் நடித்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இரண்டு நாட்களாக ஜீவா தன்னுடைய மனதில் இருக்கும் கவலைகளை எல்லாம் கொட்டி இருக்கிறார்.
ஜீவாவின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் பலரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.

வெளியேற்றப்பட்ட கண்ணன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து இருந்த தருணங்கள் தற்போது நடந்து வருகிறது. இத்தனை நாட்களாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கூட்டுக் குடும்பமாக இருந்த மொத்த அண்ணன் தம்பிகளும் இப்போது தனித்தனியாக பிரிந்து போக இருக்கின்றனர். ஆரம்பத்தில்
கண்ணன் ஐஸ்வர்யாவை கல்யாணம் செய்துவிட்டார் என்று வீட்டை விட்டு மூர்த்தி அடித்து துரத்தி இருந்தார். அதற்கு பிறகு கண்ணன் ஐஸ்வர்யாவை பிறகு மனம் மாறி வீட்டுக்குள் சேர்த்து இருந்தனர்.

வெளியேறிய கதிர்
அதைத்தொடர்ந்து முல்லை மருத்துவ செலவு விஷயத்தில் அடுத்த பிரச்சனை தொடங்க முல்லையும் கதிரும் கோபத்தோடு வீராப்பாக வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய நகைகளை வைத்து முல்லை புதியதாக தன்னுடைய கணவருக்கு ஹோட்டல் வைத்துக் கொடுக்க அதுவும் தற்போது நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஜீவாவின் மாமனார் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை ஒரே நாள் இரவில் மூட்டை முடிச்சுகளோடு வெளியே துரத்தி விட அனைவருக்கும் கதிர் தான் அடைக்கலம் கொடுத்து வைத்திருக்கிறார்.

மீனா அப்பாவிற்கு மகிழ்ச்சி தான்
பாண்டியன் ஸ்டோர் குடும்பம் முழுக்க இப்போது கதிர் வீட்டில் இருக்கும் நிலையில் ஜீவாவிற்கு தொடர்ந்து அவமானங்கள் கிடைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது மீனாவின் தங்கச்சியின் திருமண விஷயத்தில் நடந்த மொய் பிரச்சனையால் ஜீவாவும் மீனாவும் இனி நாங்கள் அந்த வீட்டிற்கு வர மாட்டோம் என்று மீனாவின் வீட்டிலேயே செட்டில் ஆகிவிட்டனர். மீனாவின் அப்பா இதைத்தான் எதிர்பார்த்து பலமுறை முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் அது அப்போது நடைபெறவில்லை இப்போது தானாகவே நடைபெற்று தன்னுடைய வீட்டில் மருமகனும் மகளும் வந்து சேர்ந்து விட்டனர் என்று மகிழ்ச்சியோடு இருக்கிறார்.

ஜீவாவின் வெகுளித்தனம்
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் வீட்டில் அடிமையாக வேலை செய்து கொண்டிருந்த ஒரே நபர் என்றால் அது ஜீவா மட்டும் தான். ஜீவா தான் மீனாவின் கேள்விகளுக்கு அவருக்கு சப்போர்ட் செய்யாமல் எப்போதும் தன்னுடைய அண்ணன்கள் தம்பிகள் என்று பாசத்தை கொட்டிக் கொண்டிருந்தார். ஆனால் மீதமுள்ளவர்கள் எல்லாம் அவர்களுக்கு தேவையானவற்றை எல்லாம் சிறப்பாக செய்து கொண்டு இருந்தனர். ஆனால் மீனாவிற்கு ஜீவா எதுவுமே செய்யவில்லையே என்று ரசிகர்கள் அதிகமான கருத்து தெரிவித்து வந்திருந்தனர்.

ரசிகர்களின் பாராட்டு
இந்த நிலையில் ரசிகர்கள் கேட்க நினைத்துக் கொண்டிருந்த கேள்விகளை எல்லாம் தற்போது இரண்டு நாட்களாக ஜீவா தன்னுடைய அண்ணன் தம்பிகளை நிற்க வைத்து சரட்டு மேனிக்கு கேள்வி கேட்டு தன்னுடைய நடிப்பை தத்ரூபமாக காட்டி இருக்கிறார். இவருடைய நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இதே இடத்தில் ஏற்கனவே கதிர் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது இந்த மாதிரி பேசவில்லை என்றும் அவர் தன்னுடைய நடிப்பை எல்லாம் ஒற்றை புருவத்தை தூக்கி காட்டியே காட்டிவிடுகிறார். ஆனால் ஜீவா அப்படியே கேரக்டராக மாறி ரசிகர்களை தன்னுடைய நடிப்பில் கண்களாக செய்ததாக பல ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஜீவாவின் உருக்கமான பதிவு
அதிலும் ஒரு ரசிகர் இரண்டு நாள் எபிசோட்டை பார்த்து அழுதுட்டேன். இப்பதான் சரியாக பேசி இருக்கீங்க என்று ஜீவாவிற்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். அதை பார்த்து சந்தோஷமான ஜீவா கேரக்டரில் நடிக்கும் வெங்கட் ரங்கநாதன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அதற்கு நன்றி கூறி பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில், நடிப்பிற்காக எனக்கு குறுஞ்செய்தி அனுப்ப நீங்கள் அனைவரும் நேரத்தை எடுத்துக் கொண்டதை நான் முழு மனதோடு பாராட்டுகிறேன். ஜீவாவிற்கு நீங்கள் அளித்த அனைத்து ஆதரவிற்கும் நான் நன்றியுள்ளனாக இருப்பேன். ஒவ்வொரு செய்திக்கும் பதிலளிக்க முடியவில்லை. மிக்க நன்றி என்று உருக்கமாக பதிவு வெளியிட்டிருக்கிறார். தற்போது இதற்கு பலரும் லைக் கொடுத்து வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications