பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் திடீர் திருப்பம்.. இனி தான் சம்பவமே இருக்கு! உடைய போகும் மொத்த உண்மைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நவம்பர் 18ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ராஜியை ஏமாற்றி விட்டுப் போன கண்ணனை ராஜி கண்டுபிடித்திருக்கிறார். உடனே கதிரோடு சேர்ந்து கண்ணன் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இந்த வாரத்தில் பெரிய சம்பவங்கள் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே செந்தில் கவர்ன்மென்ட் எக்ஸாம் எழுத போவது பற்றி பாண்டியன் ஊர் முழுக்க தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் மீனாவின் அப்பாவிடம் சென்று சவால் விட்டு இருக்கிறார்.

vijay tv pandian stores season 2 2

என்னுடைய மகன் எக்ஸாம் எழுதி கவர்மெண்ட் மாப்பிள்ளை ஆக வருவான் நீங்க மீனாவையும் என்னுடைய மகனையும் ஏற்றுக்கொண்டு அவர்களிடம் நல்லபடியாக பேச வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

ஏற்கனவே கடந்த வாரத்தில் ராஜி டியூஷன் தொடங்குவதற்கு பெரும் பஞ்சாயத்துக்கு மத்தியில் தான் பாண்டியன் சம்மதம் கொடுத்திருந்தார். அதோடு ராஜி டியூஷன் எடுப்பதை கூட ராஜியின் சித்தப்பா கிண்டல் செய்து கேவலப்படுத்தி இருந்தார். அதற்கு ராஜி பதிலடி கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் பல பரபரப்பான சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதாவது ராஜியை ஏமாற்றி விட்டு நகை பணத்தோடு ஓடிப் போன கண்ணனை ராஜி மீண்டும் பார்க்கிறார். ராஜியை பார்ப்பதற்கு முன்பு அந்த கண்ணன் இன்னொரு பெண்ணிடமும் திருச்செந்தூருக்கு வா நாம போய் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று ஏமாற்றி கூப்பிடுகிறார்.

எப்படி ராஜி போய் ஏமாந்தாரோ அதுபோல இன்னொரு பெண்ணும் ஏமாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் இன்று கண்ணன் ராஜி இடம் மாட்டி இருக்கிறார் .ராஜியை பார்த்ததும் கண்ணன் ஓடிப்போய்விட அவரை துரத்தி வந்த ராஜி கீழே விழுந்து விடுகிறார். அப்போது அந்த பக்கமாக வந்த கதிர் ராஜியிடம் என்னவென்று விசாரிக்க நான் கண்ணனை பார்த்தேன் என்று சொன்னதும் கதிரின் முகம் சுருங்கி போய்விடுகிறது.

கதிர் இப்போது ராஜியை காதலிக்க தொடங்கி இருக்கும் நிலையில் மீண்டும் இவர்களுடைய வாழ்க்கையில் கண்ணன் வருகிறார் என்றதும் கதிர் சோகமாகிறார். ஆனால் பிறகு ராஜி என்னை போல வேறு எந்த பெண்ணும் ஏமாறக்கூடாது அவன் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கணும் என்று சொன்னதும் சரி என்று கதிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போகிறார்.

அங்கு போன இடத்தில் அங்கிருக்கும் கான்ஸ்டபிள் ஒருவர் நீங்க பாண்டியன் மகன்தானே என்று கதிரிடம் கேட்கிறார். அந்த போலீசாரிடம் ஆமாம் என்று கதிர் சொல்லி இருந்தாலும் வெளியே வந்து ராஜியிடம் இந்த விஷயத்தை பற்றி வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.

இதனால் இவர்கள் இந்த விஷயத்தை மறைப்பதற்கு தான் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் போலீஸ் மூலமாக பாண்டியனுக்கு இந்த சம்பவம் தெரிய வரும்போது வீட்டில் பெரும் பூகம்பம் வெடிக்க இருக்கிறது. ஏற்கனவே ராஜி இன்னொருவரை நம்பி ஏமாந்து போன விஷயம் இப்போது குடும்பத்திற்கு தெரிய வருவதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

அதோடு ராஜி மற்றும் கதிர் திருமணத்தை நடத்தி வைத்தது கோமதி தான் என்ற உண்மை பாண்டியனுக்கு தெரிய வருமா? இல்லையா? என்ற பரபரப்பான தருணம் இந்த வாரத்தில் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+