பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் பற்றிய உண்மை தெரிந்து பாண்டியன் சொன்ன வார்த்தை! நகை ரகசியத்தை சொல்லும் ராஜி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2025 டிசம்பர் ஆறாம் தேதிக்கான எபிசோடில் மயில் இதுவரைக்கும் சொன்ன பொய்கள் எல்லாமே குடும்பத்திற்கு தெரிய வருகிறது. சரவணன் அனைத்து உண்மைகளையும் சொன்னதும் பாண்டியன் அதிர்ச்சியில் இருக்கிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மயில் விஷயத்தில் குடும்பத்தினர் சரவணனிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க, அதனால் சரவணன் இனி நாம் மயில் கூட சண்டை போடவே மாட்டேன், எல்லா கஷ்டத்தையும் எனக்குள்ளேயே வைத்து ஒரு நாள் நான் செத்துருவேன் என்று சொல்கிறார். இதனால் குடும்பத்தினர் எல்லோரும் அதிர்ச்சியாகி எதுக்காக இப்படி எல்லாம் பேசுற? என்ன நடந்தது என்று கேட்கின்றனர்.

அப்போது மயில் நல்லவள் போல இந்த குடும்பத்தோட சந்தோஷத்துக்காக உங்களுடைய கொடுமைகளை எல்லாம் நான் தாங்கிக்கிறேன் என்று வசனம் பேசுகிறார். இதனால் கோபமான சரவணன் இன்னும் நடிக்காதடி, கொஞ்சம் கூட உடம்பு கூசலையா? உன் நடிப்பை பார்த்து பார்த்து எனக்கு பைத்தியம் பிடிக்குது என்று சொல்கிறார். அதற்கு குடும்பத்தினர் என்ன ஆச்சுன்னு சொல்லுடா என்று கதறி போய் கேட்கிறார்கள்.
அதற்கு கதிர் நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி இங்க நிக்கிற மயில் நல்லவ கிடையாது. இவ மட்டும் இல்லை இவளோட மொத்த குடும்பமும் சரியான பிராடு என்று சொன்னதும் கோமதி ஒன்றும் புரியாமல் ஏன் இப்படி எல்லாம் பேசுறான் என்று குழம்பி கொண்டு இருக்கிறார். அப்போது சரவணன் மயில் உடைய படிப்பு பற்றி பேசுகிறார். இவ என்ன படிச்சிருக்கான்னு உங்க கிட்ட சொன்னா அம்மா என்று கேட்டு, குடும்பத்தினர் எல்லாரிடமும் அதே கேள்வியை கேட்டதும் அரசி அண்ணி எம்பிஏ படிச்சேன்னு சொன்னாங்க என்று சொல்கிறார்.
அதற்கு கதிர், கிழிச்சா இவ 12வது மட்டும் தான் முடிச்சிருக்கா. காலேஜ் படிச்சேன்னு சொன்னதெல்லாம் பொய். அப்பா டீச்சர் வேலைக்கு ஏற்பாடு பண்ணி சர்டிபிகேட் கேட்டதுக்கு ஏதேதோ பொய் சொல்லி பிரார்த்தனம் பண்ணுனா. எதுக்காக இவர் சர்டிபிகேட் கொடுக்கலன்னா இவ படிக்கவே இல்ல, அதுக்கப்புறம் பாஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்க்கிறேன் என்று சொன்னால அதுவும் கிடையாது.
நம்ம குன்னக்குடி பஸ் ஸ்டாப்பில் இருக்கிற ஒரு ஹோட்டலில் வேலை பார்த்துட்டு இருந்தா. அங்க நான் சாப்பிட போன போது இவளை பார்த்தேன் என்று சொன்னதும் ராஜி அதிர்ச்சியாகி நம்ம மயில் அக்காவா? என்று கேட்க, ஆமா உங்க அக்கா தான் அதை என்று கதிர் சொல்லிக்கொண்டு இந்த உண்மை தெரிஞ்ச உடனேதான் நான் அவளை கொண்டு அவங்க வீட்டில கொண்டு விட்டேன்.
அதுக்கப்புறம் பல விதத்தில் வீட்டுக்கு வரும் முயற்சி செஞ்சா ஆனா நான் எதுக்கும் முடியாதுன்னு சொன்னதால தான் கர்ப்பமா இருக்கேன்னு சொல்லி என் உணர்விலேயே விளையாடிட்டம்மா என்று உடைந்து போய் சொல்ல, அதற்கு கோமதி மயங்கி இருக்கிறார். அப்போது தங்கமயில் அப்படியெல்லாம் இல்ல நான் இந்த விஷயத்தில் பொய் சொல்லல என்று கதற, அப்போ வேற எந்த விஷயத்தில் எல்லாம் பொய் சொன்ன? அதையாவது சொல்லு என்று சரவணன் கேட்க, தங்கமயில் அழுது கொண்டு இருக்கிறார்.
உடனே தீபாவளி சமயத்துல வயது சம்பந்தமா இவள் பேசுவது ஞாபகம் இருக்கா அம்மா? இவளோட பதட்டத்தை பார்த்து சந்தேகமாகி ஆதார் கார்டு கேட்டேன், வழக்கம் போல கொடுக்க மாட்டேன்னு சொன்னா அதற்குப் பிறகு இவ அப்பா கிட்ட வாங்கி பார்த்தேன். அதற்குப் பிறகுதான் இரண்டு வயசு பெரியவனு எனக்கு தெரிஞ்சது என்றதும் குடும்பத்தினர் எல்லோரும் அதிர்ச்சியாக இருந்தனர்.
இந்த உண்மையெல்லாம் தெரிஞ்சுதான் நான் உங்ககிட்ட சொல்ல முடியாம தவிச்சிட்டு இருக்கிறேன் என்று சரவணன் அழுது கொண்டு இருக்க, மயில் ரூமுக்குள் ஓடிவிடுகிறார். அப்போது சரவணன் இவ இதை மட்டும் தான் பொய் சொல்லி இருக்காளா? இல்லை இன்னும் விஷயம் இருக்கான்னு தெரியல என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது ராஜிக்கு நகை விஷயத்தில் மயில் சொன்ன பொய் ஞாபகம் வருகிறது.
இனி ராஜி நகை பற்றிய விஷயத்தையும் அடுத்த வாரம் சொல்வாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. மொத்த உண்மைகளும் தெரிந்ததும் பாண்டியன் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பது அடுத்த வாரம் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications