பாண்டியன் ஸ்டோரில் இனி நடக்கப்போவது இதுதான்! தங்கமயில் நிலைமை பாவம்.. ரகசியங்களை உளறிய கதிர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சரவணன் கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலில் இனி என்ன நடக்கப்போகிறது என்ற ரகசியங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். தங்கமயில் குடும்பத்தினரிடம் சிக்குவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் கதிர் சொன்ன தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைந்ததை தொடர்ந்து அதே பெயரில் அதில் நடித்த ஒரு சில நடிகர்களோடு இரண்டாவது பாகம் தொடங்கப்பட்டது. இரண்டாவது பாகத்தில் அதிகமான புது நடிகர்களும் புது கேரக்டர்களும் உருவாகி இருக்கின்றனர். இதில் ரசிகர்களிடம் அதிகமான திட்டு வாங்கும் கேரக்டர் என்றால் தங்கமயில் கேரக்டர் தான். தங்கமயில் வில்லியா? அல்லது வெகுளியா? என்று ரசிகர்கள் யூகிக்க முடியாத அளவிற்கு இவருடைய கேரக்டர் இருந்து வருகிறது.

இந்த சீரியலில் தன்னுடைய திருமண வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று தங்கமயில் பொய்மேல் பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறார். சரவணனை விட தங்க மயிலுக்கு வயது அதிகம், அதுபோல தங்கமயில் படிக்கவில்லை. பாண்டியன் எதிர்பார்த்ததுபோல குடும்ப சூழ்நிலையும் இல்லை.. எல்லாமே பொய்யாக சொல்லி சரவணனை திருமணமும் செய்து இருக்கிறார்.
அது போதாது என்று பாண்டியனிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று வீட்டில் மற்ற மருமகள்களை அடிக்கடி மாட்டி விடுகிறார். இதனால் தங்கமயில் மீது கோபப்படும் ரசிகர்கள் இந்த தங்கமயில் எப்ப தான் வீட்டில் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அதோடு சரவணன் தான் பாவம், தங்கமயில் ஏமாற்றுவது கூட தெரியாமல் வெகுளியாக இருக்கிறாரே என்று பலர் பீல் பண்ணி வருகிறார்கள்.

இப்படியான நிலையில் சரவணனாக நடிக்கும் விஜே கதிர் பேட்டி ஒன்றில் பேசியதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் இவ்வளவு நல்ல வரவேற்பு பெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பொதுவாக சீரியல்கள் மக்களிடம் பிரபலமாக வேண்டும் என்றால் குறைந்த பட்சம் இரண்டு வருடங்களாகும். ஆனால் எங்களுக்கு அதற்கு முன்பே மக்கள் மத்தியில் இவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அதோடு இனி தான் சீரியலில் ஆட்டமே அதிகரிக்க போகிறது. தங்கமயில் நிலைமை இனி மோசமாக இருக்கப் போகிறது. தங்கமயில் எங்களிடம் அதிகமாக பொய் சொல்லி இருக்கிறார். அனைத்து பொய்களும் இனி ஒவ்வொன்றாக உடைபட போகிறது. அப்போது தங்கமயில் பற்றிய மொத்த உண்மைகளும் தெரியும் போது சரவணன் என்ன ரியாக்ஷன் கொடுப்பார் என்பது எனக்கு தெரியாது, அதை இயக்குனர் அந்த நேரத்தில் தான் என்னிடம் சொல்வார். அது இப்போது இந்த சீரியலில் தங்கமயிலின் வயது தான் முதலில் தெரியவரும் என்று ரகசியங்களை உடைத்திருக்கிறார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications