பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் வீட்டிற்கு சென்று மீனா சொன்ன விஷயம்! அவமானத்தில் சரவணன்! அழுத கோமதி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 டிசம்பர் 23ஆம் தேதிக்கான எபிசோடில் சரவணன் டைவர்ஸ் வேண்டும் என்று சொல்லிவிட்டதால் மயில் அதை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மயில் வீட்டிற்கு மீனா சென்று இருக்கிறார். மறுபக்கத்தில் சரவணனுக்கு பெரிய அவமானமும் நடக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மயிலை வீட்டை விட்டு துரத்தி இருக்கின்றனர். இதனால் கோமதியின் அண்ணன் குடும்பத்தினருக்கு கோமதி வீட்டில் நடக்கும் பிரச்சனையை பார்த்து சந்தோஷத்தில் இருக்கின்றனர். ஆனால் பாண்டியன் இப்படியே சோகமாக வீட்டிற்குள் இருந்து கொண்டிருக்க முடியாது என்று கடைக்குப் போக கிளம்புகிறார். அதோடு சரவணன் கூட்டிக்கொண்டு போக, கதிர் மற்றும் அரசி இருவரும் அண்ணனை கூட்டிட்டு போக வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது கோமதி பாண்டியனை தனியாக கூட்டிட்டு போய் பேசுகிறார். அவரிடம் சரவணன் ரொம்ப பாவம்ங்க.. அவன் எப்போ வெளியே வருவான்... அவன்கிட்ட ஏதாவது பேசலாம்னு எல்லாரும் காத்திருப்பாங்க. இந்த நேரம் ஊர் முழுக்க நம்ம வீட்ல நடந்த பிரச்சனை தெரிஞ்சுருக்கும். சரவணனிடம் வந்து அதை பற்றியே பேசிட்டு இருப்பாங்க என்று சொல்கிறார்.
அதற்கு பாண்டியன் அவன் வீட்டில் இருந்தா எதையாவது யோசிச்சுட்டே இருப்பான் அதனாலதான் கடைக்கு கூட்டிட்டு போறேன் நான் அவனை பார்த்துக்கொள்கிறேன் நீ கவலைப்படாதே என்று சொல்லி சரவணன் கூட்டிக்கொண்டு கிளம்புகிறார்.
மறுபக்கத்தில் மீனா ஆபீசுக்கு கிளம்பி போய்க் கொண்டிருக்கும் போது மயில் ஃபோன் செய்து அழுது கொண்டிருக்கிறார். அப்போதும் மீனா போனை கட் பண்ணி வைத்து விடுகிறார். ஆனாலும் மனம் கேட்காமல் மயிலை பார்ப்பதற்காக பாக்கியம் வீட்டிற்கு போகிறார். அங்கு மயில் மீனாவை பார்த்ததும் கட்டிப்பிடித்து அழுகிறார். நான் பொய் சொன்னது தப்பு தான்.. என் வீட்டு ஆளுங்க பேச்சை கேட்டு இப்படியெல்லாம் பண்ணி இருக்க கூடாது.
அதுக்காக என்னை டைவர்ஸ் பண்ண போறேன்னு சரவணன் மாமா சொல்லுறாரு. இதுக்கப்புறம் நான் வீட்டுக்கு வரவே முடியாதா? என்று மயில் அழுது புலம்புகிறார். அவருக்கு மீனா ஆறுதல் சொல்லிவிட்டு எங்க கிட்டயாவது நீங்க ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே என்று கேட்கிறார். அப்போது மயில் நான் சரவணன் மாமா கிட்ட போன் போட்டு பேசவா? நடந்ததை எல்லாம் சொல்லி டைவர்ஸ் வேணாம்னு சொல்லவா? என்னை அவர்கிட்ட கூட்டிட்டு போறியா என்று கேட்கிறார்.
அதற்கு மீனா கொஞ்சம் அமைதியா இருங்க அக்கா. டைவர்ஸ் எல்லாம் உடனே எடுக்கற முடிவு கிடையாது. கொஞ்ச நாள் போகட்டும் என்று சமாதானம் சொல்லிவிட்டு கிளம்புகிறார். அப்போது பாக்கியம் நகை விஷயத்தை எதுவும் சொல்லிடாதம்மா என்று சோகமாக சொல்ல, மீனா நானாக எதுவுமே சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டு வருகிறார்.
மறுபக்கத்தில் பாண்டியனும் சரவணனும் டீக்கடைக்கு போய் இருக்கின்றனர். அப்போது அங்கு வரும் சக்திவேல் பாண்டியன் குடும்ப பிரச்சனையை பற்றி ஜாடை மாடையாக பேசுகிறார். இதனால் கடுப்பான பாண்டியன் சக்திவேலை அடிக்க போகிறார். அப்போது சரவணன் அவரை சமாதானம் செய்து கூட்டிக்கொண்டு போகிறார். கடைசியாக கோமதி வீட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கதிர் மற்றும் ராஜி இருவரும் சமாதானம் செய்து கோமதியை சாப்பிட வைக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications