பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் பற்றி பழனி சொன்ன விஷயம்! கதறி அழுத செந்தில்.. இனி பாண்டியன் எடுத்த முடிவு?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2025 டிசம்பர் 24ஆம் தேதிக்கான எபிசோடில், பழனியை பாண்டியன் குடும்பத்தினர் என்னதான் அசிங்கப்படுத்தி இருந்தாலும் தன்னுடைய மருமகனுக்கு பிரச்சனை என்றதும் பழனி வருத்தப்படுகிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் ஆரம்பத்தில் காந்திமதி ஸ்டோர்ஸில் தொடங்குகிறது. பழனிவேல் தனது அக்கா குடும்பத்தில் நடந்த பிரச்சனைகளை நினைத்து வேதனையில் இருக்கிறார். சோகம் காரணமாக கடையில் கூட இருக்க முடியாத நிலை. இருந்தாலும், கட்டாயமாக கடையில் அமர்ந்திருக்கிறார்.

சுகன்யா மற்றும் குமரவேல், பாண்டியன் குடும்பத்தில் பழனிவேலுக்கு ஏற்பட்ட அவமானங்களை சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அதோடு பழனிக்கு பாண்டியன் குடும்பத்தின் மீது கோபம் வருகிற மாதிரி ஏற்றி விடுகின்றனர். ஆனால் பழனி . "அவர்கள் எனக்கு இதற்கு முன்பும் கடுமையாக பேசியிருக்கிறார்கள். அதுக்காக இப்போ பாசமே இல்லன்னு நினைக்க முடியாது. 30 வருடமா அந்த குடும்பத்துல ஒருவனா இருந்திருக்கேன்" என்று சொல்கிறார்.
பின்னர் பழனி சரவணனுக்கு போன் போடுகிறார். சரவணன் போன் எடுக்கவில்லை. சிறிது நேரத்தில் சரவணன் தானே கடைக்கு வந்து பழனிவேலை சந்திக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததும் அழுகிறார்கள். சரவணன் "மாமா என்னை ஏமாற்றிட்டாங்க" என்று சொல்லி பழனிவேலுவை கட்டிப்பிடித்து அழுகிறார்.
பழனிவேல், குழந்தை விஷயத்தை வைத்து தன்னை ஏமாற்றியது மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும், தங்கமயில் இப்படிச் செய்வாள் என்று நினைக்கவே இல்லை என்றும் சொல்கிறார். அதற்கு சரவணன், தங்கமயில்தான் முக்கிய குற்றவாளி என்று கூறுகிறார்.
சரவணன், பழனிவேலிடம் மன்னிப்பு கேட்கிறார். இனிமேல் எதுவாக இருந்தாலும் முதலில் உங்களிடமே சொல்கிறேன், நான் உங்களிடம் உண்மையை மறைக்கனும்னு நினைக்கல ஆனால் இந்த உண்மை வெளியே தெரிந்தால் பெரிய பிரச்சினையாகும் தான் எத்தனை நாள் மூடி வைத்திருந்தேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார், கடையை மூடிய பிறகு இரவில் சந்தித்து பேசலாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
பின்னர் கடைக்கு வந்த சரவணன், தனது தம்பி கதிரிடம், மாமாவை சந்திக்க ஈவ்னிங் வெளியே போகலாம் என்று சொல்லுகிறார். இப்படியாக இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோடு முடிகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications