பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய அப்டேட்: பாண்டியன் எடுத்த முடிவு! கலங்கி நிற்கும் சரவணன்.. சிக்கலில் கதிர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஏப்ரல் 17ஆம் தேதிக்கான எபிசோடில், நல்லது செய்த கதிருக்கு கெட்ட பெயர் கிடைக்கிறது. அதேபோல தங்கமயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவால் சரவணன் கலங்கி போய் நிற்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Pandian Stores 2 serial Pandian Stores serial 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயம் உண்மைதான் என்று மீனா சொன்னதை கேட்டு சரவணன் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார். மறுபக்கத்தில் திருச்சிக்கு ட்ரீட்மென்ட்க்காக போன முத்து வேலுவும், கதிரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

கதிர் சொன்ன ஆறுதல்

அப்போது கதிர் முத்துவேலுக்கு ஆறுதலாக பேசிக் கொண்டிருக்கும்போது நீ இந்த விஷயத்தை பற்றி வீட்டில் சொன்னியா என்று கேட்க, அதற்கு கதிர் இல்லை... நான் எந்த விஷயத்தையும் ராஜியிடம் மறைத்ததே கிடையாது. ஆனால் நீங்கள் இந்த விஷயத்தை சொல்லக்கூடாது என்று சொன்னதால நான் எதுவும் சொல்லல என்று சொல்கிறார்.

பிறகு என் மேல உனக்கு கோபம் இல்லையா? என்று முத்து கேட்க, அதற்கு கதிர் உங்க மேல நான் கோபப்பட முடியாது. நீங்க என்ன இருந்தாலும் என்னுடைய தாய் மாமா. அன்னைக்கு நாங்க எல்லாரும் கஷ்டத்தில் இருக்கும்போது நீங்க ஒரு நாள் முழுக்க ஸ்டேஷனில் காத்திருந்தீர்களே, அதை எல்லாம் மறக்க முடியுமா என்று சென்டிமண்டாக பேசிக் கொண்டிருக்கிறார்.

சரவணன் முடிவு

மறுபக்கத்தில் சரவணன் கடைக்கு சோகமாக வர செந்தில் அவரிடம் மன்னிப்பு கேட்கிறார். அப்பா உன்கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொன்னதால தான் நான் உன்கிட்ட எதுவும் சொல்லல, வீட்டுல என்ன நடந்தது இனி குழந்தைக்காக தங்கமயில் எத்துக்குவியா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க அதற்கு சரவணன் அந்த குழந்தை என்னுடையது, அந்த குழந்தைக்காக என்ன வேணாலும் செய்வேன் ஆனால் தங்கமயில் உடன் இனி என்னால் வாழ முடியாது அவளை ஏத்துக்கவே மாட்டேன் என்று உறுதியாக சொல்லி விடுகிறார்.

Pandian Stores 2 serial Pandian Stores serial 2

பாவம் கதிர்

கடைசியாக முத்துவேலும் கதிரும் வீட்டுக்கு வருகின்றனர். ஆனால் ரோட்டில் காரில் இருந்து இறங்கிய கதிரும் முத்துவேலும் பேசிவிட்டு முத்துவேல் முன்னாடி போக கதிர் பின்னாடி போகிறார். அப்போது இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்து கடுப்பான முத்துவேலின் தம்பி உடைய சட்டையை பிடித்து அடிக்க போகிறார். நீ சொத்துக்காக என் அண்ணன் கூட சுத்திக்கிட்டு இருக்கியா என்று கேட்கிறார். இப்படியாக எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+