Pandian Stores Promo: மீனா பேச்சை கேட்டு கோமதி எடுத்த உருப்படியான முடிவு! இது பலருக்கு பாடம்.. கோபத்தில் பாண்டியன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் 2026 பிப்ரவரி 23ஆம் தேதியில் இருந்து 28ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இதுவரைக்கும் கோமதியின் பாசத்தை சரியாக புரிந்து கொள்ளாத பாண்டியனுக்கு சரியான தண்டனை கிடைத்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

செந்திலின் மிரட்டல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புதான் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே தங்கமயிலுக்கு ஹெல்ப் பண்ண கூடாது என்று மீனாவிடம் செந்தில் சொல்லி இருக்கிறார். நீ அவங்களுக்கு வேலை வாங்கி கொடுத்தால் நான் உன்கூட பேசவே மாட்டேன், அவங்களால நம்ம குடும்பம் ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்கிறது நீ அவங்களை தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்த விஷயத்தை கூட நான் அம்மா அப்பாவிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.
கண்டுகொள்ளாத மீனா
ஆனாலும் மீனா அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் தங்க மயிலுக்கு தனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் ஒரு வயதான பெண்மணியை கவனித்துக் கொள்ளும் வேலையை வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்க ராஜி மற்றும் கதிரின் திருமண விஷயத்தை கோமதி மறைத்து விட்டார் என்று பாண்டியன் வீம்பாக கோபத்தில் இருந்தார்.
பாண்டியனின் கோபம்
கோமதியும் எத்தனையோ முறை அவரிடம் நாடகம் போட்டும் சரி, மன்னிப்பு கேட்டும் கெஞ்சி பார்த்தார் ஆனால் அதற்கு பாண்டியன் பிடி கொடுக்கவே இல்லை. இந்த நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீனா கோமதியிடம் நீங்க அவரிடம் கெஞ்சும் போது அவர் மிஞ்சுவார் ஆனால் நீங்க அவரை கண்டுகொள்ளாமல் அலையவிட்டு பாருங்க அப்புறம் அவராக உங்கள தேடி வருவாரு என்று சொல்லி இருந்தார்.

மீனா கொடுத்த ஐடியா
இதனால் நேற்றைய எபிசோடிலேயே கோமதி எல்லோருக்கும் சாப்பாடு வைத்தார் ஆனால் பாண்டியனுக்கு மட்டும் சாப்பாடு வைத்து கொடுக்கவில்லை. இதனாலேயே பாண்டியன் கோபத்தில் இருந்தார். பிறகு ராஜி சாப்பாடு வைத்து கொடுத்த பிறகும் அதை சாப்பிடாமல் அங்கிருந்து போய்விட்டார். இந்த நிலையில் இப்போது வெளியான ப்ரோமோவிலும் பாண்டியனை கோமதி கண்டுகொள்ளாமல் இருக்க பாண்டியன் தண்ணீர் தண்ணீர் என்று கத்தி பார்க்கிறார்.
கோமதியின் செயல்
அதற்கு கோமதி நக்கலாக தண்ணீர் பாட்டிலிடம் சென்று தண்ணீர் உன்னை தான் இந்த வீட்டு தலைவரு கூப்பிடுறாங்க நீயே போ என்று சொல்ல, அதனால் பாண்டியன் கோபமாகி சாப்பாடை எடுத்து வைக்கிறார். அப்போது குழம்பை தன் மீது ஊற்றி கொள்கிறார். பிறகு அவர் சாப்பிடுவதை பார்த்ததும் கோமதி. நீங்க ஒழுங்கா என்கிட்ட பேசுங்க அப்புறம் நானே உங்களுக்கு வித விதமா சமைச்சு ஊட்டி விடுறேன் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
மீண்டும் வரும் பாக்கியலட்சுமி சீரியல்.. இந்த முறை ஆட்டமே வேற மாதிரி இருக்கு.. ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
இப்போ மீனாவின் பேச்சைக் கேட்டு கோமதி பாண்டியனை தன்வழிக்கு வர வைக்க போகிறார். அதற்கு பிறகு தான் மீனா தங்கமயிலுக்கு செய்த உதவி மொத்த குடும்பத்திற்கு தெரிய வரும். அடுத்ததாக மீனாவிற்கு துரோகி பட்டம் கட்டப் போகிறார்கள். இதனால் இனி ஒரு பஞ்சாயத்து காத்திருக்கிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications