Pandian Stores Episode: ராஜிக்கு மீனா மீது கோபம்! கதிர் எடுத்த முடிவு, பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இன்றைய (நவம்பர் 23) எபிசோடு ரொம்ப பரபரப்பாக போயிருக்கு! வீட்டுல ஒரு பக்கம் சண்டை, இன்னொரு பக்கம் கடையில சண்டைன்னு பாண்டியன் குடும்பமே வருத்தத்தில் இருக்காங்க.

மீனா விட்ட வார்த்தை, கதறி அழுந்த ராஜி
பழனி மாமா தனியா கடை திறந்த விஷயத்துல காந்திமதிக்கும், ராஜியின் அம்மா வடிக்கும் நடுவுல பெரிய சண்டையே நடந்துடுச்சு. முதல்ல காந்திமதியை பார்த்து கோமதி கண்டமேனிக்கு திட்டித் தீர்க்கிறாள். "பணத்தாசையை காமிச்சு என் பையனை பிரிச்சுட்டீங்கள்ள" என்றெல்லாம் ஆவேசமாப் பேச, மீனாவும் அத்தைக்கு சப்போர்ட் பண்ணி பேசுறாள்.
மீனாவின் தவறு
ஒரு கட்டத்துல கோமதி, ராஜியின் அம்மா வடிவிடம் வாக்குவாதம் செய்யும்போது, மீனாவும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி நீங்கள் ஒரு நல்ல அம்மாவா என்று பேசுறாள். சண்டை முத்திப்போய் மீனா, ராஜியின் அம்மாவை பார்த்து தவறான வார்த்தையை விட்டுடறாள். தன்னோட அம்மாவைப் பார்த்து மீனா இப்படி பேசுறதால ராஜி கடும் அதிர்ச்சி அடைகிறார்.
வடியும் அதுக்கு மேல எதுவும் பேசாம வீட்டுக்குள் போய்விடுறாள். "இனிமேல் உன் மூஞ்சிலயே முழிக்க மாட்டேன்" என்று கோமதி அவ அம்மாக்கிட்ட சொல்லிட்டு கிளம்பி போறார். இதனால காந்திமதி மனம் உடைந்து போய் வருத்தப்படுறார். மீனாவும் நடந்தத பிரச்சனைகளில் அதிர்ச்சியாகி, அங்க இருந்து குவார்ட்டஸ்க்குப் போய்விடுறாள்.
பாண்டியனின் கோபம்
இந்த சண்டை சலசலப்பு ஒரு பக்கம் இருக்க, கடையில பாண்டியனும் சரவணனும் இருக்கிறப்போ செந்தில் அங்க வர்றான். செந்தில், "நீங்க எதையும் நினைச்சு கவலைப்படாதீங்க, வேறொரு ஆளைக்கூட வேலைக்கு வைச்சுக்கலாம்" என்று அப்பாவுக்கு சப்போர்ட் பண்ணிப் பேச வர்றான். ஆனா, பாண்டியன் யாரையும் நம்பி இல்லைன்னு சொல்லி, "சின்னப் வயசுல இருந்தே ஆயிரம் துரோகத்தை நான் பார்த்து இருக்கேன் போடா போய் வேலை இருந்தால் பாரு" என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
கதிரிடம் குறை சொன்ன செந்தில்
இதனால் செந்திலும் கடுப்பாகி போகிறார். வெளியில கதிரை பார்த்துப் பேசும்போது, "நம்ம அப்பா திருந்தவே மாட்டாருடா" என்று எரிச்சலாக சொல்றார். அதுக்குக் கதிர், "நம்ம அப்பா எப்பவும் அப்படித்தான் அண்ணே. கஷ்டத்தை வெளிய காண்பிச்சுக்க மாட்டாரு. அதுனாலதான் அவர் பாண்டியன்" என்கிறார்.
பழனியை சந்தித்த கதிர்
எல்லாரும் பழனி மாமாவை தவறாப் புரிஞ்சுக்கிட்டாலும், கதிர் மட்டும் மாமாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறார். கதிர், "மாமா ஏதோ தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தால தான் கடை திறந்துருக்காரு அண்ணே" என்று செந்திலிடம் சொல்லிட்டு, மாமாவின் புதிய கடையை பார்க்க போறார்.
பழனி மாமா சோகமா இருக்க, கதிர் போய் சாதாரணமாக பேசுகிறார். கதிரை அங்க பார்த்ததும் சுகன்யா அதிர்ச்சி அடைஞ்சு, "நீ இங்க வர்றது உன் அம்மா, அப்பாவுக்குப் பிடிக்காதே" என்கிறார். அதுக்குக் கதிர், என்னால மாமாவை பார்க்காமல் இருக்க முடியாது என்று சொல்றார். மாமாவை சகஜ நிலைக்குக் கொண்டு வர முயற்சி செய்து பேசிக்கொண்டிருக்கிறான்.
அப்போதுதான் திடீரென்று குமார் அங்க வருகிறார். இவனுக்கு பழனி கடையில என்ன வேலைன்னு வந்ததுமே பிரச்சனையை ஆரம்பிக்கிறார். இதனால் நாளைக்கு 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பெரிய சண்டை ஒன்று நடக்கப்போகுது என்று தெரிய வருது.
-
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications