பாண்டியன் ஸ்டோர்ஸ்: பழனி பற்றி தெரிந்த உண்மை! குற்ற உணர்ச்சியில் சரவணன்! அதிர்ச்சியில் பாண்டியன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்போ பெரிய உணர்ச்சிப்பூர்வமான சம்பவம் தான் நடந்திருக்கிறது! பழனி தனியாகக் கடை ஆரம்பிக்கப் போகும் விஷயத்தைத் தன் அக்கா, மாப்பிள்ளைகளிடம் சொல்ல முடியாமல் தவிச்சுக்கிட்டு இருந்த நிலையில், அந்த உண்மையை தாய் காந்திமதி மூலம் அறிந்து, பாண்டியனும் கோமதியும் குற்றவுணர்ச்சியில் உறைந்து போயிட்டாங்க!

பழனியின் குழப்பம்
பழனியின் அண்ணன்கள் தனியாகக் கடை ஆரம்பித்து தருவது பற்றி முடிவெடுத்த நிலையில், அதை எப்படி தன் அக்கா கோமதியிடமும், மாப்பிள்ளை பாண்டியனிடமும் சொல்வதுன்னு பழனி ரொம்பக் குழம்பினார். மாப்பிள்ளைகளிடம் மட்டுமாவது முதலில் சொல்லலான்னு முயற்சி செஞ்சும் அதுக்கு வழி கிடைக்கல.
கடை திறப்பு தேதி
இந்த நிலையில்தான், அண்ணன்கள் பழனியை அழைச்சு, இன்னும் இரண்டே நாளில் கடை திறக்கப் போறதாச் சொல்லி அதிர்ச்சி கொடுத்தாங்க! பழனி குழப்பம் அடைய, தாய் காந்திமதி, "நான் கோமதி, மாப்ள ரெண்டு பேர் கிட்டயும் பேசிக்கிறேன்"னு சொல்றாங்க. ஆனா பழனியோ, "வேண்டாம்மா, நானே நேரம் பார்த்துச் சொல்கிறேன்"னு மறுத்துடுறான்.
தெருவில் தெரிந்த ரகசியம்
பழனியால் சொல்ல முடியாத ரகசியத்தைக் காந்திமதியே பாண்டியனிடமும், கோமதியிடமும் பேச முடிவெடுக்கிறாங்க. காந்திமதி, பாண்டியன், கோமதி இருவரையும் ரோட்டில் வைத்து சந்தித்து பழனிக்கு அவனுடைய அண்ணன்கள் புதிய கடை திறந்து கொடுக்க எடுத்த முடிவைப் பற்றிச் சொல்றாங்க. இதைக் கேட்டுக் கோமதி, பாண்டியன் இருவரும் கடும் அதிர்ச்சி அடையுறாங்க. பாண்டியன் மிகுந்த வருத்தத்துடன், "பழனிக்கு ஏதாவது செய்றதா இருந்தா நாங்களே செஞ்சு இருப்போம்ல! கொஞ்ச நாள் போகட்டும் பண்ணலாம்னு நினைச்சேன்" என்கிறான்.
காந்திமதியின் வேண்டுகோள்
அதற்கு காந்திமதி, "இவ்வளவு நாள் நீங்க பார்த்துக்கிட்டதே பெரிய விஷயம் மாப்பிள்ளை. இதுக்கு மேலேயும் அவனுக்கு ஏதாவது பண்ணுங்கன்னு நான் எப்படி உங்ககிட்ட கேட்க முடியும்? அவனுங்க அண்ணனுங்க தான் கடை திறந்து கொடுக்குறானுங்க. நீங்க மறுப்பு மட்டும் சொல்லாதீங்க" என்கிறார். அதற்குப் பாண்டியன், "பழனிக்கு நல்லது நடந்தால் எனக்குச் சந்தோசம் தான். இதுக்கு நான் ஏன் மறுப்பு சொல்லப் போறேன்?" என்கிறான்.
அக்காவின் வருத்தம்
வீட்டுக்குப் போனதும் கோமதி, பழனி, சுகன்யா இருவரையும் கூப்பிட்டுப் பேசுகிறாள். "உனக்கு ஏதாவது நல்லது நடந்தால் நான் சந்தோசம் தான் படுவேன். அப்புறம் ஏன்டா, அண்ணனுங்க கடை வைச்சு கொடுக்கிறதை பற்றி என்கிட்ட எதுவும் சொல்லலை?" எனக் கேட்கிறாள். இதனால் அதிர்ச்சியான பழனி, "எப்படி இந்த விஷயத்தைச் சொல்றதுன்னு எனக்குத் தெரியலை அக்கா. இது சரியான்னு கூட எனக்குத் தெரியலை" என்கிறான்.
கோமதியின் ஆறுதல்
அதற்கு கோமதி, "எதுவும் தப்பில்லை. நீ உன் வாழ்க்கையில முன்னேறுறது எனக்குச் சந்தோசம் தான். நீ ஏதாவது பண்ணப் போறான்னா நீயே என்கிட்ட வந்து சொல்லுடா. உனக்கு நல்லது நடந்தால் நான் சந்தோஷம் தான் படுவேன்" என்று சொல்லிவிட்டுப் போகிறாள். இதனால் பழனி மிகவும் சங்கடப்படுகிறான்.
இதற்கிடையில், செந்திலும் மீனாவும் இருக்கும் குவார்ட்டஸில் சின்னச் சண்டை வெடிக்குது! மீனா தீபாவளிப் பலகாரம், காலைச் சாப்பாடு எல்லாம் எடுத்துக்கொண்டு வருகிறாள். செந்தில் மதியம் சாப்பாடும் எடுத்துட்டு வந்தியான்னு கேட்க, மீனா, "அத்தை எடுத்துட்டு போகச் சொன்னாங்க. நான்தான் வேணாம்னு சொல்லிட்டேன். ஓட்டலில் சாப்பிட்டுக்கோங்க" என்கிறாள்.
செந்திலின் கோபம்
உடனே அவன், "இப்படி வெளியவே சாப்பிடணும்னா நீ எதுக்கு இருக்க?" என்று கேட்க, மீனா கடுப்பாகிறாள். "நம்ம காதலிச்ச சமயத்துல நம்ம தனிக்குடித்தனம் போவோம். உங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப் போடுறேன் நான் சொன்னது கிடையாது! அதே நேரம் உன்னைப் பெரிய குடும்பத்துக்கு அழைச்சுட்டுப் போறேன் நீங்க சொன்னீங்க. நானும் வேலைக்குப் போறேன். ஏதாவது வேலை நான் பார்க்கும் போது, நீங்க ஏதாவது உதவி பண்ணால் தான் என்னால எதுவும் பண்ண முடியும்" என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விடுகிறாள்.
குற்றவுணர்ச்சியில் சரவணன்
இதனிடையில், சரவணன் மயில் கடையில் இருக்கும்போது பாண்டியன் ஏதோ யோசித்துக்கொண்டிருக்கிறான். அப்போது பழனி கடைக்கு வரவும் அவனை அழைத்து, பாண்டியன் மனம் திறந்து பேசுகிறான். "நீ கடை ஆரம்பிக்கிறதுல எனக்குச் சந்தோசம் தான்டா. உனக்குக் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே நான் ஏதாவது பண்ணி இருக்கணும். நீ எப்பவும் எங்களுக்கு மூத்தப் பையன் தான். நீ வாழ்க்கையில முன்னேறுறது எங்களுக்குப் பெருமைதான்டா" என்கிறான். அப்போது தான் சரவணனுக்கும், பழனி தனிக்கடை ஆரம்பிக்கப் போவது தெரிய வருகிறது.
இப்போது பழனி தனிக்கடை ஆரம்பிக்கும் விஷயத்தில் கோமதி, பாண்டியன், சரவணன் அனைவரும் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகி இருக்கின்றனர். இதைத் தொடர்ந்து நடக்கப்போகும் சம்பவங்களை பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்து வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்!












Click it and Unblock the Notifications