பாண்டியன் ஸ்டோரில் அடுத்தடுத்து அதிரடி.. இனிதான் சம்பவமே இருக்கு! இது எதிர்பார்க்காத கதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அதிரடியான பல திருப்பங்கள் வந்திருக்கிறது. ஏற்கனவே அரசியின் போலி திருமணம் மொத்த குடும்பத்திற்கும் தெரியவந்திருக்கும் நிலையில் இப்போது சுகன்யா பற்றிய உண்மைகளும் குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. இனி என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்பொழுது கதை வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒவ்வொரு விஷயமும் இப்போது பாண்டியன் குடும்பத்திற்கு தெரிய வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே செந்தில் பணம் கொடுத்து வேலையில் சேர்ந்த உண்மைகள் தெரிய வந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த உண்மைகள் தெரிவதற்கு எப்படியும் சில மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத மாதிரி மீனாவின் அப்பா வீட்டில் வந்து மொத்தம் உண்மைகளையும் உளறிவிட்டு போயிருந்தார்.

Pandian Stores Vijay TV

அதை தொடர்ந்து இப்போது அரிசியும் போலி திருமணம் செய்த விஷயம் தெரிய வந்திருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் வரதட்சணை மற்றும் கணவர் வீட்டில் நடக்கும் கொடுமையால் பெண்கள் படும் பாடுகளுக்கு வீட்டில் சொல்லாமல் எல்லா பிரச்சனையும் அவர்களே தலையில் சுமந்து கொண்டு தவறான முடிவு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு பொண்ணு கஷ்டத்தில் இருக்கும் போது அவருடைய குடும்பத்தினர் தான் ஆறுதலாக இருக்க வேண்டும் என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்போது அழகாக காட்டி இருக்கிறார்கள்.

அரசி தனக்கு தானே கட்டிக் கொண்ட உண்மை தெரிந்ததும் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்த பாண்டியன் அரசிடம் மனம் பெற்று பேசி இருக்கிறார். அதோட அரசி தவறான முடிவெடுப்பதற்கு காரணம் யாரு என்ற உண்மையையும் இப்போது கண்டுபிடித்து இருக்கின்றனர். அதாவது சுகன்யா தான் ஆரம்பத்தில் இருந்த அரசு மனதை மாற்றியது என்ற உண்மைகள் இப்போது மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்திருக்கிறது. ஏற்கனவே பழனியை சுகன்யா எதற்காக திருமணம் செய்தார் என்ற உண்மையை காட்டாமலேயே சஸ்பென்ஸாக வைத்திருந்த நிலையில் இனி அதுதான் நாளைக்கு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் இன்றைய எபிசோடின் கடைசியில் சுகன்யாவிடம் கோமதி கேள்வி கேட்பதற்கு தயாராக இருக்கிறார். இதனால் எதற்காக என்னுடைய குடும்பத்தை இப்படி பழிவாங்குன என்று சுகன்யாவிடம் கோமதி கேட்கும் போது சுகன்யா தனக்கு இருக்கும் கோபத்தை சொல்லுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பழனி சுகன்யாவை வீட்டை விட்டு துரத்துவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. வரும் வாரத்தில் இந்த சீரியல் பரபரப்பாக போகப்போகிறது என்று தெரிகிறது.

Pandian Stores Vijay TV

இனி ராஜி மற்றும் கதிர் உடைய திருமணம் பற்றிய உண்மைகளும் பாண்டியனுக்கு தெரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காரணம் ராஜி ஏமாந்த நகை இப்போது கொஞ்சம் திரும்ப கிடைத்திருக்கும் நிலையில் அந்த நகையை பழனியிடம் கொடுத்து ராஜியின் வீட்டில் கொடுக்க சொல்வதற்கு சொல்லி இருக்கிறார். இதனால் இந்த நகை எப்படி கிடைத்தது என்று கேள்வி இனி வரும். ஏற்கனவே பாண்டியனுக்கும் கதிருக்கும் தான் அடிக்கடி சண்டை வந்து கொண்டிருக்கும் இப்போது கதிர் பற்றிய உண்மைகள் பாண்டியனுக்கு தெரிய வரும்போது கதிர் மீது பாண்டியனுக்கு மேலும் பாசம் கூடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+