பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கதிருக்கு வந்த சோதனை.. மகனால் தெருவுக்கு வந்த பாண்டியன்! கோமதி சொன்ன வார்த்தை
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் 2025 ஜூலை 28ஆம் தேதிக்கான எபிசோடில், குடும்பத்தில் நடக்கும் சண்டைகள், வியாபார முயற்சி, மற்றும் அண்ணன்-தம்பி இடையேயான கருத்து வேறுபாடுகள் எனப் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பானது. கதிருக்கு வங்கி லோன் கிடைக்காமல் போகவே, கதிர் சோகமாக பைக்கில் கிளம்பிச் செல்கின்றார்.
கதிரின் லோன் முயற்சி
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், கதிரின் வியாபார கனவுகளுக்குக் கைகொடுக்க, பாண்டியன் வங்கியில் கையெழுத்துப் போட வருகிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக வங்கி லோன் கிடைக்காமல் போகவே, இருவரும் சோகமாக பைக்கில் கிளம்பிச் செல்கின்றனர். பாண்டியன் கதிரிடம், "நீ ஏன் இந்த டிராவல்ஸ் பிசினஸ் செய்ற? அதுக்கு மளிகைக் கடை இல்ல சூப்பர்மார்க்கெட் வைக்க வேண்டியதுதானே?" என்கிறார். ஆனால் கதிர், "அதெல்லாம் எனக்கு செட் ஆகாது," என்று மறுக்கிறார். பின்னர் பாண்டியன், "பேசாம அரியர்ஸை எழுதிவிட்டு நல்ல வேலைக்குப் போக வேண்டியதுதானே?" என்று மீண்டும் அறிவுரை கூறுகிறார். கதிர் விடாப்பிடியாகப் பேசவே, ஒரு கட்டத்தில் பாண்டியனை நடுவழியில் இறக்கிவிடுகிறார். இதனால் கோபமடைந்த பாண்டியன், "இனிமே உன் கூட வந்தா எனக்கு நெஞ்சுவலி வந்துடும்!" எனத் திட்டிவிட்டுச் செல்கிறார்.

சுகன்யா - பழனி - கோமதி மோதல்
மறுபக்கம், வீட்டில் பழனியும் கோமதியும் பேசிக்கொண்டிருக்கும்போது, சுகன்யா வருகிறார். "டீத்தூள் எங்கே இருக்கு?" எனக் கேட்க, "அங்கதான் இருக்கும், போய்ப் பாரு," என்று கோமதி அலட்சியமாகப் பதிலளித்து அனுப்பிவிடுகிறார். பின்னர் கோமதி பழனியிடம் பேசிவிட்டு கிச்சனுக்குள் செல்ல, சுகன்யா வந்து பழனியிடம் சத்தம் போடுகிறார். உடனே பழனி, "இப்போ நான் ஒரு சத்தம் கொடுத்தால் எங்க அக்கா வந்துடும். அது மாமாக்கு போன் பண்ணும். அவரு வந்து உன்னை உங்க வீட்டுக்கே அனுப்பிடுவாரு!" எனத் திட்டிவிடுகிறார்.
அந்த நேரத்தில் கோமதி வந்து, "என்ன பேசிட்டு இருக்க?" எனக் கேட்க, சுகன்யா, "என்ன, உங்க அக்கா முந்தானையைப் பிடிச்சிட்டே திரியறானு கேட்கிறார். உடனே கோமதியும் சுகன்யாவிடம் திமிராகத் திட்டிவிட்டு, "அப்படித்தான், என் தம்பி என்னுடன் தான் இருப்பான்!" எனச் சொல்லிவிட்டுச் செல்கிறார்.
கோமதியின் நகைச்சுவை
பின்னர், சரவணன் மற்றும் ராஜி இருக்க, கோமதி, "கதிர் என் புருஷனை ரோட்டில் இறக்கிவிட்டுச் சென்று இருக்கிறான். அவன் வரட்டும், இன்னைக்கு அவனுக்கு இருக்கு!" எனத் திட்டிக்கொண்டிருக்கிறார். கதிர் வீட்டிற்கு வந்தவுடன், அவரைச் செமையாகத் திட்டிக்கொண்டிருந்த கோமதி, பாசத்துடன் புடவையால் முகத்தைத் துடைத்து விடுகிறார். கதிரிடம் மெதுவாக நடந்த விஷயங்களைப் பேசத் தொடங்கி, பாண்டியனை நடுவழியில் இறக்கிவிட்ட விவகாரம் குறித்துக் கேட்டு, திட்டவும் செய்கிறார். இதைப் பார்த்த சரவணன் மற்றும் ராஜி சிரித்துக் கொள்கின்றனர்.
கதிரின் பிடிவாதம்
இறுதியாக, ரூமில் ராஜி லோன் குறித்துக் கேட்க, கதிர், "என் உழைப்பைப் பார்த்து லோன் கொடுப்பாங்க. அப்ப நான் அதை வாங்கிக்கிறேன். இனிமே எனக்காக நீ யாரிடமும் சென்று பேசாதே!" எனக் கூறிவிடுகிறார். இன்றைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' எபிசோட், கதிரின் பிடிவாதமான குணம், அண்ணன்-தம்பி இடையேயான அன்பு சண்டை, மற்றும் குடும்பத்தில் நடக்கும் அன்றாடப் பிரச்சனைகள் என விறுவிறுப்பாக நகர்ந்து, அடுத்தடுத்த திருப்பங்களுக்கான எதிர்பார்ப்புடன் நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications