பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூர்த்தியின் வீட்டில் துயர சம்பவங்கள்..ஒரு வாரத்திற்குள் இத்தனையா??
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூர்த்தி கேரக்டரில் நடிக்கும் ஸ்டாலின் வீட்டில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.
தொடர்ந்து ஒரே வாரத்தில் இத்தனை பிரச்சனையா என்று தற்போது ஸ்டாலினுக்கு ரசிகர்கள் பலர் ஆருதல் கூறி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர் மூர்த்தி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூர்த்தி கேரக்டரில் நடிக்கும் ஸ்டாலின் ஏற்கனவே சீரியல் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் தான். இவர் தொடர்ந்து பல வருடங்களாக சின்ன திரையில் கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இவருடைய கேரக்டர் ரசிகர்களின் மனதில் எளிதில் பதிந்துவிடும் வகையில்தான் இருந்து வருகிறது. அதனாலேயே இவருக்கு குடும்ப ரசிகர்களின் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

துயரமான சம்பவங்கள்
பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலமாகவும் தற்போது இவருக்கு தங்கள் வீட்டில் ஒருவர் என்று நினைக்கும் அளவிற்கு அனைவருக்கும் பரிச்சயம் ஆக மாறி இருக்கிறார். இந்த சீரியலில் வீட்டின் மூத்த அண்ணனாக இருந்து அனைவருக்கும் அப்பா ஸ்தானத்தில் இவர் செய்யும் செயல்கள் மற்றும் பாசத்தை பார்த்த ரசிகர்கள் பலர் இவருடைய உண்மையாகவே குணம் இது தான் என்று நினைத்து தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் தற்போது ஒரு சில வாரங்களாகவே இவருடைய வீட்டில் ஏற்பட்ட மரணங்கள் அவரை மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களையும் ஃபீல் பண்ண வைத்துள்ளது.

மாமியாரின் மறைவு
ஏற்கனவே கடந்த வாரம் தான் ஸ்டாலினின் பெரியம்மா இறந்து போயிருக்கிறார். அந்த துயரத்திலிருந்து இவர் இன்னும் மீளாத நிலையில் அடுத்ததாக அவருடைய வீட்டில் ஒரு மரணம் நடைபெற்று இருக்கிறது. அதை வருத்தத்தோடு தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இவர் போஸ்ட் போட்டு இருக்கிறார். அதைப் பார்த்ததும் ரசிகர்கள் பலர் இவருக்கு தொடர்ந்து ஆறுதல் கூறி வருகின்றனர். ஸ்டாலின் அவருடைய மனைவியின் அம்மாவானா சந்தன பிள்ளை என்பவர் இறைவனடி சேர்ந்துள்ளார். அதனால் தன்னுடைய மாமியாரின் இழப்பிற்கு மனைவிக்கு இவர் ஆறுதல் கூறியுள்ளார்.

ஆறுதல் கூறும் ரசிகர்கள்
ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கடந்த ஒரு வருடமாக பல நடிகர்கள் திடீர் மரணம் அடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் பல மாற்றங்களும் நிகழ்ந்துள்ளது. இந்தநிலையில் சீரியலில் நடிப்பவர்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் கூட சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதுவும் ஒரே வாரத்தில் ஸ்டாலின் வீட்டில் இரண்டு மரணங்கள் ஏற்பட்டது அவருடைய ரசிகர்களின் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மரணங்களும் சந்தோஷங்களும் அனைவர் வீட்டிலும் நடைபெறும் ஒன்றாக இருந்தாலும், தெரிந்தவர்கள் வீட்டில் ஏற்படுவது பலருக்கும் கஷ்டத்தை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது என்பது தற்போது தெரிந்து கொள்ள முடிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications