பாண்டியன் ஸ்டோர்ஸ்: வயது விஷயத்தில் உளறி மாட்டும் மயில்! பாண்டியன் கொடுத்த அதிர்ச்சி! கோபத்தில் சரவணன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில், ரோகிணியின் ரகசியத்துக்கு பிறகு, இப்போது தங்கமயில் குறித்த பல ரகசியங்கள் வெளிவர தொடங்கியுள்ளன. மயிலின் படிப்பு குறித்த உண்மை ஏற்கனவே தெரிந்த நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தில் மயில் உளறிய ஒரு வார்த்தையால், சரவணனுக்கு பயங்கரமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது!

கொண்டாட்டத்தில் குமார் போட்ட வெடி
வீட்டில் தீபாவளி பண்டிகைக்கான ஏற்பாடுகள் படு மும்முரமாக நடந்தன. மொத்த குடும்பமும் வீட்டு வாசலில் வெடி வைத்து கொண்டாடினர். அப்போது எதிர் வீட்டில் முத்துவேல் குடும்பமும் வெடி போட, யாரும் பார்க்காத சமயத்தில், காந்திமதி ஓடிப்போய் மகளிடம் பேசி, தீபாவளி வாழ்த்துகள் சொல்லி மகிழ்ச்சி அடைந்தாள்.
இதற்கிடையில், ரோட்டில் வைத்துச் சரவணன் அடித்த நியாபகம் குமாருக்கு வரவும், வேண்டுமென்றே ஒரு வெடியை எடுத்து அவன் மேல் போடுகிறான்!இதனால் கோபமானக் கதிர், செந்தில் இருவரும் கோபப்பட்டு குமாரை அடிக்க வருகின்றனர். சண்டை வெடிக்க ஆரம்பித்த நிலையில், காந்திமதி இடையில் புகுந்து சமாதானம் செய்து வைக்கிறாள்.
பாண்டியன் மீது செந்திலின் வசை
சண்டை சமாதானமான பிறகு, அவரவர்கள் வெடி வைத்து முடித்து வீட்டிற்குள் சென்றனர். கதிர், சரவணன், செந்தில், பழனி நான்கு பேரும் வாசலில் உட்கார்ந்து பழைய தீபாவளியன்று நடந்த விஷயங்களை பற்றி பேசிக் கொண்டு இருக்கின்றனர். அப்போது வழக்கம் போல செந்தில், பாண்டியனை கேப் கிடைக்கும் போதெல்லாம் குத்திக் காண்பித்து ஏதாவது பேசுகிறான்.
சரவணன் எதிர்ப்பு
இதனால் கடுப்பான சரவணன், "ஏன்டா அப்பாவை பற்றி நல்ல விஷயம் சொல்ல எதுவுமே இல்லையா?" என்று கேட்கிறான். அதற்கு செந்தில், "ஏதாவது இருந்தால் சொல்ல மாட்டேனா அண்ணா? நடந்த விஷயங்களை தான பேசுறேன்" என்றுச் சொல்லி சரவணனை மேலும் கடுப்பேற்றுகிறான்.
ரகசியம் உடைந்தது
இந்த சலசலப்பு ஒருபக்கம் இருக்க, கிச்சனில் அனைவரும் வேலை பார்த்துக் கொண்டேக் கதை பேசுகின்றனர். அப்போதுதான் யாரும் எதிர்பாராத விதமாகத் தங்கமயில் வசமாகச் சிக்கினார். ராஜி ஒவ்வொரு தீபாவளிக்கும் குடும்பத்தோடு படத்துக்கு போவது பற்றி சொல்கிறாள். உடனே, மயிலிடம் "நீங்க படத்துக்குப் போவீங்களா அண்ணி?" என்று அரசி கேட்கிறாள்.
மயிலின் உளறல்
சரியாக சரவணன் தண்ணீர் கொடுப்பதற்காகக் கிச்சனுக்கு வரும்போது, மயில், 2010ல நான் பத்தாவது படிக்கும்போது ஒரேயொரு படத்துக்கு போயிருக்கேன்" என்கிறாள். உடனே ராஜி, "என்னக்கா சொல்றீங்க? 2010ல பத்தாவது படிச்சா, உங்களுக்கு முப்பது வயசா?" என்று சரியாக கணக்குப் போட்டுவிட்டு கேட்கிறாள்.
சரவணனுக்கு சந்தேகம்
ராஜி வைத்த கணக்கைக் கேட்டு மயில் அதிர்ச்சியாக, கோமதி கூட "சரவணனுக்குக் கூட அந்த வயசு இல்லையேடி" என்கிறாள். இதையெல்லாம் சரவணனும் நின்று கேட்டுக் கொண்டிருக்கிறான். மயில் வசமாகச் சிக்கிய நிலையில், "எனக்கு முப்பது வயசெல்லாம் கிடையாது" என்றுச் சொல்லி ஏதேதோ உளறிச் சமாளிக்கிறாள். அவள் சொல்வதை மற்ற அனைவரும் நம்பினாலும், சரவணனுக்கு பயங்கரமானச் சந்தேகம் வருகிறது. "இவள் ரொம்ப பதட்டப்படுறா. ஏதாவது பொய் பேசும் போதுதான் இந்த மாதிரிப் பதட்டம் அடைவாள்" எனச் சரியாகக் கண்டுபிடிக்கிறான். ஆனால், உடனடியாக அது பற்றி எதுவும் கேட்காமல், அப்படியே மனதிற்குள்ளே வைத்துக் கொள்கிறான்.
பாண்டியன் செய்த பாரபட்சம்
மறுநாள் காலையில் நான்கு மணிக்கெல்லாம் கோமதி எழுந்துவிட்டு, வீட்டில் உள்ள அனைவரையும் எழுப்பி விடுகிறாள். அனைவரும் குளித்துவிட்டு வந்து சாமி கும்பிடுகின்றனர். அப்போதுப் பழனி, சுகன்யா இருவருக்கும் முதலில் புதுத்துணி கொடுத்து பாண்டியன், கோமதி ஆசிர்வாதம் வழங்குகின்றனர். அதனைத் தொடர்ந்து சரவணன், கோமதி பின்னர் செந்தில், மீனா இருவரும் வருகிறார்கள்.
பாரபட்சம்
அப்போது, மீனா பெயரை சொல்லி மட்டும் பாண்டியன் ஆசிர்வாதம் வழங்குகிறான்! இதனால் செந்தில் அப்செட் அடைய, "ரெண்டு பேரும் நல்லா இருப்பீங்க" என்கிறாள் கோமதி. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. மயிலின் வயது மற்றும் படிப்பு குறித்த உண்மைகளைச் சரவணன் இப்போது கண்டுபிடித்து விடுவானா? அல்லது இந்தச் சந்தேகம் மீண்டும் ஒத்தி வைக்கப்படுமா? என்பதை நாளைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோடில் பார்க்கலாம்.
-
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?











Click it and Unblock the Notifications