பாண்டியன் ஸ்டோர்ஸ்: வார்த்தையை விட்ட கோமதியால் வந்த சிக்கல்.. நிரந்தரமாக பிரியும் மீனா, செந்தில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: (Pandian Stores serial today episode) விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2026 ஜனவரி 28ஆம் தேதிக்கான எபிசோடில், கோபத்தில் இருக்கும் பாண்டியனை சமாதானம் செய்வதற்காக கோமதி முயற்சி செய்கிறார். ஆனால் அது பெரிய பிரச்சனையாகிறது. அதேபோல கோமதி சொன்ன உண்மையால் மீனா மற்றும் செந்தில் இருவருக்கும் இடையே பிரச்சனை வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 (Pandian Stores 2 serial January 28 Episode) சீரியலில், விருந்துக்கு வந்த இடத்தில் சக்திவேல் திடீரென கோபத்தில், கதிரை பற்றி கண்டமேனிக்கு பேச ஆரம்பிக்கிறார். பணத்துக்கு ஆசைப்பட்டு திட்டம் போட்டு ராஜியை கல்யாணம் பண்ணியதாகவும், கதிரின் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்.

Pandian Stores serial vijay tv

இதைக் கேட்டு கோபம் அடையும் கோமதி, "நிறுத்து அண்ணே" என்று, கதிருக்கும் ராஜிக்கும் கல்யாணத்தை நடத்தி வைத்தது தானே என்பதையும், அந்த உண்மையை அனைவரும் முன்னிலையில் போட்டுடைக்கிறார். இந்த உண்மையை கேட்டு பாண்டியன், முத்து உள்ளிட்ட இரண்டு குடும்பத்தினரும் பேரதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள்.

அந்த நேரத்தில் மீனா, மாமியாரை அமைதியாக்க முயற்சி செய்கிறார். ஆனால் சக்திவேல் விடாமல், "இப்போ என்ன சொன்ன?" என்று மீண்டும் தங்கச்சியிடம் கேட்கிறான். அதற்கு கோமதி ஆத்திரமாக, கதிருக்கும் ராஜிக்கும் இந்த கல்யாணத்தில் விருப்பமே இல்லை என்றும், தன் மகனின் காலில் விழுந்து கெஞ்சிதான் இந்த திருமணத்தை நடத்தி வைத்ததாகவும் சொல்கிறாள். மேலும், தன்னால் முடிந்தவரை சக்திவேலின் குடும்ப கௌரவத்தை காப்பாற்றியதாக கூறுகிறார்.

இதைக் கேட்டதும் சக்திவேல் கோபத்தில் இலையை தூக்கி விசிறி அடிக்கிறார். உடனே முத்துவேல் கடும் கோபத்துடன் எழுந்து, "என் மகள் வாழ்க்கையில் முடிவு எடுக்க நீ யார்?" என்று கேள்வி கேட்கிறான். காந்திமதி மகன்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தாலும், நிலைமை மேலும் மோசமாகிறது. சக்திவேல், தான் நினைத்தது நடந்த சந்தோஷத்தில், "விருந்து வேண்டாம், எதுவும் வேண்டாம், நாம போகலாம்" என்று சொல்லி முத்துவேலை அழைத்துக்கொண்டு கிளம்புகிறான்.

அனைவரும் வெளியேறிய பிறகு, கோமதி பாண்டியனிடம் பேச முயற்சி செய்கிறாள். ஆனால் பாண்டியன் கடும் கோபத்தில், "இப்படியொரு துரோகம் பண்ணிட்டியேடி, இனிமேல் எதுவும் பேசாத" என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். அதன் பின்னர் அரசி, செந்தில் இருவரும் கோமதியிடம், "எதுக்காக இப்படிச் செய்தீங்கம்மா?" என்று கேட்டு சுற்றி வளைத்து பேசுகிறார்கள். அந்த சமயத்தில் கதிர், தன் அப்பாவை தேடி வீட்டை விட்டு கிளம்புகிறார்.

இன்னொரு பக்கம், மீனாவிடம் செந்தில் சண்டை போடுகிறார். சரவணன் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்ய, மீனா "நம்ம பிரச்சனையை வீட்டில் போய் பேசிக்கலாம், இப்ப இந்த வீட்டு பிரச்சனை முக்கியம்" என்று சொல்கிறார். ஆனால் செந்தில், "முதல்ல நம்ம வீட்டுக்குப் போகலாம்" என்று மீனாவை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கிறார்.

குவார்டர்ஸுக்கு வந்ததும், மீனாவிடம் செந்தில் மீண்டும் சண்டையை ஆரம்பிக்கிறார். மயிலு மாதிரி நீயும் உண்மையை மறைத்திருக்கியா என்று கேட்கிறார். இதனால் கடுப்பாகும் மீனா, "அவங்களோட கம்பேர் பண்ணி பேசாதீங்க. இந்த பிரச்சனையைப் பற்றி இனிமேல் பேசவே வேண்டாம்" என்று கடுமையாக சொல்கிறார். அதற்கு பதிலாக செந்தில், "இதுக்கப்புறம் நம்ம பேசிக்கவே வேண்டாம்" என்று சொல்லி மீனாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

இதற்கிடையில், கோயிலில் இருக்கும் பாண்டியனை சமாதானம் செய்ய கதிர் முயற்சி செய்கிறார். ஆனால் கோபத்தில் இருக்கும் பாண்டியன் எதையும் கேட்பதாக இல்லை.

பின்னர் வீட்டிற்கு திரும்பி வரும் பாண்டியனிடம், கோமதி "நான் ஏன் இப்படிச் செய்தேன் என்பதை சொல்ல ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்" என்று கெஞ்சுகிறார். ஆனால் பாண்டியன், "எல்லாரும் என்னை அவமானப்படுத்திய நேரத்திலும், என் மனைவி எனக்காக இருக்கிறாள் என்று சந்தோஷப்பட்டேன். ஆனால் என்னை நம்பவைத்து ஏமாத்தி இருக்க. இது உடைந்த கண்ணாடி மாதிரி, இனிமேல் ஒட்ட வைக்க முடியாது" என்று சொல்லி கோமதியை முற்றிலுமாக நிராகரிக்கிறார்.

மேலும், "இனிமேல் என்கிட்ட நீ பேசவே கூடாது" என்று கோபத்தில் சொல்கிறார். அந்த சமயத்தில் ராஜி பேச முயற்சி செய்ய, "உன்மேல் எனக்கு கோபம் இல்லை. ஆனா உன் அத்தைக்கு சப்போர்ட்டா நீ வராத" என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார். தொடர்ந்து, "நீ என்னிடம் பேச முயற்சி செய்தால், நான் எங்கயாவது கண் காணாத இடத்துக்கு போயிடுவேன்" என்று பாண்டியன் உறுதியாக கூறுகிறான். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+