பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: அஞ்சலி பற்றி பாண்டியன் கேட்ட கேள்வி! சரவணன் சொன்ன விஷயம்! மீனா கண்டுபிடித்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 மார்ச் 28ஆம் தேதிக்கான எபிசோடில், பாண்டியன் சரவணனிடம் அஞ்சலி பற்றி கேள்விகளை கேட்க அதற்கு சரவணன் எதிர்பார்க்காத பதிலை சொல்லி இருக்கிறார்கள் இனி பாண்டியன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், பாண்டியனும் சரவணனும் கடையை அடைத்து விட்டு இரவு பேசிக்கொண்டே வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது பாண்டியன், "இன்னைக்கு நீ கோவிலுக்கு போய் ஒரு பொண்ணுகூட பேசிக்கிட்டிருந்ததை நானும் பார்த்தேன்" என்று சொல்கிறார்.
அந்தப் பொண்ணு யார்? மயில் வீட்டில் இருந்து வந்து சண்டை போட்ட போது சொன்னாங்களே அதே பெண்ணு தானா என்று கேட்கிறார். இப்போ தான் ஒரு பொண்ணுடன் உனக்கு டைவர்ஸ் ஆகப் போகுது, அதற்குள் இன்னொரு பொண்ணுடன் பேசுவது சரியில்லை என்று சரவணனுக்கு அறிவுரை கூறுகிறார்.
சரவணன் சொன்ன விஷயம்
அதற்கு சரவணன், "நாங்க தப்பா எதுவும் பேசல. அந்தப் பொண்ணும் என்ன மாதிரி டைவர்ஸ் ஆகி, அவங்க அப்பா அம்மா வீட்டில தான் இருக்கிறாங்க. அதனால ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலாக பேசிக்கறோம், அதுதான். எங்களுக்குள்ள எந்தத் தவறான எண்ணமும் இல்லை" என்று விளக்கம் கொடுக்கிறார்.
ஆனாலும் விடாமல் பாண்டியன் கதிரிடம் நீ காலேஜ் படிக்கும் போது ஒரு பொண்ணை லவ் பண்ணுனேன்னு சொன்னியே.. நான் கூட அவங்களுக்கு குடும்பம் எதுவும் இல்லை என்று வேண்டாம்னு சொன்னேனே அந்த பொண்ணு தானே இது என்று கேட்க, அதற்கு சரவணன் ஆமாம், ஆனால் நான் பழைய மாதிரி எந்த ஒரு ஃபீலிங்கிலும் அவளை தேடி போய் பேசல எதார்த்தமா தான் கோவிலில் சந்தித்து பேசினோம் என்று சொல்கிறார்.
மீனாவிடம் சிக்கிய செந்தில்
அடுத்ததாக செந்தில் மாமனாரின் பேச்சைக் கேட்டு அவர் லஞ்சம் வாங்க ஆரம்பித்திருக்கிறார். அப்படி வாங்கிய லஞ்சப் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்து, பீரோவை திறந்து வைக்க முயற்சிக்கிறார். அப்போது மீனா அங்கு வருகிறார். பதட்டத்தில் செந்திலின் கையிலிருந்த பணம் கீழே கட்டுக்கட்டாக விழுகிறது. அதை பார்த்த மீனா, "இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?" என்று கேட்கிறார். அதற்கு செந்தில், "அப்பாவுக்கு கொடுக்க நான் சேமித்து வைத்த பணம் இது, பேங்கில் இருந்து எடுத்தேன்" என்று பொய் சொல்லி மழுப்புகிறார். இருந்தாலும் மீனாவுக்கு சந்தேகம் குறையவில்லை.
ராஜி செய்த செயல்
மறுபுறம் கோமதி வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். அப்போது ராஜி மட்டும் டயட்டில் இருப்பதால் சாப்பாடு சாப்பிடாமல், வெள்ளரிக்காய் மற்றும் அவித்த முட்டை போன்றவற்றை சாப்பிட்டு கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த காந்திமதி, "இதெல்லாம் என்ன சாப்பாடு?" என்று கேட்கிறார். அதற்கு ராஜி, "நான் குண்டாக இருக்கிறேன்னு ஒருத்தன் சொன்னான், அதனால தான் உடம்பை குறைக்க டயட் பண்ணுறேன்" என்று சொல்கிறார்.
உடனே "யாரு அவன்?" என்று காந்திமதி கேட்கிறார். அரசி, "காலேஜ்ல யாராவது சொல்லியிருப்பாங்க" என்று சொல்கிறார். காந்திமதி, "யாருன்னு மட்டும் சொல்லு, நான் பாத்துக்கறேன்" என்று கோபமாக பேசுகிறார். ஆனால் அந்த ஆள் கதிர் தான் என்று ராஜி சொல்லாமல் மறைக்கிறார். அப்போது கதிர், "ஒருவேளை இவ ஸ்லிம் ஆகணும்னு நான் டிப்ஸ் கொடுத்திருப்பேன்" என்று சமாளிக்கிறார்.
கடைசியாக, பாண்டியன் தன்னுடைய துணிகளை தானே துவைக்கிறார். ஆனால் எந்த துணியிலும் அழுக்கு போகவில்லை. அப்போது அங்கு வரும் கோமதி, அந்த துணிகளை வாங்கி துவைத்து காயவைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications