பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயிலுக்கு கோமதி கொடுத்த அதிர்ச்சி.. அரசிக்கு குமார் செய்த உதவி! பாண்டியனின் தப்பான முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் (Pandian Stores 2 serial today episode) பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 பிப்ரவரி 14-ஆம் தேதிக்கான எபிசோடில், மயில் மீண்டும் கோமதி வீட்டிற்கு வந்து விடலாம் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, அதற்கு கோமதி பதிலடி கொடுத்திருக்கிறார். மறுபக்கத்தில் அரசிக்கு வந்த பிரச்சனையில் அரசியை குமார் தான் காப்பாற்றி இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

கோர்ட்டில் தங்கமயிலின் நாடகம்
இன்றைய எபிசோடு (Pandian Stores 2 serial Feb 14 Episode)ஆரம்பத்தில், சரவணன் பிடிவாதமாக தங்க மயிலிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று நிற்கும் நிலையில், கோர்ட்டுக்கு வரும் தங்கமயில் மாமா என்னை ஏத்துக்கோங்க என்று அழுது கெஞ்சுகிறார். கோர்ட்டில் வைத்து வீட்டில் எல்லோரும் தன்னை கொடுமைப்படுத்தினார்கள் என்று சொல்லி கதறி அழுத தங்கமயிலின் பேச்சு அங்கிருந்தவர்களை கொஞ்சம் கூட நம்பவில்லை.
கதறி அழுத தங்கமயில்
பிறகு வெளியே வந்ததும் சரவணனிடம் நீங்க என்ன மிஸ் பண்ணவே இல்லையா என்று கேட்க நீ இல்லாம தான் நான் இப்போ நிம்மதியா இருக்கேன், எங்க குடும்பத்தையே போலீஸ் ஸ்டேஷனில் இருக்க வெச்சிட்டு இப்போ என்கிட்ட வந்து பேசுகிறாயா என்று திட்டி கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் கோமதி வந்து, "நாங்க உன்னை கொடுமைப்படுத்தினோமா? இப்போ கோர்ட்டு வாசலில டிராமா போட்டு என்ன சாதிக்க போற?" என்று கோபப்படுகிறார்.
அப்போது தங்கமயில் அழுது கொண்டிருக்க செந்திலும் தங்கமயிலை திட்டிக் கொண்டிருக்கிறார். உடனே தங்கமயிலின் அம்மா மகளுக்கு ஆதரவாக பேசினாலும், சரவணனும் கோமதியும் தங்களுடைய முடிவில் உறுதியாக இருக்கின்றனர். கடைசியில் கோமதி கையெடுத்து கும்பிட்டு, "எங்களை விட்டுடும்மா" என்று சொல்லி அங்கிருந்து கிளம்ப தங்கமயில் அங்கேயே நின்று அழுது கொண்டிருக்கிறார்.
அரசிக்கு ஏற்பட்ட பயம்
சரவணனும் கோமதியும் கோர்ட்டுக்கு போயிருக்கும் நேரத்தில், வீட்டில் அரசி மட்டும் தனியாக இருக்கிறார். அப்போ மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெரியவர் வீட்டுக்குள் நுழைந்து ஹாலில் சோஃபாவில் படுத்துக் கொள்கிறார். அதைப் பார்த்ததும் அரசி கத்தி கூச்சல் போடுகிறார். அவருடைய சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த குமரவேலும் ராஜியின் பாட்டியும் ஓடி வருகிறார்கள்.
பிறகு குமரவேல் உள்ளே போய் அந்த நபரை வெளியே கொண்டு வந்து ரோட்டில் விட்டுவிட்டு, "இப்படி தான் வீட்டை திறந்தே வச்சுட்டு உட்காருவியா? யாராவது வந்தா முதலில் ஜன்னல் வழியா பார்த்து தான் கதவைத் திறக்கணும்" என்று அரசிக்கு அட்வைஸ் பண்ணுகிறார். இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் அரசி கொஞ்சம் நிம்மதியடைகிறார்.
பாண்டியன் - கோமதி சண்டை
மறுபக்கத்தில் கதிரும் ராஜியும் டிரெயினிங் முடிந்து ஊருக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது ராஜியிடம், கதிரின் நண்பன் சிஸ்டர் நீங்க பாஸ் ஆகிருவீங்களா என்று கேட்க,கண்டிப்பாக ஐபிஎஸ் பாஸ் ஆகிடுவேன் என்று ரஜி சொன்னதும் ஒருவேளை நீங்க பாஸாகிட்டா உங்களுக்கு வெளியூரில் போஸ்ட் போட்டா என்ன பண்ணுவீங்க என்று கேட்டதும் ராஜி அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு கதிரிடம் எனக்கு போஸ்டிங் தூரமா போட்டா என்ன செய்ய என்று கேட்க, அதற்கு கதிர் அப்படி எல்லாம் நடக்காது அப்படியே நடந்தாலும் அதை அப்போது பார்த்துக்கலாம் என்று ஆறுதல் சொல்கிறார். அதே நேரத்தில் பாண்டியன் கடையிலிருந்து வீட்டுக்கு வருகிறார். வீட்டில் யாரும் இல்லாததால் கோமதி தான் அவருக்கு சாப்பாடு போடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்: டைவர்ஸ் கேட்ட சரவணனுக்கு செக் வைத்த தங்கமயில்! கோமதியின் அதிரடி பதில்
ஆனால் பாண்டியன் கோமதியிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக சாப்பிட்டு எழுந்து போகிறார். கோமதி நடந்த ஒவ்வொன்றையாக சொல்லி எவ்வளவோ பேச முயற்சி செய்தாலும், பாண்டியன் முகம் கொடுக்காமல் இருக்கிறார். கடைசியாக கோமதி பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டு அவருடைய கையை தொட, பாண்டியன் கோபமாக கைகை தட்டி விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.


Click it and Unblock the Notifications
