Pandian Stores 2: ராஜி விஷயத்தில் வந்து சிக்கிய மயில்.. அடுத்த பிரச்சனை இவருக்கு தானா? பாண்டியன் எடுக்கும் முடிவு
சென்னை: ஆகஸ்ட் 2, 2025: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' தொடரின் இன்றைய எபிசோடு, ராஜியின் கடந்த காலம் குறித்த உண்மை வெளிவந்த பிறகு, குடும்பத்தினரிடையே ஏற்பட்ட குழப்பங்களையும், கதிரின் தியாகத்தையும் மையமாகக் கொண்டிருந்தது. ராஜி சொன்ன உண்மையை சக்திவேல் நம்ப மறுப்பதும், அதே சமயம் முத்துவைக் காப்பாற்ற கதிர் எடுக்கும் முயற்சியும் இன்றைய எபிசோடில் முக்கிய அம்சமாக அமைந்தது.
சக்திவேல் - பழனியின் வாக்குவாதம்
இன்றைய எபிசோடின் தொடக்கத்தில், ராஜி சொன்ன கதையைக் கேட்டு அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். அங்கு வரும் சக்திவேல், "எதுக்கு எல்லாரும் இப்படி யோசிச்சிட்டு இருக்கீங்க? அந்த ஓடுக்காளி சொன்னது உண்மைனு நினைக்கிறீங்களா? அதெல்லாம் சுத்தப் பொய்," என்று கோபத்துடன் கூறுகிறார். அப்போது அங்கு வரும் பழனி, "போதும் அண்ணா. நீங்க பேசுனதை நிறுத்துங்க. ராஜி சொன்னது முழுக்க முழுக்க உண்மை," என்கிறார்.

"ஏன்? உன்னை சொல்ல சொல்லி அனுப்பினாளா?" என்று சக்திவேல் கேட்க, "நானே ராஜி இன்னொரு பையன் லவ் செஞ்சதை பார்த்து இருக்கேன். கதிரும் அந்த பையனைப் பத்தியும், அவன் கேரக்டரைப் பத்தியும் சொல்லி இருக்கான். ஆனா திடீர்னு ஒருநாள் மாலையோடு வந்து நின்னப்ப எனக்கு எதுவும் புரியலை. நான் கேட்டப்ப கூட ரெண்டு பேரும் காரணம் சொல்லி தான் சமாளிச்சாங்க," என்று பழனி கூறுகிறார். இதனால், ராஜி சொன்னது உண்மையாகத்தான் இருக்கும் என்று பழனி சொல்ல, சக்திவேல் அதை நம்ப மறுக்கிறார்.
"இப்போ என்ன? அவளை அழைச்சிட்டு வந்து விருந்து போடணுமா? என் பையன் ஜெயிலில் இருப்பதே இங்கே யாருக்கும் நியாபகமே இல்லையே," என்று சக்திவேல் ஆவேசப்படுகிறார். அதற்கு அப்பத்தா, "இப்போ யாரும் விருந்து போட சொல்லலை. குமாரையும் யாரும் மறக்கலை," என்று சமாதானப்படுத்த முயல்கிறார். முத்துவேல் பேச வர, "உங்களுக்குப் பொண்ணு பாசம் குழந்தை பெத்த பிறகுதான் வரும்னு நினைச்சேன். இப்பவே வரும்னு நினைக்கலை," என்று சக்திவேல் அழுதுவிட்டுச் செல்கிறார்.
மயில் வந்ததால் மறைக்கப்பட்ட உண்மை
பின்னர், மீனா டீ குடிக்க, அங்கு ராஜி வருகிறார். கோமதியும் வர, மூவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். "என் மேல எதுவும் கோபமா அத்தை?" என்று ராஜி கேட்க, "அதெல்லாம் இல்ல. நீ அதை பத்தி ஏன் யோசிக்கிற? மாமா பார்த்துப்பாரு," என்று கோமதி ஆறுதல் கூறுகிறார். "நல்லவேளை நீ நான்தான் செஞ்சு வச்சேன்னு சொல்லி இருந்தா நான் காலியாகிருப்பேன்," என்று கோமதி சொல்ல, மீனா, "தெரிஞ்சா மட்டும் வெளியவா அனுப்பிடுவாரு? 10 நாளு பேசாம இருப்பாரு. அப்புறம் பழையபடி கோமதின்னு தான் வருவாரு," என்று ஜாலியாகப் பேசுகிறார்.
அப்போது அங்கு மயில் வர, எல்லோரும் பேச்சை மாற்றுகின்றனர். "நீ போய் ரெஸ்ட் எடு. நாங்க சமைச்சிக்கிறோம்," என்று கோமதி சொல்கிறார். "என்னை ஏன் துரத்துறீங்க? நீங்க எதோ பேசிட்டு இருந்தீங்களே. நான் வந்த பிறகு மாத்துனீங்க," என்று மயில் கேட்க, "அத்தை திட்டியதாக" மீனா சமாளிக்கிறார். "இல்லையே, நல்லதா தானே பேசுனாங்க," என்று மயில் குழம்ப, "மாமியார் பேசினாலே திட்டுற மாதிரிதானே இருக்கும்," என்று கோமதி சமாளித்து மயிலை அனுப்பி வைக்கிறார்.
கதிரின் முயற்சி
பின்னர், ராஜி மற்றும் கதிர் பேசிக்கொண்டிருக்கின்றனர். "உனக்கு என் மேல் கோபமா?" என்று ராஜி கேட்க, "இப்போ இந்தக் கல்யாண கதையை சொல்லணுமா?" என்று கதிர் கேட்கிறார். "நம்ம கல்யாண ரகசியம் தெரியாம தானே அரசிக்குக் குமார் அப்படி செஞ்சான். என்னோட அண்ணன் இப்போ ஜெயிலில் இருக்கான். அவன் வாழ்க்கையும் கஷ்டத்தில் இருக்கு. இந்த விஷயம் தெரிஞ்சா அவனும் அவன் வாழ்க்கையைப் பார்த்துட்டு ஒழுங்கா இருப்பான்," என்று ராஜி கூறுகிறார். இதைக்கேட்டு ராஜி அழ, கதிர் அவரைச் சமாதானப்படுத்துகிறார்.












Click it and Unblock the Notifications