Pandian Stores 2: குமாருக்காக கெஞ்சிய அம்மா, ஆனால் ராஜி சொன்ன முடிவு! பயத்தில் உறைந்த பாண்டியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட், செந்திலின் திடீர் செயல்களால் பரபரப்பும், உணர்ச்சிப்பூர்வமான தருணங்களும் நிறைந்திருந்தது. ராஜியின் குடும்பத்திற்கு இடையேயான பிரச்சனை தொடர்ந்து நீடிக்கிறது.

Pandian Stores Vijay TV

ராஜி-குமாரின் தாயார் மோதல்

இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில், குமாரின் அம்மா, ராஜியிடம், "நீதான் எப்படியாவது உங்க வீட்ல பேசி, இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்" என்று கெஞ்சுகிறார். நீ கல்யாணத்துக்கு முந்தின நாள் ஓடிப்போகாமல் இருந்திருந்தால் உங்க அண்ணன் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க மாட்டேன். உனக்கு எப்படி சின்ன வயசுல இருந்தே அந்த வீட்டுக்காரங்க எதிரின்னு சொல்லி வளர்த்தார்களோ அதே போல தானே உன்னுடைய அண்ணனுக்கும் சொல்லி வளர்த்தாங்க.

நீ திடீர்னு கல்யாணம் பண்ணி வந்ததுனால நம்ம குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டோம், எவ்வளவு அவமானப்பட்டோம்? அந்த அவமானத்தால் தான் குமார் இப்படி செஞ்சுட்டான். குமாரு செஞ்சது நல்லதுன்னு நான் சொல்லல ஆனா அவன் இப்படி முடிவெடுக்க காரணம் நீதான். அவன் இப்ப திருந்திட்டான். எப்படியாவது குமார் மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்க சொல்லு என்று மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் ராஜியின் காலில் விழுகிறார். ஆனால், ராஜி அதற்கு மறுத்து, "அரசிக்கு நடந்தது சின்ன விஷயமா? நான் பேசுறதுக்கு முடியாது. மேலும், கேஸை வாபஸ் வாங்கச் சொல்லி வீட்டில் கேட்க முடியாது" என்று உறுதியாகக் கூறுகிறார். ராஜியின் இந்த பதிலால் ஏமாற்றம் அடைந்த குமாரின் தாயார், கோபத்துடனும், கண்ணீருடனும் அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

செந்திலின் சர்ப்ரைஸ்

அடுத்ததாக இரவு நேரம் ஆகியும் செந்திலைக் காணாததால், வீட்டில் உள்ள அனைவரும் கவலைப்படுகிறார்கள். மீனா விட போன் பண்ணி பார்க்க சொல்லி எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, செந்தில் தன்னுடைய சம்பளப் பணத்தில் வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு வந்து அனைவரையும் கூப்பிடுகிறார். அது தெரியாத பாண்டி என் வீட்டு வாசலுக்கு வந்தவன் வீட்டுக்குள்ள வரமாட்டானா இவன ஆரத்தி எடுத்து தான் கூப்பிடனுமா என்று திட்டிக் கொண்டிருக்கிறார். பிறகு வெளியே சென்று செந்தில் வாங்கி வந்ததை பார்த்த குடும்பத்தினர், "என்ன இவ்வளவு பொருட்களைக் கொண்டு வந்திருக்கீங்க?" என்று ஆச்சரியத்துடன் கேட்கின்றனர்.

செந்தில் வாங்கிய ஒவ்வொரு பொருளையும் குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறார். எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள். செந்திலின் மகிழ்ச்சியான செலவைப் பார்த்த பாண்டியன், "எதுக்கு இப்படி எல்லாம் காச செலவு பண்ற?" என்று கோபத்துடன் கேட்கிறார். அதற்கு செந்தில், "நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்" என்று சொல்கிறான்.

செந்தில் வருத்தம்

பின்னர், செந்தில் மீனாவிடம், "அப்பா ஏன் இப்படி எல்லாம் பண்றார்?" என்று வருத்தத்துடன் கேட்கிறான். அதற்கு மீனா, "மாமா இப்படி எல்லாம் செலவு பண்ணது இல்லை. அதனாலதான் நீங்க இப்படி செய்ததும் பயந்துட்டாங்க" என்று சமாதானப்படுத்துகிறாள்.

செந்திலின் திடீர் செலவு, குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், பாண்டியனின் மனதில் பயத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம், குடும்ப உறவுகளில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பது இனிவரும் எபிசோட்களில் தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+