பாண்டியன் ஸ்டோர்ஸ்: கதிருக்காக பிரச்சனையில் சிக்கும் ராஜி.. குமார் சொன்ன விஷயத்தால் அதிர்ச்சியில் குடும்பம்!
சென்னை: விஜய் டிவியின் புகழ்பெற்ற தொடரான 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இன்றைய எபிசோடில், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் உணர்வுபூர்வமான நிகழ்வுகளால் பரபரப்பாக ஒளிபரப்பானது. முத்துவேல் வீட்டில் நடந்த திருமணப் பேச்சு மற்றும் ராஜியின் புதிய முயற்சி ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

மீனா - செந்தில் மோதல்
இன்றைய எபிசோடின் தொடக்கத்தில், செந்தில் மீனாவைச் சமாதானப்படுத்த முயல்கிறார். தான் பரிசுப் பொருள் வாங்கி பணத்தை வேஸ்ட் பண்ணிட்டேன்னு கோபம் இன்னும் மீனாவிற்கு குறையவில்லையா என்று செந்தில் கேட்கிறார். அதற்கு மீனா, "உங்களிடம் இப்போது பேசி ஏன் வீணாக டென்ஷன் ஆக வேண்டும்?" என்று பதிலளிக்கிறார். அப்போது நான் புதுசா வாங்கிய ஹேண்ட் பேக்கை ஆபீசுக்கு கொண்டுட்டு போகலையா என்று கேட்க, அவ்வளவு விலை உயர்ந்த பேக்கை ஆபிசுக்கு டெய்லி கொண்டுட்டு போவாங்களா என்று மீனா கேட்க, இந்த பேக்குக்கு ஏதாவது ஆகுனா கூட இன்னும் ரெண்டு மாசத்தில் அதைவிட ரேட் கூடுனா ஒரு பேக் வாங்கிக்கலாம் என்று சொன்னதும் மீனா கோபப்படுகிறார்.
பின்னர், செந்திலிடம், "உங்களுடன் வேலை செய்பவர்களிடம் வாங்கிய பணத்தை உடனடியாகத் திருப்பி கொடுங்க" என்று கூறி, மீனாபணத்தை நீட்டுகிறார். ஆனால், செந்தில் அதை எல்லாம் தானே பார்த்துக்கொள்வதாகச் சொல்கிறார். சிறிது நேரத்திற்கு பிறகு மீனா கொடுத்த பணத்திலிருந்து கொஞ்சம் பணத்தை பெட்ரோல் போடுவதற்காக
வாங்கிக் கொண்டு போகிறார்.
முத்துவேல் வீட்டில் திருமணப் பேச்சு
அடுத்ததாக முத்துவேல் வீட்டிற்கு குமாருக்காக பெண் பார்க்க வருகிறார்கள். பெண் வீட்டார், குமார் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டுபோய் திருமணம் செய்து கொண்டாரா? என்று கேட்கிறார்கள். அதற்கு சக்திவேல், "குமார் அப்படிப்பட்டவன் இல்லை. அவன் ஒரு நல்ல பையன்" என்று விளக்கம் கொடுக்கிறார். பின்னர், குமார் வீட்டுக்கு வந்ததும், சக்திவேல் அவரிடம் பெண் வீட்டார் வந்திருப்பதைச் சொல்கிறார். அப்போது, பெண் வீட்டார், "குமாரின் வழக்கு விரைவில் முடிந்துவிடுமா?" என்று கேட்கிறார்கள். அதற்கு சக்திவேல், "அதெல்லாம் சீக்கிரம் முடிந்துவிடும்" என்கிறார்.
குமாரின் அதிர்ச்சியான முடிவு
எல்லோரும் எதிர்பார்த்திராத விதமாக, குமார், "எனக்கு இப்போது திருமணம் செய்துகொள்ள சுத்தமாக விருப்பம் இல்லை" என்று சொல்கிறார். அதைக் கேட்டு வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்கள். அதனால் சக்திவேல் குமாரை திட்டி கொண்டிருக்கிறார்.
கதிருக்கு உதவும் ராஜி
இதனிடையே, சுகன்யா வீட்டிற்கு வந்து அரசி இடம் நடந்த விஷயங்களை எல்லாம் சொல்கிறார். அப்போது, சுகன்யாவின் நடவடிக்கையை பார்த்து சந்தேகப்படும் மீனா ராஜியிடம் சொல்லிவிட்டு, இருவரும் அரசி ரூமுக்கு போகின்றனர். அரசியிடம் "தேவையில்லாத விஷயங்களை எல்லாம் பேச வேண்டாம்" என்று சுகன்யாவை திட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் பழனி அங்கு வந்து விட பழனி என்ன ஆச்சு என்று விசாரிக்கிறார் பிறகு நடந்த விஷயத்தை எல்லோரும் சொல்கின்றனர்.
பிறகு, ராஜி தனியாக உட்கார்ந்து பேப்பரில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்க அதை மீனா கவனித்து என்னவென்று கேட்கிறார். "கதிர் டிராவல்ஸ் தொடங்கத் தேவையான பணத்தை ஏற்பாடு செய்வதற்காக, நான் ஒரு டான்ஸ் போட்டியில் கலந்துகொள்ளப் போகிறேன்" என்று சொல்கிறார். அப்போது அந்த போட்டி பற்றி பெரிதாக எந்த தகவலும் இல்லை என்று சொன்னதும் ஆன்லைனில் செக் பண்ணி பார்க்க, அதிலும் எதுவும் இல்லாமல் இருக்கிறது. இதனால் இதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ராஜியிடம் மீனா சொல்ல, ஆனால் ராஜி நான் கதிர்காக கலந்து கொள்ளுவேன் என்று சொல்கிறார். இது இன்றைய எபிசோடின் முக்கியமான தருணங்களில் ஒன்றாக அமைந்தது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications