பாண்டியன் ஸ்டோர்ஸ்: இப்படியும் மனுஷங்களா? மயில் அம்மாக்கு மீனா வைத்த செக்! பாண்டியன் செய்த மிஸ்டேக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2026 ஜனவரி 13 ஆம் தேதிக்கான எபிசோடில் மயிலின் நகைகளை போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்து இந்த பிரச்சனையை முடித்துக் கொள்ளலாம் என்று பாண்டியன் குடும்பத்தினர் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவர்களுக்கு எதிர்பார்க்காத ஒரு பிரச்சனை வந்திருக்கிறது. அப்போது மீனா சொன்ன விஷயத்தை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாண்டியன் கடைக்கு கிளம்புகிறார். அப்போது சரவணனிடம் நீ வீட்டில் இரு இன்னைக்கு கடைக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு போகிறார். வீட்டு வாசலில் வண்டியை எடுக்கும்போது அவரால் வண்டியை எடுக்க முடியவில்லை. சாவியை போடுவதற்கு கூட முடியாமல் கை நடுங்குகிறார். பாண்டியன் தவிப்பதை பார்த்து முத்துவேல் எல்லாம் சரியாகிவிடும் என்பது போல தலையசைத்த பிறகும் பாண்டியனும் தலையை ஆட்டி விட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

Pandian Stores serial vijay tv

மறுபக்கத்தில் மீனாவும் செந்திலும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது செந்தில் மீனாவிடம் அம்மாவுக்கு போன் பண்ணுனியா? எப்படி இருக்காங்க என்று விசாரிக்க, அதற்கு மீனா நீயே அம்மா கிட்ட பேச வேண்டியதுதானே என்று கேட்க, எங்க அம்மா எப்பவும் ஏதாவது பேசிக்கிட்டே இருப்பாங்க, ஆனா இப்போ அவங்க ரொம்ப சோகமா பேசுறாங்க. அதை கேட்கிறதுக்கே கஷ்டமா இருக்கு.

இன்னையோட அந்த குடும்பத்தின் பிரச்சனை முடியணும். என் அண்ணனின் முன்னாள் மனைவி என்று மயில் குடும்பத்தை பற்றி செந்தில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா நான் இன்னைக்கு வேலைக்கு லீவு போட்டுட்டேன் நானும் ஸ்டேஷனுக்கு போறேன் என்று சொல்கிறார்.

அதற்கு செந்தில் நானும் இன்னைக்கு லீவு போட்டுட்டேன், அப்பா எப்படியும் ஸ்டேஷன் போயிடுவாரு. நான் கடைக்கு போய் கவனித்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். மறுபக்கத்தில் செந்தில் கடைக்கு போனதும் கதிர் நீ இன்னைக்கு ஆபீஸ் போகலையா என்று கேட்க, எல்லாரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிடுவீங்க அதனால நான் கடையை பார்த்துக்கணும்னு வந்தேன் என்று சொல்லி கதிரையும் ஸ்டேஷனுக்கு பாண்டியனுக்கு துணையாக அனுப்பி வைக்கிறார்.

அடுத்ததாக போலீஸ் ஸ்டேஷனில் மீனா, கோமதி, பாண்டியன், சரவணன் என எல்லோரும் காத்திருக்கும் போது மீனாவிற்கு ராஜி போன் செய்து நகையை வைத்து ஏதாவது விளையாடிடுவாங்களா? எனக்கு ஒரு மாதிரி பயமாய் இருக்கு அக்கா என்று சொல்ல, அதற்கு மீனா அவங்க அவ்வளவு எல்லாம் போக மாட்டாங்க.. மயில் அக்கா வாழ்க்கையில் கொஞ்சம் அக்கறை இருந்தா இப்படி எல்லாம் பண்ண மாட்டாங்கன்னு நினைக்கிறேன் என்று சொல்கிறார்.

அடுத்ததாக போலீஸ் ஸ்டேஷனுக்கு மயிலின் அம்மா பாக்கியமும், மாணிக்கமும் வருகின்றனர். அவர்களை பார்த்ததும் சரவணனுக்கு கோபம் வருகிறது. அவரை கதிர் சமாதானப்படுத்துகிறார். பிறகு இன்ஸ்பெக்டர் முன்பு நகைகளை ஒப்படைக்கின்றனர். அதை பார்த்த பாக்கியம் இந்த நகை எல்லாம் கருத்து போய் இருக்கு, நாங்க 80 பவுன் நகை போட்டோம். இவங்க அதை எல்லாம் ஆட்டைய போட்டுட்டாங்க என்று நல்லவள் போல நாடகமாடுகிறார்.

அதிலும் இவங்க பையனுக்கு வேலைக்காக பத்து லட்சம் பணம் கொடுத்தாங்க, அதுபோல ஒரு பையனுக்கு கடை வெச்சு கொடுத்தாங்க... இதற்கெல்லாம் என் பொண்ணு நகையில் இருந்துதான் எடுத்து இருக்காங்க என்று கதறி ஒப்பாரி வைக்க, அதை பார்த்து மீனா கோபமாகி அபாண்டமாக பழி போடாதீங்க என்று சொல்ல, பாக்கியம் மீனா சொன்னதும் மீனா மீதும் பழியை தூக்கி போடுகிறார்.

Pandian Stores serial vijay tv

இதனால் அதிர்ச்சியான பாண்டியன் எங்க பிள்ளைகளுக்கு பணம் கொடுக்கிற அளவுக்கு என்கிட்ட வசதி இருக்கு‌. அதுக்கு மேல பணம் தேவைப்பட்டால் முறையாக கடன் வாங்குவேன் என்று சொல்கிறார். அப்போது பாக்கியம் இவங்க தான் நகையை வித்துருக்காங்க என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

அதற்கு மீனா நீங்க மயில் அக்காவுக்கு 80 பவுன் நகை போட்டீங்களா? இவங்க சொல்றது எல்லாம் பொய் மேடம். இவங்க வெறும் 8 பவுன் தான் தங்க நகை போட்டாங்க என்று உண்மையை சொல்கிறார். இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. நாளை இது பற்றி இன்ஸ்பெக்டர் மயிலிடம் விசாரிப்பார். அப்போது மயில் என்ன சொல்லப் போகிறார் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+