பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-விலும் சிறகடிக்க ஆசை சீரியலை காப்பி பண்ணுறாங்களே! இன்று நடந்த சம்பவம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 மார்ச் 9ஆம் தேதிக்கான எபிசோடில், தங்கமயில் சொன்ன விஷயத்தை கேட்டு கடுப்பான மீனா செந்திலிடம் சண்டை போடுகிறார். அதே நேரத்தில் ராஜி கதிர் இருவருக்கும் இடையிலும் பிரச்சனை உருவாகிறது என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

தங்கமயிலுக்கு சரவணன் கொடுத்த அதிர்ச்சி
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் போன வாரம், தங்கமயில் தன்னை கர்ப்பமாக இருப்பதாக சரவணனிடம் சொன்னால், அவர் விவாகரத்து முடிவை மாற்றிக் கொண்டு தன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வார் என்று நம்பி இருந்தார். ஆனால் அந்த எதிர்பார்ப்பு முற்றிலும் தவறாகி விட்டது.
தங்கமயில் தனது கர்ப்பம் குறித்து சொல்லியபோது, சரவணன் மிகவும் கடுமையாக பேசி இருந்தார். "உன் வயிற்றில் வளரும் குழந்தை யாருடையது?" என்று கேட்டு அவளை மிகவும் அவமானப்படுத்தும் வகையில் பேசினார். இந்த வார்த்தைகள் தங்கமயிலுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தின.
இதனால் மிகவும் மனஉளைச்சலில் இருந்த தங்கமயில், இனிமேல் சரவணனுடன் சேர்ந்து வாழ வேண்டாம் என்ற முடிவையும் எடுத்திருந்தார்.
ராஜியை திட்டும் கதிர்
இந்த நிலையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், ராஜி மற்றும் கதிர் இருவரும் சேர்ந்து ஒரு டீ கடைக்கு சென்று காஃபி குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ராஜி தன்னுடைய படிப்பு குறித்து பேச ஆரம்பிக்கிறார். "எனக்கு படிக்க அவ்வளவாக விருப்பமில்லை. ஆனால் நீ எனக்காக ஒரு லட்சம் ரூபாய் கட்டி பயிற்சி வகுப்பில் சேர்த்ததால் தான் நான் அந்த வகுப்புக்கு போகிறேன்" என்று கூறுகிறார்.
இதைக் கேட்ட கதிருக்கு கோபம் வருகிறது. உடனே அவர், "நான் பணம் கட்டிவிட்டேன் என்பதற்காக நீ படிக்க வேண்டிய அவசியமில்லை. உனக்கு விருப்பம் இல்லையென்றால் வீட்டிலேயே இருந்துகொள்" என்று கடுப்பாக பேசுகிறார். கதிரின் இந்த பேச்சால் ராஜி மிகவும் வருத்தப்படுகிறார். "எதுக்கு நீ இப்படி பேசுற?" என்று கேட்டு கோபமாக எழுந்து, "நான் வீட்டுக்கு போகிறேன்" என்று சொல்லிவிட்டு தனியாக கிளம்பிச் செல்கிறார்.
கதிருக்கு காத்திருந்த அதிர்ச்சி
அதன்பிறகு வீட்டிற்கு வந்ததும் ராஜி கதிரிடம் மனம் திறந்து பேசுகிறார். "எனக்கு ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது நனவாகும் என்று நான் நினைத்தேன். ஆனால் அதற்காக நான் உழைக்கவில்லை என்பது நீ சொன்ன பிறகுதான் எனக்கே புரிந்தது" என்று சொல்கிறார். "நாளை முதல் நான் அதற்காக உழைக்க ஆரம்பிக்கிறேன்" என்று கூறிவிட்டு இருவரும் தூங்கச் செல்கிறார்கள்.
அடுத்த நாள் காலையில் கதிர் போன் அலாரம் அடித்து எழுந்து பார்த்தபோது ராஜி அருகில் இல்லை. இதனால் கதிர் பதற்றமடைகிறார். வெளியே சென்று பாட்டியிடம் ராஜி எங்கே என்று கேட்க, "அவள் ஓடுவதற்காக கிரவுண்டுக்கு போய் இருக்கா" என்று அவர் சொல்லுகிறார்.
மனம் திறந்து பேசிய ராஜி
இதைக் கேட்ட கதிர் உடனே வண்டியை எடுத்துக் கொண்டு கிரவுண்டுக்கு போகிறார். அங்கு போனபோது ராஜி மிகவும் வேகமாக பிராக்டீஸ் செய்து கொண்டிருப்பதை பார்க்கிறார். கதிர் அவரிடம் சென்று தண்ணீர் பாட்டிலை கொடுத்து, "ஏன் தனியாக வந்தாய்?" என்று கேட்கிறார். அதற்கு ராஜி, "இனிமேல் நான் தனியாக தான் பயிற்சிக்கு வருவேன். நாம ஆசைப்பட்ட விஷயம் உழைக்காமல் நமக்கு கிடைக்காது. ஆனால் நான் அது கிடைக்கும் என்று நினைத்து இருந்தேன். இப்போ நான் மீண்டும் என் பயிற்சியை ஆரம்பிக்கிறேன். உன்மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை" என்று கூறிவிட்டு மீண்டும் தனது பயிற்சியை தொடர்கிறார்.
மீனாவிடம் மனம் திறந்த தங்கமயில்
மறுபுறம் தங்கமயில் பேருந்து நிலையத்தில் மீனாவை சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் சரவணனை பார்த்ததாக சொல்கிறார். மீனா "அவரிடம் பேசினாயா?" என்று கேட்க, "இல்லை" என்று தங்கமயில் கூறுகிறார். பின்னர் அவர் மிகவும் வருத்தமாக, "சரவணன் இன்னொரு பெண்ணுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தார். என்னை விட்டுப் பிரிந்த சில நாட்களிலேயே அவரால் இன்னொரு பெண்ணுடன் பழக முடியுது. இது எப்படி சாத்தியம்?" என்று கேட்டு மன வேதனையுடன் பேசுகிறார்.
அப்போது மீனா மயிலை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார். "அவங்க அவருக்கு தெரிந்தவராக இருக்கலாம். நண்பராக கூட இருக்கலாம்" என்று சொல்லி ஆறுதல் கூறுகிறார். இதற்குப் பிறகு தங்கமயில் அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.
செந்திலிடம் கோபம் காட்டிய மீனா
தங்கமயில் சென்றதும் செந்தில் அங்கு வருகிறார். அவரைப் பார்த்தவுடன் மீனா கோபமாக பேச ஆரம்பிக்கிறார். இந்த ஆண்கள் எல்லாம் ஏன் இப்படி இருக்கீங்க? உங்களுக்கெல்லாம் பொறுமையே கிடையாது. இரண்டு நாள் உங்ககூட பேசாம இருந்தா என்ன பண்ணுவீங்க? என்று கேட்கிறார். அதற்கு செந்தில், "மூன்றாவது நாள் பேசுவியா என்று உன் முகத்தையே பார்த்துக்கிட்டு இருப்பேன்" என்று சொல்கிறார்.
இதைக் கேட்ட மீனா, "நடிக்காதீங்க. நான் இரண்டு நாள் பேசலேன்னா மூன்றாவது நாள் வேற ஒருத்தியோட போயிடுவீங்க. அதுதான் ஆண்களின் குணம்" என்று கோபமாக கூறிவிட்டு ஆட்டோவில் ஏறி அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார். ஆனால் என்ன நடந்தது எதற்காக மீனா கோபபபட்டார் என்று தெரியாமல் செந்தில் முழித்துக் கொண்டு இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் மூத்த மருமகள் ரோகிணியை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார்கள் அதற்குப் பிறகு ஸ்ருதி வீட்டை விட்டு போய்விட்டார். இப்போது மீனாவையும் வீட்டை விட்டு அனுப்பி வைத்து விட்டனர். அதேபோல இப்போது இந்த சீரியலிலும் மயில் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்ட பிறகு மீனா செந்தில் மற்றும் கதிர் ராஜி எல்லோருடைய வாழ்க்கையிலும் அடுத்து அடுத்து பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. இதனால் சிறகடிக்க ஆசை சீரியலை போல இங்கேயும் மருமகள்கள் வீட்டைவிட்டு போய்விடுவார்களா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
-
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?














Click it and Unblock the Notifications