பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: ராஜி செய்த வேலையால் அவமானப்படும் பாண்டியன்.‌. கதிர் எடுக்கும் முடிவு! சந்தோஷத்தில் சக்திவேல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ஜூலை 30-ம் தேதிக்கான எபிசோடில், குடும்ப உறவுகளின் சிக்கல்கள்,கதிருக்காக ராஜி செய்த வேலையால் சக்திவேல் மற்றும் பாண்டியன் குடும்பம் இடையே ஒரு பெரும் மோதலை வெடிக்க வைக்கப் போவது உறுதி. சக்திவேல் கண்டுபிடிக்கப் போகும் உண்மை, மொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தப் போகிறது.

நகையை விற்கப் போன ராஜி

இன்றைய எபிசோடின் தொடக்கத்தில், ராஜி மற்றும் மீனா இருவரும் நகையை விற்க ஒரு ஃபைனான்ஸ் நிறுவனத்திற்குச் செல்கின்றனர். மீனாவிற்கு வேலைக்கு தாமதமானதால், ராஜி மட்டும் நகையை விற்கக் காத்திருக்கிறார். ராஜி கொண்டு வந்த நகையை செக் செய்யும் நபர்களிடம் கொடுக்கிறார். அதேசமயம், ஃபைனான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருடன் சக்திவேல் பேசிக்கொண்டிருக்கிறார். வியாபாரத்தில் லாபம் இல்லை என்று சக்திவேல் கவலைப்பட, "இப்பலாம் மக்கள் உஷாரா மாறிட்டாங்க, பேங்கிற்கு போய்டுறாங்க," என்று பதில் வருகிறது. பினாமியாக ஃபைனான்ஸைத் தொடங்கியது சக்திவேலின் திட்டம் என்பதும், அதனாலேயே இந்த லாபக் குறைவு அவரைப் பாதிக்கிறது என்பதும் வெளிப்படுகிறது.

Pandian Stores Vijay TV

மாட்டிக்கொண்ட ரகசியம்

அந்த சமயத்தில் சக்திவேல் ராஜியைப் பார்த்துவிட, "இவ எதுக்கு இங்க வந்திருக்கா?" என அருகில் இருந்தவரிடம் கேட்கிறார். அவர் ராஜி நகையை விற்க வந்திருப்பதாகச் சொல்ல, சக்திவேல் அந்த நகையைப் பார்த்ததும் அது தன் வீட்டு நகை என்பதை கண்டுபிடித்து விடுகிறார்! உடனே, "சாயந்திரம் வந்து பணத்தை வாங்கிக்க" என்று ராஜியை ஏமாற்றி அனுப்பி வைக்கின்றனர். தன் திட்டம் வெற்றி பெற்றதாக நம்பி, ராஜி சென்று விடுகிறார்.

சக்திவேலின் வீட்டுக்கு வந்த அதிர்ச்சி செய்தி

வீட்டிற்குத் திரும்பிய சக்திவேல், எல்லாரையும் அழைத்து, "ஒரு சந்தோஷமான செய்தி!" எனக் கூறுகிறார். வெற்றிவேல் வர, ராஜி கொடுத்த அந்த நகையை எடுத்துப் போடுகிறார் சக்திவேல். அங்கிருந்த பெண்கள் நகையை அடையாளம் கண்டுகொண்டு, "இது ராஜிக்கு கல்யாணத்துக்குப் போட்ட நகை!" என உறுதிப்படுத்துகின்றனர். சக்திவேல், "நகை முதலில் விற்றுவிட்டதாகச் சொன்னாங்க. அப்புறம் காணாம போச்சுனு சொன்னாங்க. ஆனா எல்லாத்தையும் வீட்டில வச்சி இருந்து இருக்காங்க!" எனக் கோபத்துடன் தெரிவிக்கிறார்.

"என்னடா சொல்ற?" எனக் கேட்டு, அப்பத்தா, "அப்படி அந்த நகை உன் கையில் எப்படி வந்துச்சு?" எனக் கேட்கிறார். ஃபைனான்ஸ் கடையில் நடந்த விஷயங்களை மொத்தமாகச் சொல்லி விடுகிறார் சக்திவேல். "பார்த்ததுமே சந்தேகம் வந்து விட்டது. அதான் எடுத்துட்டு வந்தேன்," என்று அவர் சொல்கிறார். ஆனால், 60 சவரன் நகையில் 32 சவரன் தான் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

பாண்டியன் வீட்டு வாசலில் வெடித்த வாக்குவாதம்

அதிர்ச்சியில் உறைந்திருக்கும் குடும்பத்திடம், சக்திவேல் கோபமாக, "வா, மிச்சத்தைப் போய் கேட்கலாம். என் பையனைக் கடத்தல்காரனு சொன்ன அந்த குடும்பத்தை திருடன்னு சொல்லியே ஆகணும்," என்கிறார். "அண்ணன் வாங்க, நான் கேட்கணும்," என சக்திவேல் கத்திக்கொண்டிருக்கிறார். வெற்றிவேல் அமைதியாக நிற்க, சக்திவேலின் கோபம் அதிகரிக்கவே செய்கிறது.

எல்லாரும் சொல்லியும் கேட்காமல் பாண்டியன் வீட்டிற்கு முன் போய் வம்புக்கு நிற்கிறார் சக்திவேல். பாண்டியனை கேவலமாக திட்டத் தொடங்க, முதல் ஆளாக ராஜி மற்றும் கதிர் வருகின்றனர். கதிர், "என்ன பேசிட்டு இருக்கீங்க?" எனக் கேட்க, சக்திவேல் ராஜி நகையை விற்க வந்த கதையைச் சொல்லி விடுகிறார். "கோமதி, என்ன பழி போடுறீயா?" எனக் கேட்க, சக்திவேல், "உன்கிட்ட பேச்சே இல்ல. அந்த பாண்டியனை வரச்சொல்லு! அவன் வரணும்! வந்தே ஆகணும்!" என ஆவேசப்படுகிறார். கோமதி உடனே பாண்டியனுக்குக் கால் செய்து சக்திவேலின் சண்டையைப் பற்றி சொல்கிறார்.

மீனாவிற்கு ராஜி கொடுத்த அழைப்பு

அதேநேரம், ராஜி தன் அறைக்குச் சென்று மீனாவுக்குக் கால் செய்கிறார். நகை விஷயம் குறித்து அவரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார். மீனா, "நீ தைரியமா இரு. நான் உடனே வரேன்," எனச் சமாதானம் சொல்லி வைக்கிறார்.

பாண்டியன் குடும்பத்தின் மீது சக்திவேலின் கோபம் எந்த அளவு வெடிக்கப் போகிறது? காணாமல் போன நகையின் மீதிப் பகுதி எங்கே? மீனா வந்து இந்த சிக்கலை எப்படிச் சமாளிக்கப் போகிறார்? என்பதை பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன் வரவிருக்கும் எபிசோட்களில் காணலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+