பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையில் திடீர் மாற்றம்.. இனி நடக்கப்போவது இதுதானா? லீக்கான தகவல்
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலுக்கு குமாரவேலை மீனா தலையில் அடித்ததால் அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கிறார். இந்த விஷயத்தை மீனா செந்திலிடமும், ராஜி கதிரிடமும் சொல்லி இருக்கிறார். இதனால் எதிர்பாராத சம்பவம் நடைபெற இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. அரசி குமார வேலை காதலிக்கும் விஷயம் குடும்பத்திற்கு தெரிய வந்தது யாரும் எதிர் பார்க்காத விஷயமாக இருந்தது. அதற்கு பிறகு பல சென்டிமென்ட் டிராமாக்கள் நடந்தது. இப்போது அரசிக்கு திருமலை ஏற்பாடுகள் நடக்கிறது இந்த நேரத்தில் அரசியை கூட்டிக்கொண்டு கோமதி கோவிலுக்கு வந்திருக்கிறார்.

கோமதி போட்ட பிளான்
கோவிலுக்கு வந்த இடத்தில் ராஜி காம்படிஷனில் கலந்து கொண்டிருந்தார். அதில் இரண்டாவது பரிசான பைக்கை வென்று கதிருக்கு கொடுக்க வேண்டும், அவர் ஃபுட் டெலிவரி செய்வதற்கு அது யூஸ் ஆக இருக்கும் என்று ராஜி முடிவு எடுத்திருந்தார். இதனால் கோமதி பேச்சைக் கேட்காமல் ராஜி டான்ஸ் போட்டியில் கலந்து கொண்டார். இப்போது இறுதி போட்டிக்கு தேர்வாகி இருக்கிறார். அதே நேரத்தில் அரசியிடம் அவர்களுக்கு நிச்சயம் செய்திருக்கும் மாப்பிள்ளை உனக்கு விருப்பப்பட்டால் திருமணத்தை இன்னும் கொஞ்ச நாள் தள்ளி வைத்துக் கொள்ளலாம், இரண்டு வருஷம் என்றாலும் கூட பரவாயில்லை நான் காத்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
குமாரவேல் வருகை
இப்படியான நிலையில் அரசியை தேடி குமாரவேல் வந்திருக்கிறார். அப்போது அரசியிடம் அவர் பேசப்போகும் போது அரசி கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய அவரை தடுப்பதற்காக குமாரவேல் முயற்சி செய்திருந்தார். அந்த நேரத்தில் கோமதி, ராஜி, மீனா எல்லோருமே அந்த இடத்திற்கு வந்து விட்டனர். அப்போது நடந்த வாக்குவாதம் மற்றும் பிரச்சனையில் மீனா குமாரவேல் தலையில் தோசைக்கல்லை தூக்கி அடிக்க அவர் மூச்சு பேச்சு இல்லாமல் விழுந்து கிடக்கிறார்.
கதறி அழுத மீனா
இதனால் அவர் இறந்துவிட்டார் என்று கருதி மீனா போலீசுக்கு போன் செய்து நான் தான் இந்த கொலையை செய்தேன் என்று ஒத்துக்கொள்ள போகிறேன் என்று சொல்ல, கோமதி தடுத்து நிறுத்தி இருக்கிறார். மீனா நான் இதுவரைக்கும் ஒரு கரப்பான் பூச்சியை கூட கொல்றதுக்கு ஆயிரம் முறை யோசிப்பேன் ஆனால் இப்போ இப்படி என் கையால் ஒரு கொலை பண்ணிட்டேன் என்று கதறி அழுது கொண்டிருக்கிறார்.
கோமதியின் அழுகை
கோமதி தன்னுடைய அண்ணன் மகனை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். ராஜி தன்னுடைய சொந்த அண்ணன் நிலைமை இப்படி ஆகிவிட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் ராஜி கதிருக்கு போன் செய்து நடந்த விஷயத்தை சொன்னதும் கதிர் பெரிதாக ரியாக்ஷன் காட்டாமல் நான் அங்கு வரேன் என்று சொல்கிறார். அதுபோல மீனா செந்திலுக்கு போன் செய்து நடந்ததை சொல்கிறார்.

அடுத்து நடப்பது இதுதான்
செந்தில் முதலில் நம்பவில்லை என்றாலும் பிறகு நான் கிளம்பி வரேன் என்று சொல்லி இருக்கிறார். இதனால் இந்த கொலை பழியை பாண்டியன் மகன்கள் தான் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரிகிறது. ஏற்கனவே தியாக செம்மலாக இருக்கும் கதிர் வழக்கம் போல இந்த கொலையை நான் செய்தேன் என்று போலீசில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அரசிக்கு அவசரமாக திருமண ஏற்பாடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சந்தேகம்
அரசி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார். அதுபோல திருமணத்திற்கு முந்தைய சில புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார். இதனால் அடுத்து இந்த சீரியலில் திருமண காட்சிகள் தான் வரப்போகிறது. ஆனால் குமாரவேல் இறந்திருப்பாரா என்பதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
குமாரவேலின் நிலைமை
குமாரவேல் இப்போதைக்கு இறப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று தான் தெரிகிறது. குமாரவேல் இறந்தால் கதையில் பெரிய மாற்றம் ஏற்படும். அதனால் அவர் இறப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஒருவேளை மீனாவின் வேலையை காலி செய்ய வேண்டும் என்பதற்காக குமாரவேலின் அப்பா முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் குமாரவேல் மறைந்து இருந்து மீனாவை மிரட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த சீரியலில் குமாரவேல் இறந்து இருப்பார் என்று நினைக்கிறீர்களா? அல்லது நடிக்கிறார் என்று நினைக்கிறீர்களா பாஸ்?
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications