பாண்டியன் ஸ்டோர்: கையும் களவுமா சிக்கிய மயில்! விரட்டிய கோமதி! பாண்டியன் எடுக்கும் முடிவு?
சென்னை : 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' வீட்டுல இப்போ குடும்ப பிரச்சனையை விட, ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட பிரச்சனை தான் ஜாஸ்தி! தீபாவளி நாளில் செந்தில் மாமனார் வீட்டு கூப்பிட்டுப் போறதுக்காக கஷ்டப்பட்ட கதை ஒரு பக்கம்னா, சரவணன் போட்ட ஒரு பிளானால மயில் கையும் களவுமா சிக்கி முழிச்சது தான் இன்றைய எபிசோட்ல பெரிய சண்டைக் களம்!வாங்க... யார் யாருக்கு என்னென்ன ஆச்சுன்னுபார்க்கலாம்.

அப்செட்டில் செந்தில்
மீனாவை தன் அப்பா வீட்டுக்கு தீபாவளி விருந்துக்குக் கூட்டிட்டு வந்ததில செந்தில் ஏற்கனவே அப்செட்டில் இருக்கான். இந்தச் சமயத்துல செந்தில் மாமனார் போன் பண்ணி, "உங்களை விருந்துக்கு வரச் சொன்னா, வரலை ஏன்?"ன்னு கேட்கிறார். அதுக்கு செந்தில், "அப்பா எல்லாரும் சேர்ந்து இருக்கலாம்னு சொல்லிட்டாரு"ன்னு சமாளிக்க ட்ரை பண்றான்.
அப்பா சொன்ன காரணம்
ஆனா, மீனாவோட அப்பா, "நாங்களும் தனியாதான் இருக்கோம். எங்களுக்கும் உங்களோட இருக்க ஆசை இருக்காதா?"ன்னு எமோஷனலாப் பேச, செந்திலுக்குத் தொண்டைய அடைச்சுப் போச்சு!. "இப்பவே மீனாவைக் கூட்டிட்டு வர்றேன்"னு சொல்லிட்டு, உள்ளே வந்து பார்த்தா, மீனா கோமதி, ராஜி, அரசி கூடப் படுத்துத் தூங்கிக்கிட்டு இருக்கா! செந்தில் எழுப்ப போக, கோமதி, "பாவம்டா அவள் இப்போதான் ரெஸ்ட் எடுக்கிறாள். அவள் தூங்கட்டும் போடா!"**ன்னுத் திட்டிக் கிளப்பி விட்டுடுறாங்க!
புலம்பல்
அதனால செந்தில் மட்டும் மாமனார் வீட்டுக்கு வர, "குவார்ட்டர்ஸ் வந்ததுல இருந்து ஒரே சண்டையா இருக்கு மாமா. மீனா என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்குறா"ன்னுப் புலம்பி கொண்டு இருக்கார்.
பழனிக்குக் கடை
இன்னொரு பக்கம், பழனியை தீபாவளி அன்னைக்கும் பாண்டியன் வேலைக்கு அனுப்பி விட்டதால சுகன்யா கடுமையா அப்செட்டில் இருக்கா!. பழனி வீட்டுக்கு வந்ததும், "நான் வரலை. இதுக்கு மேலப் போனால் அங்க என் வீட்டு ஆளுங்க எல்லாரும் தூங்கி இருப்பாங்க"ன்னு சுகன்யா கோபமாப் பேசுறா. அப்போதான் முத்துவேல் ஒரு பாம் போட்டிருக்கார்! "ரெண்டே நாள்ல பழனிக்கு **புதுக்கடை திறக்கப் போறோம்!"ன்னு சொல்லி இருக்கார்!
பழனி அதிர்ச்சி
இதைக் கேட்டு பழனி பயங்கரமா அதிர்ச்சி ஆகி, "இன்னும் மச்சான்கிட்ட (பாண்டியன்கிட்ட) பேசலை"ன்னு முழிக்கிறான். ஆனா, காந்திமதி, "உனக்குக் கல்யாணம் ஆகிருச்சு. தனிச் சம்பாத்தியம் வேணும். நான் அவங்ககிட்டப் பேசிக்கிறேன்"னு பழனிக்கு அட்வைஸ் கொடுத்து இருக்காங்க! (முத்துவும் சக்திவேலும் பழனியைத் தனி ஆளாக்க முடிவெடுத்து, பாண்டியன்ட்ட எப்படிப் பேசுறதுன்னுத் தெரியாம பழனி தவிக்கிறதுதான் இன்றைய பரபரப்பு)
கையும் களவுமா சிக்கிய மயில்
எபிசோடின் உச்சகட்ட பரபரப்புன்னா அது இதுதான்பா! மயிலோட வயசு மேல சரவணனுக்குச் சந்தேகம் வந்து, அவளோட ஆதார் கார்டைக் கேட்டு நச்சரிச்சான்ல. இப்போ ஒருப் பெரிய ஐடியாவோட வந்திருக்கான்!.நைட் எல்லாரும் சாப்பிட வரும்போது, சரவணன் ஒருப் பிளானை ஆரம்பிக்கிறான்! எல்லாரையும் கூப்பிட்டு, "மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க என் ஃப்ரெண்ட் சொன்னான். நம்ம ஆதார் கார்டு எல்லாம் கொடுங்க. நான் ஆபிஸ்ல போய்ப் பதிஞ்சுடுறேன்"ன்னு சொல்லி இருக்கான்!
இதைச் சற்றும் எதிர்பார்க்காத மயில், பயங்கர அதிர்ச்சி ஆகுறா! எல்லாரும் அவங்க அவங்க ஆதார் கார்டைக் கொடுக்க, மயிலிடமும் சரவணன் கேட்கிறான்!. மயில் வழக்கம் போல, ஏதேதோச் சொல்லிச் சமாளிக்க பார்க்க, சரவணன் விடுவானா? "எல்லாரும் கொடுத்துட்டாங்க மயில். நீயும் போய்த் எடுத்துட்டு வா"ன்னு எல்லார் முன்னாடியும் சொல்லி சிக்க வச்சிட்டான்!
இப்போ மயில் கண்டிப்பா மாட்டிக்கிட்டான்னுதான் சொல்லணும்! படிப்புக்கு பொய் சொன்னவள், வயசுக்கும் பொய் சொல்லியிருக்கான்னுத் தெரிஞ்சா சரவணன் என்ன பண்ணுவான்? இந்த பிரச்சனையை மயில் எப்படிச் சமாளிக்க போறான்னுப் பார்க்க, நாளை வரைக்கும் வெயிட் பண்ணுவோம்!












Click it and Unblock the Notifications