பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் பற்றி இன்னொரு விஷயமும் தெரிஞ்சாச்சு! பாண்டியனுக்கு பேரிடி! கோமதி எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் 2025 டிசம்பர் 12ஆம் தேதிக்கான எபிசோடில் மயில் அப்பாவும் அம்மாவும் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். அப்போது மொத்த குடும்பத்தினரும் அவர்களை ரவுண்டு கட்டி கேள்வி கேட்கின்றனர். அப்போது மயிலின் குடும்பத்தை பற்றி இன்னொரு உண்மையும் தெரிய வந்திருக்கிறது. அதற்கு பாண்டியன் என்ன முடிவு எடுத்தார் என்பது பற்றி பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் எப்படி ரோகிணி பற்றிய உண்மை தெரியப்போகிறதோ என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்ததோ அதேபோலத்தான் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மயில் பற்றிய உண்மை எப்போ தெரியும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இந்த வாரம் முழுக்கவே அதிரடியாகத்தான் இருக்கிறது. சரி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

Pandian Stores serial vijay tv

அதாவது மயிலுடைய அப்பாவும் அம்மாவும் வருவதற்காக மொத்த குடும்பத்தினரும் காத்திருக்கின்றனர். அவர்கள் இருவரும் ஏதோ நல்ல செய்தி சொல்வதற்காக மகள் வீட்டிற்கு கூப்பிட்டு இருப்பதாக நம்பி கிளம்பி வருகின்றனர். சந்தோஷமாக பாண்டியன் வீட்டிற்குள் அவர்கள் இருவரும் வந்ததும் மொத்த குடும்பமும் வெளுத்து வாங்குவது. ஏமாற்றுக்கார குடும்பங்களே என்று குளவி முன்னாடி வந்து வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டை போடுறாங்க.

அப்போது மயிலின் அம்மா நல்லவள் போல, சின்ன பிள்ளைய பேச விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க என்ன விஷயம் நடந்ததுன்னு சொல்லுங்க என்று கேட்க, கோமதி கோபமாக முன்னே வந்து மயிலின் வயது என்ன ஆச்சு? அவளுடைய படிப்பு என்ன? என்று கேட்கிறார். ஆனால் கோமதி கேட்ட தோரணையை பார்த்ததும் மயில் உடைய அம்மா மகளை பார்த்து நகை விஷயம் தெரிஞ்சுடுச்சா என்று சைகையால் கேட்க மயில் இல்லை என்று தலையாட்டுகிறார்.

உடனே உங்களுக்கு யாரோ இந்த விஷயத்தில் பொய் சொல்லி சொல்லி இருக்காங்க சம்மந்தி என் மகள் பிஏ படிச்சிருக்கா என்று சொன்னதும் கடுப்பாகும் குழலி உங்க பொண்ணே அவ வாயால இந்த விஷயத்தை எல்லாம் ஒத்துக்கிட்டா என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார். உடனே மயில் அப்பா நெஜமாவே எங்க பொண்ணு பிஏ படிச்சிருக்கா என்று மீண்டும் சொல்ல, அதைக் கேட்டு கோபமான சரவணன் இந்த ஆளு இன்னும் எத்தனை நாளைக்கு தான் நடித்துக்கொண்டிருக்கிறான்? என்று பக்கத்தில் இருந்த ஒரு பாத்திரத்தை தூக்கி அடிக்கப் போகிறார்.

இவங்க நம்மகிட்ட இந்த விஷயத்தை மட்டும் மறைக்கல. தீபாவளி சமயத்தில் கடையில் பணம் காணாமல் போச்சுல்ல அதை மாமா எடுக்கல அப்பா இந்த ஆளு தான் எடுத்தாரு என்று உண்மையை சொன்னதும் மொத்த குடும்பத்தினரும் ஆடி போகின்றார். அப்போது மயிலின் அம்மா, என் பொண்ணை எப்படி எல்லாரும் கொடுமை படுத்துறீங்களே என்று கத்தி கூப்பாடு போடுகிறார்.

அப்போது மயிலின் அப்பா இதற்கு மேலயும் நாங்க பொய் சொல்லல, எங்க பொண்ணு காலேஜ் எல்லாம் படிக்கல, அவளுக்கு ஒரு தோஷம் இருந்துச்சு கல்யாணம் தள்ளி போயிட்டே இருந்தது அதனாலதான் உங்கள பார்த்தோம் நல்ல குடும்பம்னு பொய் சொல்லி கல்யாணம் பண்ணி வச்சிட்டோம் என்று சொன்னதும் என்ன தோஷம் சொல்லுங்க என்று எல்லோரும் மிரட்டுகிறார்கள். அது பெரிய தோஷம் இல்ல சின்ன விஷயம் தான் என்று சமாளிக்கிறார்.

பிறகு பாண்டியன் எல்லோரையும் அமைதியாக இருக்க சொல்லிவிட்டு மயில் படிக்காதது எனக்கு பெரிய பிரச்சனையே கிடையாது. நீங்களாகத்தான் உங்க பொண்ணு பெரிய படிப்பு படிச்சிருக்கேன்னு சொன்னீங்க, வயது விஷயத்தையும் என்கிட்ட சொல்லி இருந்தால் அதுல எங்களுக்கு சம்மதம் இருந்தால் பேசிருப்போம் இல்லை என்றால் வேண்டாம் என்று சொல்லி இருப்போம். எல்லாத்தையும் மறைச்சு எங்களை நம்ப வைத்து ஏமாத்திட்டீங்க என்று ஃபீல் பண்ணி பேசுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+