பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயிலால் வீட்டை விட்டு போன செந்தில்! தவறான அட்வைஸ் கொடுத்த மாமனார்! அடுத்த பஞ்சாயத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 பிப்ரவரி 19ஆம் தேதிக்கான இன்றைய எபிசோடில், தங்கமயிலை காப்பாற்றி வீட்டுக்கு கூப்பிட்டு வந்த மீனாவிற்கு அதிர்ச்சி கிடைத்திருக்கிறது தங்கமயிலால் செந்தில் வீட்டை விட்டு வெளியே போய் இருக்கிறார் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் நேற்றைய எபிசோடில், தங்கமயிலை அவருடைய அம்மா பாக்கியம் வீட்டைவிட்டு துரத்திவிட்டதால் சரவணனிடம் சென்று வீட்டில் சேர்த்துக் கொள்ளும்படி கெஞ்சி இருந்தார் ஆனால் சரவணனும் முடியாது என்று விரட்டி விட்டதால் தற்கொலை முடிவு எடுத்தால் அது அப்போது அவரை மீனா ஆட்டோவில் சென்று காப்பாற்றி, அவருடைய அம்மா வீட்டில் விடாமல் நேராக தன் வீட்டுக்கே அழைத்து வருகிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், வீட்டுக்கு வந்ததும் தங்கமயிலுக்கு சாப்பாடு போட்டு சாப்பிட வைக்கிறார். அந்த நேரத்தில் வேலை முடித்து லேட்டாக வீட்டுக்கு வரும் செந்தில், தங்கமயிலை பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார். "இவங்க இங்க என்ன பண்றாங்க?" என்று கேட்க, மீனா அவரை தனியாக அழைத்துச் சென்று நடந்த விஷயங்களை எல்லாம் விவரமாக சொல்லுகிறார். ஆனால் செந்தில் அதற்கெல்லாம் செவிசாய்க்காமல், "அவங்க எப்படி வேண்டுமானாலும் போகட்டும்... அதைப் பற்றி நமக்கு என்ன?" என்று கடுமையாகப் பேசிவிடுகிறார்.
செந்தில் பேசும் இந்த வார்த்தைகள் வெளியே இருந்த தங்கமயிலின் காதில் விழுகிறது. அதனால் மனம் உடைந்து "நான் கிளம்புறேன்" என்று வீட்டை விட்டு கிளம்புகிறார். ஆனால் மீனா அவரை தடுத்து நிறுத்தி, "இப்போ நீங்க வெளியே போனா மறுபடியும் தற்கொலை பண்ணிக்க தான் போவிங்க... அதனால எங்கயும் போகக் கூடாது... இன்னைக்கு நைட் என்கூட தான் இருக்கணும்" என்று உறுதியாகச் சொல்கிறார்.
இதை கேட்ட செந்தில், "இவங்க இங்க இருந்தா நான் இருக்க மாட்டேன்" என்று கோபமாக சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். அவர் நேராக தனது அப்பா பாண்டியன் வீட்டுக்கு செல்கிறார். அங்கு சென்ற பிறகு எல்லா உண்மையையும் சொல்லிவிடுவார் என நினைக்கப்படும் நிலையில், அங்கே எல்லோரும் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது எதையும் சொல்லாமல் "மீனா உப்புமா செய்ததால் இங்கே சாப்பிட வந்தேன்" என்று காரணம் சொல்கிறார்.
இதைக் கேட்ட பாண்டியன் கோபமாக, "அவளே வேலை முடிச்சுட்டு வந்து உனக்காக கஷ்டப்பட்டு சமைச்சு கொடுத்தா... நீ இங்க வந்து சாப்பிடுறியா? நீ கெளம்பு... அங்கேயே போய் சாப்பிடு" என்று சத்தம் போட்டு அனுப்பிவிடுகிறார். உடனே செந்தில் தனது மாமனார் வீட்டுக்கு செல்கிறார். அங்கு சென்று நடந்த உண்மைகளை எல்லாம் சொல்லிவிடுகிறார்.
Siragadikka Aasai serial: அடுத்தடுத்த படங்களில் ஹீரோவான சிறக்கடிக்க ஆசை சீரியல் நடிகர்.. வெளியான டீசர்!
இதையடுத்து மீனாவின் அம்மா, மீனாவுக்கு போன் செய்து தங்கமயில் எதுக்காக உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்த என்று திட்டுகிறார். அப்போது நடந்த விஷயத்தை மீனா சொல்கிறார். அதற்கு மீனாவின் அம்மா, நீ அவங்க வீட்டுல கொண்டு போய் விட்டு இருக்க வேண்டியதுதானே என்று திட்டுகிறார். ஆனால் வழக்கம்போல் மீனா அதற்கெல்லாம் வளைந்துகொடுக்காமல் தன் முடிவில் உறுதியாக இருக்கிறார்.
மாமனார் வீட்டில் செந்தில் சாப்பிட்டு அங்கேயே தங்க முடிவு செய்கிறார். அப்போது அவரிடம் பேசும் மீனாவின் அப்பா, "ஒரு வீடு விலைக்கு வருகிறது... வாங்குறீங்களா?" என்று கேட்கிறார். அதற்கு செந்தில், "அதை வாங்க என்கிட்ட காசு எங்க இருக்கு?" என்று சொல்கிறார். அதற்கு மீனாவின் அப்பா, "எப்பவுமே கவர்மெண்ட் சம்பளத்தை மட்டும் நம்பி இருக்கக்கூடாது" என்று கூறி, லஞ்சம் வாங்கி பணம் சேர்க்க வேண்டும் என்ற அதிர்ச்சியான அட்வைஸை கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது ஏற்கனவே வேலைக்கு சேரும்போது லஞ்சம் கொடுத்து தான் வேலை கிடைத்தது இப்போது மீண்டும் லஞ்சம் வாங்கும்போதுதான் செந்திலுக்கு பிரச்சனை வரும் என்று தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications