Pandian Stores 2: கர்ப்பம் எல்லாம் பொய்! மயிலால் கோபத்தில் சரவணன்! கோமதி எடுக்கும் முடிவு
சென்னை, ஆகஸ்ட் 18, 2025: விஜய் டிவியில் ரசிகர்களின் விருப்பமான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இன்றைய எபிசோடில் மயில் கர்ப்பமாக இல்லை என்ற உண்மை வெளிவர சரவணன் கோபமடைகிறார். இனி குடும்பத்தினர் எல்லாம் முடிவெடுக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

மயில் கர்ப்பமாக இல்லை
இன்றைய எபிசோடு ஆரம்பித்தில், மயில் நாள் தள்ளிப் போனதால் செக் பண்ணிப் பார்த்ததில் இரண்டு கோடு வந்திருப்பதாக அவரது அம்மா டாக்டரிடம் கூறுகிறார். ஸ்கேன் செய்து பார்க்கலாமா என்று கேட்கிறார். டாக்டர் மயிலை ஸ்கேன் பண்ணிப் பார்க்கிறார். அதைப் பார்த்த பிறகு டாக்டர் மயில் கர்ப்பமாக இல்லை என்று சொல்கிறார். இதைக் கேட்ட மயிலின் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள்.
மயிலும் சரவணனும்
டாக்டர் சொன்னதை கேட்டு மயில் அழுது கொண்டிருக்கிறார். சரவணன் மயிலிடம் பேசாமலே கோபமாக அங்கிருந்து செல்கிறார். கதிரும் ராஜியும் ஹாஸ்பிடல் போய் சரவணனை பார்த்து என்ன நடந்திச்சு என்று கேட்கிறார்கள். கோமதி கதிர் கிட்ட மயில் கர்ப்பமாவே இல்லை என்று சொல்லி அழுதுகொண்டிருக்கிறார். கோமதி டாக்டரிடம் ஒரு வேலை தங்கமயில் கர்ப்பமாக இருந்து அபார்ஷன் ஆகி இருக்குமோ என்று கேட்க, அதற்கு டாக்டர் அதற்கு வாய்ப்பு இல்லை அவங்க கர்ப்பமாகவே இல்லை என்று சொல்லி விடுகிறார். இதனால் சரவணன் கோபமாக அங்கிருந்து கிளம்புகிறார்.
சரவணனின் கோபம்
கதிர் சரவணனை பார்த்து வீட்டுக்கு வா என்கிறார். மேலும் "உனக்கு இரண்டு குழந்தை கண்டிப்பாக பிறக்கும்" என்று சொல்கிறார். சரவணன் மயில் வீட்டுக்கு வருவதற்காக தான் இப்படி பொய் சொல்லியிருக்கா என்று நினைக்கிறார். கோமதி சரவணன் நிலைமையை பார்த்து அழுது பிறகு வீட்டிற்கு வந்தும் எல்லோரும் சோகமாக புலம்பி கொண்டிருக்கின்றனர். அப்போது அழுது கொண்டிருக்கும் தங்க மயிலுக்கு அரசி ஆறுதல் கூறுகிறார். அப்போது ராஜி மீனாவுக்கு போன் பண்ணி நடந்த எல்லாவற்றையும் சொல்கிறார். பிறகு மயில் "மாமா எங்கிட்ட பேசாம போயிட்டாரு" என்று சொல்லி அழுகிறார். இதுதான் இன்றைய எபிசோட். அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஒவ்வொரு உண்மையாக வெளியே வந்து கொண்டிருக்கிறது. அரசி மற்றும் குமாருடைய பொய் திருமணம் விஷயம் வெளியே தெரிய வந்ததும் அதற்கு பிறகு அரசிக்காக மொத்த குடும்பத்தினரும் சப்போர்ட் செய்கின்றனர். அதை தொடர்ந்து அடுத்த வாரமே ராஜி மற்றும் கதிருடைய பொய் திருமணம் விஷயம் வெளியே தெரிந்தது. இதைத் தொடர்ந்து இப்போது தங்கமயில் கர்ப்பமாக இல்லை என்பது மட்டும் தெரிய வந்திருக்கிறது. தங்கமயில் படிக்கவில்லை என்று உண்மையும் சரவணனைவிட வயது வித்தியாசம் அதிகம் என்ற உண்மையும் குடும்பத்தினருக்கு தெரிய வரும்போது பாண்டியன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications