பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: அரசி மீது பொறாமையில் தங்கமயில் போட்ட நாடகம்! ராஜி எடுத்த அதிரடி முடிவு! மீனா கொடுத்த ஐடியா!
சென்னை:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலின் இன்றைய எபிசோடில் அரசின் மீது பொறாமைப்படும் தங்கமயில் புது நாடகம் போடுகிறார் அதை சரவணன் கண்டுபிடிக்கிறார். அதே நேரத்தில் ராஜ் எடுத்த முடிவால் பிரச்சனை வரப்போகிறது. என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், கோமதி மற்றும் தங்கமயில் சமைத்துக் கொண்டிருக்கின்றனர். துணி எடுக்க வெளியில் போன மயில், சரவணன் அரசியுடன் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு பொறாமையாக உணர்கிறார். சுற்றிச் சுற்றி சரவணன் பக்கமே நிற்கிறார். பின்னர் கிச்சன் செல்ல, டைனிங் டேபிளில் மீனா வந்து அமர்ந்து சரவணன் மற்றும் அரசியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். பாண்டியன் ஸ்வீட், ஸ்நாக்ஸ் வாங்கி வந்து கொடுக்க, எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மயில் அவர்களைப் பார்த்துக் கொண்டே நிற்கிறார்.

மயிலின் பொறாமை
பின்னர் ரூமிற்குள் வந்த மயில், "எல்லாரும் பேசிக்கிறாங்க. என்னிடம் யாருமே பேசவே இல்லை," எனக் கடுப்பாகப் புலம்புகிறார். அப்போது சரவணன் வந்து மயிலிடம் பெரிதாகப் பேசிக்கொள்ளாமல் படுத்து விடுகிறார். மயில் கடுப்புடன் எழுந்து போக, காலில் தட்டிக்கொண்டு, "அய்யோ வலிக்கிதே!" எனக் கத்தத் தொடங்குகிறார். சரவணன் "என்ன ஆச்சு?" எனக் கேட்க, "என்னால் முடியலை," என மயில் புலம்ப, வீட்டில் இருப்பவர்களும் அங்கு வந்து விடுகின்றனர்.
சரவணன் உடனான புதிய மோதல்
கோமதி ஐஸ் பேக்கை எடுத்து வரச் சொல்லி மீனாவை அனுப்பிவிட்டு, மயிலைப் பார்த்துக் கொள்கிறார். பின்னர் சரவணனிடம், "இதை மசாஜ் செய்துவிடு," எனக் கொடுத்துவிட்டு அவரும் செல்கிறார். "இவளுக்கு என்ன இதே வேலையா போச்சா?" என்று யோசித்தவாறே, சரவணன் மயில் காலை அமுக்கிக் கொண்டிருக்க, அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இது மயில் - சரவணன் உறவில் ஒரு புதிய விரிசலை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராஜியின் அதிரடி முடிவு
மறுபக்கம், ராஜி மற்றும் மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராஜிக்குத் தொலைந்து போன நகை கிடைத்த விஷயத்தைக் கூறுகிறார். ஆனால், கதிரின் பிசினஸ் பிரச்சனையால் அந்த நகையைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாகச் சொல்கிறார். மீனா யோசனையாகப் பார்க்க, ராஜி, "மத்த நேரம் நான் கொடுத்திருப்பேன். இப்போ கதிருக்கு வேண்டும் தானே என்பதால் இதைச் செய்யப் போறேன். தொலைஞ்ச நகை தொலைஞ்ச மாதிரியே இருக்கட்டும்," என்கிறார்.
"கதிர் இதுக்கு என்ன சொல்வான்?" எனக் கேட்க, "அவன் ஒப்புக்கொள்ள மாட்டான்," என்கிறார் ராஜி. "அப்போ என்ன செய்றது?" என்று மீனா கேட்க, "பார்த்துக் கொள்ளலாம். இப்போ அவன் பிசினஸுக்கு இது தேவை," என ராஜி உறுதியாகச் சொல்ல, மீனாவும் அதைக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
கதிரின் பிசினஸுக்காக ராஜி எடுக்கப்போகும் இந்த அதிரடி முடிவு, குடும்பத்தில் மேலும் என்னென்ன பிரச்சனைகளை உருவாக்கும்? கதிர் இந்த முடிவை ஏற்றுக்கொள்வாரா? என்பதை அடுத்தடுத்த எபிசோட்களில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications